காதல் -14




 காதல்-14:


இரண்டு நாட்கள் தன் தம்பியுடன் இருந்தவனுக்கு அதற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை, அவனும் இந்த இரண்டு நாட்களில் அவளின் கைபேசிக்கு பலமுறை அழைத்து பார்த்துவிட்டான்.


ஆனால் அவள் எடுத்தப்பாடில்லை. போனை வச்சுட்டு என்ன பண்றா இவ என்று நினைத்தவன் சாமிக்கு அழைக்க சாமியும் எடுக்கவில்லை. ச்சே என்று அங்கிருந்த சுவற்றில் குத்தியவன் தன் தம்பியிடம் வந்தவன் ஜெபி இன்னும் ஒரு த்ரீ டேஸ் பொறுத்துப்பியா..


பரத் உன்கூட இருப்பான்.. இந்த நிலைமையில் விட்டுட்டு போறேன்னு நினைக்காத இங்கு என்னால் அவளை விட்டுட்டு நிம்மதியா இருக்க முடியலை என்றவன் டேய் அவனை பார்த்துக்கோ நான் பிலைட் புக் பண்ணிடுறேன் அவனை அழைச்சுட்டு வீட்டுக்கு வந்துடு என்று கூறியவன் அடுத்த பிலைட் ஏறி சென்னைக்கு வந்து விட்டான்.


இங்கு வீடே வெறிச்சோடி போய் இருந்தது.. யாருமில்லை எல்லா இடத்திலும் தேடியவன் கயல் இல்லை என்றதும் யோவ் குமரேசா உன்னை வீட்டுல விட்டது எவ்ளோ பெரிய தப்புன்னு புரிய வச்சுட்ட இரு வரேன் உனக்கிருக்கு என்று மனதில் நினைத்தவன் தன் உடைகளை ஒரு ட்ராவல் பேகில் எடுத்துப்போட்டு கிளம்பிவிட்டான்.


மணி எட்டை நெருங்கியிருந்தது.. இப்போ கிளம்பினால் அங்க போக பன்னிரெண்டு ஆயிடுமே என்று யோசித்தவன் மனமோ இப்போவே பிரௌனியை பார்த்தே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்க கிளம்பி விட்டான்.


பேய் பிசாசு நடமாடும் நேரத்தில் ஊருக்கு வந்தவன் அங்கு ஒரு ஆலமரத்தடியில் படுத்திருந்த பெரியவரை எழுப்பி குமரேசன் வீடு எங்கன்னு தெரியுமா என்று கேட்கவும் நீ யாருப்பா இந்த நேரத்துல என்று வினவவும் என் பொண்டாட்டி கயலை பார்க்கணும் என்று விறைப்பாக கூற வள்ளியின் வீட்டை காட்டி விட்டு சென்றுவிட்டார்.


அவர் காட்டிய வீட்டின் அருகில் வந்தவன் கதவை தட்ட வள்ளியின் தந்தை வந்து திறந்தார். யாருங்க நீங்க இந்த நேரத்துல வந்துருக்கீங்க என்று கேட்கவும் அவரிடமும் அதே வசனம் என் பொண்டாட்டியை பார்க்கணும் என்கவும் முதலில் அவருக்கு புரியவில்லை.


என் புருஷன் வருவாருன்னு சொன்னா ஆனால் இப்படி அர்த்த ராத்திரியில் வருவாருன்னு சொல்லவே இல்லை என்றவர் வாங்க தம்பி உள்ள வாங்க என்று அழைக்கவும் அங்கு வராண்டாவில் படுத்திருந்த மருது எழுந்தவன் அவனை கண்டு கொண்டு தன் அத்தையிடம் இருந்து வாங்கிய டிவோர்ஸ் பேப்பரை அவன் முன்னால் தூக்கி எறிந்தான்.


