காதல் -20

 



காதல்-20:


ஜோசெப்பிடம் அனைத்தையும் கூறிய ஷைலஜா 'அடுத்து என்ன செய்யலாம்' என்று கேட்டாள்.


"அடுத்து என்ன ராமை எங்கயாவது கண் காணாத இடத்துல விட்டுட்டு வந்துரலாம்" என்று குண்டை தூக்கி போட மறுபக்கம் இருந்தவள் அதிர்ந்தாள்.


"நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன் ஜோசப்.. அவன் சின்ன பையன் அவனுக்கு ஒன்னும் தெரியாது.. என் பிள்ளையை என்னால் விட முடியாது" என்கவும் "அப்போ நாம நினைக்குறதும் நடக்காது பேபி"


"ஏன் நடக்காது?"


"ஆமா நடக்காது.. ராம் நம்ம கூட இருக்குற வரையில் நாம நினைக்குறது நடக்காது"


"ஏன் அப்படி சொல்ற? வேற வழி இல்லையா" என்கவும் "வேற வழி இல்லை.. அதுமட்டுமில்லாம நம்ம கேரளாவில் இந்த பிளானை செய்ய முடியாது."


" ஏன் கேரளாவில் இதை செய்ய முடியாது"


"ஹேய் பேபி.. இப்போதான் டிவி, செய்தித்தாளில் எல்லாம் ஒளிபரப்பாகி இருக்கு.. இப்போ நாம தொடங்கினால் ஈஸியா கண்டு பிடுச்சிடுவாங்க.. அதான்"


"அப்போ நாம இப்போ இந்த பிளானை செய்ய முடியாதா"


"நாம தமிழ்நாட்டுக்கு போயிடலாம்.. அங்க நம்மள கண்டு பிடிக்க முடியாது. இந்த மிட் ப்ரைன் ஆக்டிவேஷன் பற்றி யாருக்கும் தெரியாது.. கொஞ்ச நாள் அங்க நல்லா சம்பாதிச்சு வேற ஊருக்கு போயிடலாம்."


"நாம நல்லா வாழனும்னா இது தான் ஒரே வழி.. இதை விட்டால் வேற வழியில்லை பேபி புரிஞ்சுக்கோ.. நாம நல்லா சொகுசான வாழ்க்கை வாழனும்னா அதுக்கு பணம் வேணும்."


"பணம் சம்பாதிக்க இது தான் ஈஸியான வழி" என்கவும் "இதுக்கும் ராமை எங்கயாவது விடுறதுக்கு என்ன சம்மந்தம்?" என்று வினவ "ராம் நம்ம கூட இருந்தால் கண்டிப்பா நாம என்ன செய்யிறோம்னு வாட்ச் பண்ணுவான்".


"நாம பண்றது மட்டும் ஒருவேளை அவனுக்கு தெரிஞ்சு போச்சுன்னா அவனே போலீசை கூட்டிட்டு வருவான்.. அப்பறம் நாம எல்லாம் ஜெயிலில் போய் களி தான் திங்கணும்.. எப்படி வசதி?" என்று பயமுறுத்த ஒருவாறு சரியென்று ஒத்து கொண்டாள்.


அவளுக்கு பிள்ளையை விட பணம் பெரிதென்று தோன்றியதோ என்னவோ எந்த தாயும் செய்யாத ஒரு செயலை செய்ய ஒத்துக்கொண்டு இந்த முடிவை எடுத்து விட்டாள்.


பின் நால்வரும் சென்னைக்கு சென்று புது வீடு எடுத்து தங்கினர்.


"ஏன் ம்மா அங்க இருந்து இங்க வந்துட்டோம்..? அங்கேயே இருந்துருக்கலாம்.. என் பிரின்ட்ஸ் எல்லாரும் அங்க தான் இருக்காங்க.." என்று வருத்தத்துடன் கூறினான்.


"எனக்கு அங்க இருந்தா நம்ம அப்பா நியாபகம் வந்துட்டே இருக்கு ராம்.. அதான்" என்று நீலி கண்ணீர் வடித்தாள்.


