மோகம் -22

 



மோகம் - 22:

விக்கி ராணி தம்பதியருக்கு தனுஷா என்ற மகள் இருந்தாள்.



இந்த இரண்டு வருடங்களில் மித்ரநந்தன் லண்டனில் இருந்து தன் தாய் நாட்டிற்கு வந்து தங்கள் பிஸ்னஸில் பாதியை அவன் தான் பார்த்துக் கொள்கிறான்.



வான்மதி தன் படிப்பை முடித்ததும் மது மித்ரனிடம் சொன்னாள்.



இப்பொழுது வான்மதி மித்ரநந்தன் பொறுப்பேற்று நடத்தும் கம்பெனியில்தான் வேலை பார்க்கிறாள்.



மித்ரன் வீட்டில்தான் தங்கி வேலைக்கு செல்கிறாள்.



அன்று மித்ரநந்தன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தான். அப்பொழுது ஹாலில் அமர்ந்து வான்மதி வேந்தனைக் கொஞ்சிக்கொண்டிருந்தாள்.அப்பொழுது இவன் வருவதைப் பார்த்து டிவியில் டோரா புஜ்ஜி ஓடிக்கொண்டிருந்தது.



அதைப் பார்த்து சொல்வதுபோல் "வேந்து கண்ணா குரங்கு பாருடா குரங்க வந்துருச்சு" என்று வேண்டுமென்றே சத்தமாக சொன்னாள்.



அவளை முறைத்தவன் "இருடி வீட்டுக்கு வந்தா தைரியம் வந்துருமா.. உனக்கு இருக்கு" என்று மனதுள் கருவியவன் தன் அறைக்கு வேகமாக சென்றான்.



சிறிது நேரம் கழித்து வான்மதி வேந்தனை தூக்கிக்கொண்டு தன் அறைக்குள் சென்றாள்.



அப்பொழுது யாரோ குதிப்பதுபோல் தொப்பென்று சத்தம் கேட்கவும் பயப்படாமல் இது தனக்கு பழகிய விஷயம் என்பதால் மெதுவாகவே திரும்பினாள்.



நந்தன்தான் பால்கனி வழியாக இவள் அறைக்கு வந்திருந்தான்.



அப்பொழுதும் வேந்தனிடம் "குரங்கு வந்துருச்சுடா" என்று சொன்னதும் "ஏய் நான் உனக்கு குரங்காடி" என்று கேட்கவும் "ஆமாம் குரங்கு தான் வால் இல்லா குரங்கு... இப்படி பால்கனி விட்டு பால்கனி தாவி குதிக்கிற நீ குரங்கு தான் டா "என்று சொன்னாள்.



இவர்கள் சண்டை சுவாரஸ்யமாக இருந்ததுவோ சின்னவன் இவர்களை மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான்.



"ஆபிஸ்ல அப்படியே பம்முற இங்க வந்தா மட்டும் தைரியம் வந்துடுச்சா" என்று நக்கலாக வினவவும் "ஆமாம் டா இப்போ அதுக்கு என்ன" என்றவளை முறைத்தவன் அவள் கையில் இருந்த வேந்தனுக்கு குட்ரைட்டா செல்லக்குட்டி என்று கன்னத்தில் முத்தமிடும் போது இவள் முகத்தை திருப்பவும் அதைப் பார்த்து உடனே அவளை இழுத்துக் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தான்.



அந்த அதிர்ச்சியில் வாயை ஆவென பிளக்க அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவள் இதழைச் சிறைசெய்தான்.



இதை கண்ட வேந்தன் இருவர் தலையோடு தன் தலையை முட்டினான்



(இந்த கேடி குட்டி அவங்க அப்பாக்கு மட்டும்தான் வில்லன் போல)



ஆனால் அந்த கேடிக்கே மித்ரன் தகப்பன் இல்லையா அந்த கேடி விட்டு வைத்த மிச்சத்தை இந்த கேடி பால் குடத்தில் முட்டி முட்டி குடத்தைக்காலி பண்ணிக் கொண்டிருந்தான்.



மோகங்கள் என்றென்றும் தொடரும்….



No comments