டேய் மருது என்ன பண்ற என்று அதட்ட இதுக்கு என்ன அர்த்தம் என்னன்னு முதலில் சொல்ல சொல்லுங்க ப்பா என்று அழுத்தமாக கூற அவனை ஒரு பார்வை பார்த்த பிரசாத் ஒன்றும் பேசாமல் அந்த டிவோர்ஸ் பேப்பரை எடுத்தவன் அவர்கள் முன்னாடியே கிழித்து போட்டுவிட்டு நேரே துறையிடம் என் பொண்டாட்டியை பார்க்கணும்..


வாங்க தம்பி என்று அவனை அழைத்து சென்றவர் கயலு தூங்குது நாளைக்கு பேசிக்கலாம் வாங்க நீங்க இந்த ரூமுல தங்கிக்கோங்க என்று அவனை அழைத்து செல்ல கயலை பார்த்துக்கொண்டே சென்றவன் தன் ட்ராவல் பேக்கை வைத்து விட்டு வந்தவன் அவன் வந்த செய்தி அறிந்து எழுந்து வந்த தன் மாமியாரை ஒரு பார்வை பார்த்தவன் அவரிடமும் மௌனம் சாதித்தான்.


அவரை கண்டுகொள்ளாமல் கடந்து வந்தவன் அங்கு தனியே படுத்திருக்கும் தன் கயலை யார் பார்க்கிறார்கள் என்றும் பாராமல் தன் கைகளில் தூக்கி கொண்டவன் தனக்கு காட்டிய அறைக்குள் சென்று மெத்தையில் படுக்க வைத்து விட்டு அறையை பூட்டிக் கொண்டான்.


அவன் செயலை பார்த்த மருது சிரித்தவன் படுக்க போய் விட்டான்.. துரை ராணியிடம் வந்தவர் நீ போத்தா காலையில் பேசிக்கலாம் பத்திரத்தை அவரே கிழுச்சி போட்டுட்டாரு உன் புருஷன் தான் உரண்டை இழுத்திருக்கான்.. நீ போய் தூங்கு காலையில் பார்த்துக்கலாம் என்றவர் தானும் படுக்க சென்றார்.


இங்கு அறையில் தன் உடையை கலைந்து வேறுடைக்கு மாறியவன் தன் பிரௌனியிடம் நெருங்கி படுத்துக்கொண்டு அவள் எழாதவாறு அணைத்து கொண்டு படுத்துறங்கி விட்டான்.


காலையில் கண் விழித்தவள் என்ன சூடா இருக்கு தலகாணி என்று நிமிர்ந்து பார்க்க பிரசாத்தின் மார்பில் படுத்துறங்கியது தெரிய வர மாமா என்று அவன் கையை எடுத்து தன்னை சுற்றி போட்டுக்கொண்டவள் மாமா ஏன் மாமா இப்படி பண்றீங்க நான் எழுந்திருக்கும் போது இருப்பீங்க முத்தம் குடுக்க வந்தா உடனே மறைஞ்சி போய்டுறீங்க..


போங்க மாமா உங்களுக்கு நான் முத்தமே கொடுக்க மாட்டேன்.. நான் முத்தம் கொடுத்தா தான் நீங்க மறைஞ்சி போய்டுறீங்க சோ இனிமே நான் குடுக்க மாட்டேன் இப்படியே உங்களை கட்டிப்பிடுச்சுட்டு படுத்துருப்பேன் எப்படி என் ஐடியா என்று தூங்குபவனிடம் கேட்டவள் அவன் மீசையை பிடித்து இழுத்தாள்.


சுள்ளென்று ஏற்பட்ட வலியில் தூக்கம் கலைந்தவன் அடியேய் காலையில என்ன வேலை டி பாக்குற.. வலிக்குது விடு டி என்று அவள் கையை தட்டி விட்டவன் எழ என்ன மாமா எப்பொழுதும் நான் முத்தம் கொடுத்ததும் மறைஞ்சு போய்டுவீங்க இன்னைக்கு முத்தம் இல்லன்னு இவ்ளோ நேரம் இருக்கீங்க.