அவள் அழுவதை தாங்க முடியாமல் "நீ ஏன் ம்மா அழர? அழாத ம்மா.. நான் இருக்கேன், தம்பி இருக்கான், கவலைப்படாத ம்மா. நாங்க பெரிய படிப்பு படிச்சு உன்னை நல்லா பார்த்துக்கிறோம்" என்று அச்சிறுவயதில் தன் தாயின் கண்ணீர் உண்மையென்று நம்பி ஆறுதல் கூறினான்.


ஆனால் அவனுக்கு அப்பொழுது தெரியவில்லை அந்த தாயே அவனை தினம் தினம் அழ வைக்க போகிறாள் என்று.


ராம் ஜாடையில் ஷைலஜா போல் இருந்தாலும் அப்படியே குருவின் குணம்..


தன் தாய் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் வந்தாலும் துடித்து போய் விடுவான்.


"ம்மா.. அந்த ஆளு ஏன் ம்மா நம்ம கூட தங்கி இருக்காரு..? அவரை முதல்ல இங்கிருந்து போக சொல்லும்மா.. அவரை கண்டாலே எனக்கு பிடிக்கல" என்று தன் கூற்றை கூற தான் எடுத்த முடிவில் ஷைலஜா உறுதியாக நின்றாள்.


அன்று பிரதோஷம்..


"வாங்க நாம கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வரலாம்" என்று மூவரையும் அழைத்து சென்ற ஜோசப் "எனக்கு வெளியே அவசரமா ஒரு வேலை இருக்கு.. நான் போய் அதை பார்த்துட்டு வரேன்" என்று அவர்களை கோவிலில் இறக்கி விட்டு சென்றுவிட்டான்.


அன்று பிரதோஷம் என்றதும் கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது.


இரு கையிலும் பிள்ளைகளை பிடித்து கொண்டவள் கோவிலுக்குள் செல்ல.. நல்ல கூட்டமான இடத்தில் போய் நின்று கொண்டு "ரெண்டு பேரும் சாமி கும்பிடுங்கப்பா" என்றவள்.


தானும் சாமியை வேண்டுவது போல் கண்களை மூடி கொண்டு நின்றாள்.


ராம் கண்ணை மூடியிருப்பதை கண்டவள் ஜெய்யின் கையை பிடித்து கொண்டு அங்கிருந்து நகர தொடங்கினாள்.


போய்விட்டாள்..


பெற்ற பிள்ளையை அனாதையாக அம்போவென்று விட்டுவிட்டு இரக்கமே இல்லாமல் சென்று விட்டாள்.


ராமின் வாழ்க்கையில் அப்பொழுது ஆரம்பித்தது விதியின் விளையாட்டு.


சாமியை வணங்கி விட்டு கண்களை திறக்க தன் அன்னையை காணவில்லை.


தன் தம்பியையும் காணவில்லை.


"அம்மா.. அம்மா.." என்று கத்தியவன் அந்த கூட்டத்தில் இருந்து வெளியே வந்து அங்கும் இங்கும் தேடினான்.


கோவில் முழுக்க தேடியும் அவர்களை கண்டு கொள்ள முடியாமல் தவித்தான்.


முன் பின் தெரியாத ஊரில் வந்து சிக்கி கொண்டு அவர்கள் எங்கு போனார்கள் என்று தெரியாமல் நொறுங்கி போய்விட்டான்.


அழுது கொண்டே ரோட்டில் நடந்து வந்தவன் இந்த பக்கமும் அந்த பக்கமும் தேடினான்..


அவள்தான் எப்பொழுதோ கிளம்பி விட்டிருந்தாளே..


அழுது கொண்டே வந்து கொண்டிருந்தவன் தாங்கள் வந்த ஜீப்பை பார்த்தவன் அருகில் நெருங்க அங்கு பேசிக்கொண்டிருந்ததை கேட்டு அதிர்ந்து அப்படியே சிலையாக நின்றுவிட்டான்.


அங்கு ஜோசப் தான் நின்று பேசிக்கொண்டிருந்தான்.


"என்ன பேபி.. அவனை கோவிலில் விட்டுட்டு வந்துட்டியா..?"


"ஹிம்ம் விட்டுட்டு வந்துட்டேன்.."


"ஜெய்?"


"அவன் என்கூட தான் இருக்கான்.."


"சரி சரி அவன் நம்ம பிளானுக்கு தேவை அவன் இருக்கட்டும்.."


"ஹிம்ம் ஓகே ஜோசப்"


"சாப்பிட கடையில் வாங்கிட்டு வரவா?"


"ஹிம்ம்.. வாங்கிட்டு வந்துடு"


"ஹே பேபி உண்மையா அவனை விட்டுட்டு வந்துட்ட தானே.. பிள்ளைன்னு கூடவே கூட்டிட்டு வந்துட்டியா.."


"இல்ல ஜோசப்.. அவன் கண்மூடி வேண்டிட்டு இருக்கும் போது நான் இவனை கூட்டிட்டு வந்துட்டேன்" என்ற தன் தாயின் குரலை கேட்டு அதிர்ந்தான்.


ஜோசப் அங்கிருந்த ரோட்டு கடையில் சாப்பிட்டு கொண்டிருக்க போனை ஸ்பீக்கரில் போட்டு பேசிக்கொண்டிருக்க ஷைலஜா பேசியது அனைத்தும் ராமின் காதுகளில் விழுந்தது.


'அப்போ அம்மா என்னை வேணும்னே தான் கோவிலில் விட்டுட்டு வந்துட்டங்களா' என்ற உண்மை கொடுத்த அதிர்ச்சியில் உறைந்து போனான்.


ஜோசப் அதற்குள் கிளம்பி விட்டிருந்தான்.


ராமுக்கு இங்கு தங்கியிருந்த வீட்டின் முகவரி கூட தெரியாது..


எங்கு போக என்று தெரியவில்லை.


அதன்பிறகு அவன் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் சொல்லில் வடிக்க முடியாது.


இரண்டு நாட்களாக பகலில் தேடி கொண்டு இரவில் ரோட்டோரத்தில் படுத்து கொள்வான்.


கொசு கடியில் தூக்கமும் வரவில்லை.


இரண்டு நாளாக சாப்பிடவும் இல்லை.. ஹோட்டல் கடைகளில் சமைக்கும் வாசனை மூக்கை துளைக்கும்..


பசி வயிற்றை கிள்ளும்.. 


தான் போய் கேட்டால் திட்டுவார்களோ அடிப்பார்களோ என்று பயந்தவன் அமைதியாக பார்த்து கொண்டிருப்பான்.


அன்றும் அது போல பார்த்து கொண்டிருக்க ஒரு பாட்டி இட்லி சூட்டு விட்டுக்கொண்டிருந்தார்..


இவன் அங்கு சாப்பிட்டு கொண்டிருந்தோரை பார்ப்பதை கண்டு அவனை அழைத்தார்.


வா தம்பி இட்லி சாப்பிடுறியா


இவன் தலையாட்டவும் தட்டில் நான்கு இட்லியை போட்டு கொடுத்தவர் வியாபாரத்தை கவனித்தார்.


இவன் பசியில் சாப்பிட்டுவிட்டு பின்பு தான் கொடுக்க காசில்லை என்று யோசித்தவன் அந்த பாட்டியை பார்க்கவும் பாவமா தான் இருக்கு ..


இப்போ என்ன பண்றது என்று யோசுத்தவன் அவரிடமே பாட்டி என்கிட்ட காசில்ல என்கவும் காசு வேணாம் ராசா உன் வயிறு நிறைஞ்சி போச்சா.. இன்னும் வேணும்னா ரெண்டு சாப்பிடு என்றவர் அவன் போதும் என்கவும் அவனுக்கு தனியாக பார்சல் கட்டி மதியம் வச்சு சாப்பிடு என்று கொடுத்தார்.


அவரிடம் அதனை வாங்கியவன் மீண்டும் அவன் வீடு எங்கென்று தேடினான்..