இது தெரியாம ரெண்டு நாளா உங்களுக்கு முத்தம் கொடுத்து அனுப்பி வச்சுட்டேனே என்று வருத்த பட்டவள் இனி உங்களுக்கு முத்தமே குடுக்க மாட்டேன் அப்போதான் என்னை விட்டு போக மாட்டீங்க என்று உளறி கொண்டிருந்தவளை பார்த்து இவ என்ன தூக்கத்துல என்னென்னமோ பேசுறா என்று யோசித்தவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது..


அவள் தன்னை பிரமை என்று நினைத்து கொண்டு பேசிக்கொண்டிருக்கிறாள் என்று புரிந்தவன் சோ ஸ்வீட் பிரௌனி என்று உள்ளுக்குள் கொஞ்சி கொண்டவன் அவளிடம் விளையாட நினைத்து ஹே பிரௌனி எனக்கு வேணும் அன்பு அதிகமா ஆயிடுச்சு ஓடி வா மாமாக்கு உம்மா குடு என்று நெருங்கவும் போங்க நான் முத்தம் கொடுத்தா நீங்க மறைஞ்சி போய்டுறீங்க.


நான் குடுக்க மாட்டேன் என்று தலையை இப்படியும் அப்படியும் ஆட்ட சரி விடு நீ குடுக்கலைன்னா என்ன நான் குடுத்துட்டு போறேன் சிம்பிள் என்றவன் அவளிடம் குனிய தன் கன்னத்தில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு இப்போ எப்படி கொடுப்பீங்க என்று வக்களம் காட்டியவளிடம் ஏன் பிரௌனி அதுக்குன்னு நீ இவ்ளோ அறிவாலியா இருக்க கூடாது.


முத்தம் கன்னத்துல மட்டும் தான் கொடுப்பாங்களா.. என்று வினவவும் தன் நெற்றியை தான் சொல்கிறான் என்று நினைத்து கொண்டவள் இப்போ என்ன பண்ணுவீங்க என்று நாக்கை துருத்தி காட்ட அவள் கன்னத்தில் கை வைத்தவன் அப்படியே அவள் நாவை தன் உதடு கொண்டு சிறை பிடித்தவன் அதில் மூழ்கி விட்டான்.


எத்தனை நேரம் நீடித்ததோ கயலும் எழுந்திரு என்று ராணியின் குரல் கேட்கவும் தான் அவளிடம் இருந்து பிரிந்தவன் அவள் அதிர்ந்து நிற்பதை பார்த்து அவள் கன்னத்தில் தட்டியவன் குளியரையில் சென்று பதுங்கி கொண்டான்.


அவள் இன்னும் அந்த மோன நிலையில் இருந்து கலையாமல் நின்று கொண்டிருந்தவள் கதவு தட்டப்படவும் ச்சே இந்த மாமா திரும்ப மறைஞ்சி போய்ட்டாங்க.. வரட்டும் என்கிட்ட ஆட்டம் காட்டுறதே வேலையா போச்சு இவருக்கு என்று புலம்பியவாறே சென்று கதவை திறந்தாள்.


ராணி கையில் காபியுடன் நிற்கவும் அதில் தனக்கு ஒன்றை எடுத்துக்கொள்ள ஏய் உனக்கும் எடுத்துக்கோ டி என்று கூறவும் ம்மா அதான் நான் எடுத்துகிட்டேனே எனக்கு ஒன்னு போதும் என்கவும் தம்பிக்கு காபி எடுத்துக்கோ டி என்கவும் குணா இங்க இல்லமா..


ஏய் காலையிலே விளையாடுற இந்தா மாப்பிள்ளைக்கு கொண்டு போய் குடு என்கவும் எந்த மாப்பிள்ளை ம்மா என்கவும் காண்டானவர் அடியேய் உன் புருஷனுக்கு கொண்டு போய் குடு காலையிலே ஆரம்பிச்சுட்டா புருஷனை பார்த்ததும் வாலு தனத்தை ஆரம்பிச்சுடறது என்று புலம்பி கொண்டே செல்ல இந்தம்மா என்ன காலையிலே இப்படி உளருது என்றவள் திரும்ப அங்கு தன்னருகில் வந்து நின்றவனை கண்டு அம்மா பேய் என்று கையில் இருந்த காபியை தூக்கி போட பிரசாத்துக்கு காபி அபிஷேகம் இனிதே நிறைவடைந்தது..