எங்கெங்கோ சென்று மூலை முடுக்கெல்லாம் தேடினான்.. ஆனால் இடம் தான் தெரியவில்லை.


அப்பொழுது தான் அங்கு ரோட்டில் அழுது கொண்டிருந்த ஒரு சிறுவனை கண்டான்.


தன்னை போலவே உடையெல்லாம் அழுக்காகி தலையெல்லாம் கலைந்து அழுது கொண்டிருந்தான்.


அவனிடம் சென்று ஏன் அழற பசிக்குதா என்று கேட்கவும் அந்த சிறுவன் எதுவும் பேசவில்லை..அவனை ஏற இறங்க பார்த்தவன் மீண்டும் தன் அழுகையை தொடர்ந்தான்.


அவன் ஏதும் பேசாததும் பக்கத்தில் அமர்ந்தவன் தன்னிடம் இருந்த பார்சலை பிரித்தான்.


அதிலிருந்த இட்லியை பிய்த்து வாயில் வைக்க போக அதனை கண்ட சிறுவன் டேய் எனக்கும் தாடா பசிக்குது என்று ஒரு வழியாக வாயை திறந்தான்.


இந்தா சாப்பிடு என்று அவன் பக்கம் தள்ளி வைத்தவன் உன் பேரென்ன என்று கேட்டான்.


அவன் அதிலிருந்த நாலு இட்லியை காலி பண்ணிய பிறகு தான் கூறினான். பாவம் அவனுக்கும் பசி போல..


என் பேரு பரத்.. உன் பேரு?


ராம் பிரசாத்


ஒஹ்ஹ்.. நான் தான் அனாதை எனக்கு எங்க அப்பா அம்மா யாருன்னே தெரியாது.. நீ ஏன் இங்க இருக்க


நானும் அனாதை தான் எனக்கு அப்பா இருந்தாரு செத்து போயிட்டாரு.. அம்மா இருந்தாங்க என்ன விட்டுட்டு போய்ட்டாங்க என்று கூறினான்.


சரி வா அடுத்த வேலைக்கு சாப்பாடு கிடைக்குமானு பாப்போம்.. இங்க யாரும் சாப்பாடு கொடுக்க மாட்டாங்க.. கேட்டா அடிப்பாங்க.. இப்போகூட சாப்பாடு கேட்டு தான் அடி வாங்கி அழுதுட்டு இருந்தேன் என்று கூறினான்.


எனக்கு ஒரு பாட்டி தான்டா இந்த சாப்பாடு கொடுத்தாங்க..


ஒஹ் சரி அவங்களை போய் பார்ப்போம்.. 


இருவரும் அங்கு சென்று பார்த்தால் அந்த பாட்டி இல்லையென்றதும் சோர்ந்து போயினர்.


ரோட்டின் ஓரம் கடை போட்டிருந்த பாட்டியிடம் வந்த ஒருவன் இங்க எல்லாம் கடை போட கூடாது..


கிளம்பு.. கிளம்பு இல்லன்னா துட்டை வை என்று அதட்ட என்கிட்ட காசு இல்லப்பா என்கவும் அந்த பாட்டி கடையில் வயிறு முட்ட தின்று விட்டு அவர் இடத்தை காலி செய்யும் வரை அந்த இடத்தை விட்டு அவன் நகரவில்லை.


பின்பு அந்த பாட்டி கடையை எடுத்து நடையை கட்டியதும் தான் அவனும் கிளம்பினான்.


இருவரும் அப்படியே நடக்க இவர்களை பார்த்த ஒருத்தி என்ன தம்பி ரெண்டு பேரும் சோர்ந்து தெரியுறீங்க..


ஏதாவது சாப்பிடுறீங்களா என்றதும் இருவரும் அவளை நம்பி தலையாட்ட உங்களுக்கு யாரும் இல்லையா என்கவும் இல்லை என்று கூறினர்.


அப்போ நீங்க அனாதைகளா என்று மீண்டும் கேட்டு தெளிவு படுத்தி கொண்டாள்.


அவர்கள் ஆமென்று தலையாட்ட 

சரி நான் வேலை வாங்கி தரேன்.. ஒழுங்கா வேலை செய்யணும் சரியா.. உங்களை போல நிறைய பிள்ளைகளை சேர்த்து விட்டுருக்கேன்..


வாங்க சாப்பாடு செஞ்சு தரேன் அப்பறம் அங்க போகலாம் என்று தான் வீட்டுக்கு அழைத்து சென்றாள்.


அவர்களும் சாப்பாடு கிடைக்கிறது என்று அவள் பின்னாடி சென்றனர்.. பாவம் அவர்களுக்கு தெரியவில்லை அங்கு படப்போகும் கஷ்டங்களை பற்றி.


அவள் வீட்டுக்கு வந்ததும் ஜூஸ் குடிக்குறீங்களா தம்பி என்கவும் இருவரும் தலையாட்ட இரண்டு கிளாசில் ஊற்றி வந்து கொடுத்தாள்.


அதனை குடித்தது மட்டும் தான் அவர்களுக்கு நியாபகம் இருந்தது.


அவர்கள் மயங்கியதும் யாருக்கோ போன் போட்டு அழைத்தவள் டேய் ரெண்டு பீசு மாட்டிருக்கு வந்து அள்ளிட்டு போங்க..


சற்று நேரத்தில் அவள் வீட்டுக்கு வந்த ஒரு தடியன் இருவரையும் கைகளில் தூக்கி கொண்டவன் நல்லா விசாரிச்சியா யாரும் இல்லை தானே இவங்களுக்கு..


அப்பறம் பிள்ளையை காணும்னு புகார் கொடுத்து நாம மாட்டிக்க கூடாதுள்ள அதான் கேக்குறேன்..


அதெல்லாம் கேட்டுட்டேன் ரெண்டும் அனாதை தான்.. தூக்கிட்டு போ சீக்கிரம் அப்பறம் கமிஷன் கரெக்ட்டா வரணும் பார்த்துக்கோ என்று அனுப்பி வைத்தாள்.


அடுத்த நாள் மயக்கத்தில் இருந்த இருவரும் எழுந்து பார்க்க சுற்றிலும் உபயோக படுத்தாத பழுதடைந்த பொருட்கள் கொட்டிக் கிடந்தது.


சற்று தள்ளி நால்வர் அமர்ந்து சரக்கடித்துக் கொண்டு சீட்டுக் கட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.


இருவரும் எழுந்ததை பார்த்த ஒருவன் டேய் அதுங்க எழுத்துருச்சு இப்படியே அனுப்பினா எவனும் துட்டுப் போட மாட்டானுங்க.. இதுங்களுக்கு வேற வழிதான் பண்ணனும் என்றான்.


தான் பிடித்துக் கொண்டிருந்த சுருட்டை வாயில் இருந்து எடுத்தவன் அவர்கள் இருவருக்கும் அதனால் சூடு வைத்தான்.


இருவருக்கும் ஏற்கனவே தலை சுத்தல் நிற்காமல் மங்கலாக தான் அவர்களின் உருவம் தெரிந்தது.


இதில் சூடு வைத்ததை தாங்க முடியாமல் இருவரும் மயங்கி விழுந்தனர்.


டேய் இதுங்க என்னாடா சுருட்டால சூடு வச்சத்துக்கே மயங்கிடுச்சிங்க தேராது போலையே என்று ஒருவன் கூற டேய் நம்ம குடோவுனுக்கு தூக்கிட்டு போ அதெல்லாம் தேரும்.


இதுங்களை வாங்கின பணத்துக்காகவாது நமக்கு சம்பாரிச்சு கொடுக்கட்டும் என்று கூறினான்.


குடோவுனுக்கு தூக்கி சென்றால் அங்கு இவர்களை போல கிட்டதட்ட ஐம்பது அறுபது குழந்தைகள் இருந்தனர்.


சிலர் கால் நடக்க முடியாமல் சிலர் கையில் கட்டுடன் இருந்தனர் சிலருக்கு கண்கள் இல்லை. பிள்ளைகளை மொடமாக்கி பிச்சை எடுக்க வைத்து பிழைக்கும் ஈன பிறவிகளிடம் வந்து மாட்டிக்கொண்டனர்.


மயக்கம் தெளிந்ததும் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டு அதிர்ந்தவர்கள் ஐயோ போச்சு இங்க வந்து மாட்டிக்கிட்டோமே என்ற அச்சத்தில் பரத் அழத் தொடங்கினான்.


அங்கிருந்த ஒரு தடியன் அவன் அழவும் ஏய் இப்போ எதுக்கு அழுவுற என்று அவன் முதுகில் பட்டென்று அடி வைக்க ராம் அவன் காலில் கடித்து இப்போ எதுக்கு அவனை அடிக்குற என்கவும் கோபமானவன் அங்கு அடுப்பில் எரிந்து கொண்டிருந்த விறகு கட்டையை எடுத்து வந்து என்னையே கடிக்கிறியா என்று அவனுக்கு சூடு வைக்க வலியில் கத்தியவன் மயங்கி சரிந்தான்.


மயங்கி சரிந்தவனை காலால் எட்டி உதைக்க அந்த ராட்சசனின் காலை பிடித்துக் கொண்ட பரத் அண்ணா இனிமே அவன் பேச மாட்டான் விட்டுருங்கண்ணா என்று கெஞ்ச அவனையும் எட்டி உதைத்தவன் சென்று விட்டான்.


அந்த தடியன் அங்கிருந்து சென்றதும் மயங்கி கிடந்த ராமிடம் சென்று டேய் ராம் எழுத்திருடா என்று அவனை உளுக்கி அழுதான்.


ஆயிற்று இன்றோடு ஆறு மாதங்கள் ஆயிற்று.


காலங்கள்தான் கடந்ததே தவிர அவர்களின் நிலைமை இன்னும் மாறவில்லை..


அன்று வாங்கிய சூடு தான் அதன் பிறகு ராம் பேசவே இல்லை.. தனக்குள் இறுகி போனான். இதற்கெல்லாம் காரணமான தன் தாயை அடியோடு வெறுத்தான்.


அவளை அம்மா என்று சொல்லவே நா கூசியது.


இதில் அந்த பெண் சாப்பிட தருகிறேன் என்று அழைத்து போனவள் இப்படி இந்த கூட்டத்தில் மாட்ட வைத்து விட்டாளே என்று யாரையும் சீக்கிரம் நம்ப மறுத்தான்.


நேரம் சென்றால் பிள்ளைகள் உடன் சென்று ரோட்டில் பிச்சையெடுத்து அந்த காசை தடியர்களிடம் கொடுத்து விட்டு அவர்கள் கொடுக்கும் இரவு உணவை வாங்கிக் கொண்டு பரத்துடன் தன் இடத்தில் சாப்பிட்டு படுத்துக் கொள்வான்.


ஒரு நாள் இரவு அனைவரும் தூங்கியதும் அந்த தடியர்கள் பேசியது இவன் காதுகளில் விழுந்தது.


டேய் இப்பெல்லாம் கலெக்ஷன் ரொம்ப கம்மியா வருதுடா.. என்று ஒருவன் கூற அதுக்கென்னடா ரெண்டு மூணுக்கு கண்ணை பிடிங்கிவிடு காசு வரும் என்றான்.


எப்படியாவது இவங்ககிட்ட இருந்து தப்பிச்சு ஆகணும் என்ற யோசனை வலுவாகியது.


அடுத்த நாள் அனைவரும் சிக்னலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்க தங்களை கண்காணிக்க போட்டிருந்த ஆள் மறுபக்கம் திரும்பியதும் ராம் பரத்தின் கையைப் பிடித்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓடினான்.


அவர்களை கண்டு ஒருவன் துரத்தவும்.. 


டேய் சீக்கிரம் வாடா


ஏன்டா நாம ஓடுறோம் 


நாம இங்க இருந்தா நம்ம கண்ணை நோண்டிடுவாங்கடா என்றவன் அவனை இழுத்துக் கொண்டு ஒரு குப்பைத்தொட்டி பின்னால் சென்று அமர்ந்துக் கொண்டான்.


இவர்களை விரட்டி வந்த ஒருவன் சுற்றி முற்றி தேட மூச்சை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.


அந்த தடியன் சென்றதும் ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட யாருப்பா நீங்க என்ற குரல் கேட்டது.


குரல் கேட்டதும் இருவரும் அதிர்ந்தனர்.


ராம் எழுந்து பரத்தை மறைத்தவாரு நின்று கொண்டவன் அவரை முறைத்துப் பார்த்தான்.


யாருப்பா நீங்க இங்க என்ன பண்றீங்க என்று கேட்டார் தர்மராஜ்.


அதை ஏன் உங்ககிட்ட சொல்லணும். இது ராம்.


சொன்னால் உங்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன்.


அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்... அந்த பெண்ணை நம்பி சென்று இந்த கும்பலில் மாட்டியது நினைவு வர அவரின் சொல்லை நம்ப மறுத்தான்.


பரத்துக்கு அவரை பார்க்க நல்லவர் போல தெரிந்ததோ என்னவோ மடை திறந்த வெள்ளம் போல் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை என்ன நடந்ததோ அனைத்தையும் ராம் தடுக்க தடுக்க சொல்லி முடித்தான்.


டேய் ஒரு வேளை இவர் அவங்க ஆளா இருந்தா என்ன பண்ணுவ என்று ராம் வினவ ஐயோ என்று பரத் அலறினான்.


சரி வாங்க ரெண்டு பேரும் நான் உங்களுக்கு தங்க இடம் உணவு படிப்பு எல்லாம் தரேன் என்று அழைக்க இருவரும் ஒரு சேர வேண்டாம் என்று மறுத்தனர்.


சூடு கண்ட பூனை அல்லவா அதனால் அவரின் உதவியை மறுக்க சரி என்னை நீங்க நம்பலன்னு புரியுது..


உங்களை எங்க அடைச்சி வச்சுருந்தாங்க சொல்லுங்க நான் போலீஸ் கிட்ட சொல்றேன்.. எல்லா பிள்ளைகளும் உங்களை போல தானே கஷ்ட படுவாங்க..


எல்லாரையும் காப்பாத்தலாம் என்கவும் இருவரும் ஒருவாறு அவரை நம்பி ஒப்பு கொண்டனர்.


பின் அவர்கள் காட்டிய இடத்தை போலீசார் சுற்றி வளைத்து அனைவரையும் விடுவித்து அந்த தடியர்களை தூக்கி ஜெயிலில் போட்டனர்.


பின்பு இருவரையும் தன் பொறுப்பில் எடுத்து கொண்டவர் அவர்களை படிக்க வைத்தார்.


ராமுக்கு பத்து வயது ஆகும் பொழுது ஒரு நாள் டிவியில் ப்ரைன் ஆக்டிவேஷன் சென்டர் நடத்தி கொண்டிருந்த ஷைலஜா ஜோசப் மற்றும் அவர்களது குழுவினர் அனைவரையும் போலிஸ் கைது செய்தது என்று ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.


அதனை கண்ட ராம் தர்மனிடம் சென்று என் தம்பி அங்க தான் இருக்கான் அவன் எனக்கு வேணும் என்கவும் தர்மன் அந்த இடத்தை விசாரித்து ராமை அழைத்து செல்ல அங்கு ஜெய் அழுது கொண்டிருந்தான்.


அவனை போய் அனைத்து கொண்ட ராம் அங்கு நின்றவரை கண்டுகொள்ளாமல் ஜெபியை தூக்கி கொண்டு வந்து விட்டான்.


அதன்பிறகு அவன் உலகமே அந்த மூவரை சுற்றி தான் இருந்தது.. யாருடனும் பேச்சு வைத்து கொள்ள மாட்டான்.


தனக்குள்ளேயே இறுகி போனவன் படிப்பில் மட்டுமே குறியாக இருந்தான்.


அவன் கல்லூரி படிக்கும் காலங்களில் ஜெயிலில் இருந்து வந்த ஷைலஜா அவனை பார்க்க வர காட்டுத்தனமாக கத்துவான்..


இவன் சரிப்பட மாட்டான் என்று நினைத்தவர் ஜெபியிடம் சென்று பேச அதனை அறிந்தவன் அவருக்கு தெரியாமல் தர்மனிடம் பேசி அவனை டெல்லியில் படிக்க வைத்தான்.


ஷைலஜா கண்டிப்பாக மீண்டும் வந்து தங்களை தொந்தரவு செய்வார் என்று அறிந்தவன் வீட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி தன் தம்பியையும் நான் சொல்ற வரைக்கும் டெல்லியில் வேலை பாரு என்றான்.


ஜெயிலில் இருந்து வந்த ஜோசெப்பும் ஷைலஜாவும் பணத்திற்கு என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்த போது ராம் படித்து கை நிறைய சம்பாதிக்கிறான் என்று அறிந்து அவனை காண வந்தார்.


ஆனால் ராம் அவரால் தன்னை நெருங்க விடாது பார்த்து கொண்டான்.


***

தன் கணவனின் கடந்த காலத்தை கேட்டு கொண்டிருந்தவளுக்கு நெஞ்செல்லாம் ரணமாக வலித்தது.


எத்தனை கொடுமைகளை அனுபவித்திருப்பான்.. என்று அவனை தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டாள்.


மாமா ரொம்ப கஷ்டப்பட்டுருக்கீங்க.. எப்படி மாமா அங்க இருந்தீங்க.. ச்சீ அவங்களால் உங்களை எப்படி விட முடிஞ்சுது..


எங்க அப்பவாச்சும் எங்க அப்பத்தா பேச்சை கேட்டுகிட்டு என்னை கொடுமை படுத்துனாறு.. 


இவங்களுக்கு உங்களை விட எப்படி மாமா மனசு வந்துச்சு என்று ஆற்றாமையால் புலம்பி தள்ளினாள்.


ஹே பிரௌனி தங்கம் விடு டா அது ஒரு கெட்ட கனவு.. என் வாழ்க்கையில் நான் திரும்பி பார்க்கவே கூடாதுன்னு நினைக்கிற பக்கம் என்னோட சின்ன வயசு தான்..


ஆனால் இப்போ என் பிரௌனி கூட ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தெரியுமா..


என் வாழ்க்கையில் எப்போ நீ வந்தியோ அப்போவே எனக்கு நல்ல காலம் ஆரம்பிச்சிடுச்சு..


ஆனால் நீ என்னை விட்டு ஒரு நிமிஷம் பிரிஞ்சாலும் என்னால தாங்க முடியாது பிரௌனி..


என்னை விட்டு போக மாட்டே தானே பிரௌனி..


மாமா நீங்களே என்னை வெளியே போடின்னு அடிச்சு துரத்தினாலும் நான் போக மாட்டேன் மாமா.. 


உங்களை விட்டு பிரிஞ்சா உயிரில்லா ஜடம் போலத்தான் மாமா நான்..


நீங்க கவலையே படாதீங்க மாமா உங்களை தொந்தரவு பண்ணுறதுக்கு எப்பொழுதும் உங்க கூடவே இருப்பேன் என்று கூறியவளுக்கு தெரியவில்லை தானே அதை மீற போகிறோம் என்று.


பின்பு ஜாலி முடிவுக்கு மாறியவன் நான் கேட்டதை நீ கொடுத்தால் நான் ஏன் பிரௌனி உன்னை விரட்ட போறேன் என்று அவளை இறுக்கி அணைக்க மாமா நீங்க ரொம்ப பேட் பாயா மாறிட்டீங்க என்று சிரித்தபடி அவன் நெஞ்சுக்குள் புதைந்து கொண்டாள்.


காந்தமென ஈர்க்கும்..


No comments