வெள்ளை நிற கையில்லா பனியன் காபி ஊற்றியதில் பிரவுன் நிறத்துக்கு மாறியிருக்க சிரித்தபடி தன் முன் நின்றவனை பார்த்து மாமா என்று கண்கள் கலங்க அழைத்தவள் அவன் கன்னத்தை வருட என்ன டா பயந்துட்டியா என்று அவள் தலையை கலைத்தவன் அவளை ஆதரவாய் தன் நெஞ்சில் சாய்க்க மாமா என்று அலறினாள்.


மாமா இதை கழட்டுங்க ஐயோ காபி சூடா இருக்குமே உங்களுக்கு காந்துதா சாரி மாமா என்று அவன் பனியனை கழட்ட ஹே பிரௌனி இதெல்லாம் என்ன சூடு நான் பார்க்காத சூடா என்று அவன் சாதாரணமாக தான் கூறினான்.


ஆனால் கேட்டவளுக்கோ மனம் வேதனையுற்றது அவன் என்னவெல்லாம் கஷ்டப்பட்டானோ என்று உள்ளுக்குள் பரிதவிக்க, அவள் தந்தை அன்று கூறியது வேறு அவள் மனதை நெருஞ்சி முள்ளாய் குத்த அவனை தன்னோடு கட்டி அணைத்து கொண்டு அழுதாள்.


மாமா.. மாமா என்று அவனை தன்னுடன் இறுக்கியவாறு எப்பொழுதும் உன்னை இனி பிரிய மாட்டேன் என்பது போல் அவனுக்குள் புகுந்து விடுவது போல் அணைத்து கொண்டு அழ டேய் பிரௌனி என்ன ஆச்சு எதுக்கு இந்த அழுகை என்று அவளை தன்னிடம் இருந்து பிரிக்க முயல அசினோட கசின் பிசின் போல் அவனை ஒட்டிக்கொண்டு பிரிய மறுத்தாள்.


தன்னோடு அவளை சேர்த்து அணைத்து கொண்டவன் அவளை அப்படியே தூக்கிக்கொண்டு சென்று மெத்தையில் அமர்ந்தவன் அவள் முகத்தை பார்க்க டேய் எதுக்கு இப்போ அழுகுற என்னாச்சுன்னு இப்படி அழற என்று அவன் எவ்வளவு கேட்டும் அவள் தன் அழுகையை நிறுத்தாமல் அவனை கட்டிக்கொண்டு அழ வயிறு வலிக்குதா டா என்கவும் அதற்கும் அவளிடம் இருந்து பதில் இல்லை.. அழுகை மட்டுமே.


மாமா மாமா அவனை அணைத்து கொண்டு அழுதவள் அவன் கன்னத்தை வருடி அவன் கண்களை நோக்கியவள் மாமா என்று அழைக்க டேய் பிரௌனி இப்போ எதுக்கு இந்த அழுகை அதான் நான் வந்துட்டேனே.. இங்க யாராவது ஏதும் சொன்னாங்களா டா என்று அவள் கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீரை துடைத்தவாறு கேட்டான்.


ஹிம்ம் மாமா இதுபோல இனிமே எங்கையும் என்னை விட்டுட்டு போகாதீங்க மாமா.. என்னை தனியா விட்டுட்டு போகாதீங்க அப்படி போறதா இருந்தால் என்னையும் உங்க கூடவே கூட்டிட்டு போங்க என்று தேம்பி கொண்டே கூற டேய் பிரௌனி இதுக்கா அழற நான் கூட உங்க அப்பா எதாவது பிரெச்சனை பண்ணிட்டாரோன்னு நினைச்சுட்டேன் என்று அவரை சரியாக கணித்து கூறினான்.


அவன் அவ்வாறு கூறியதும் அவள் திருத்திருவென முழிக்க என்ன டா உன் முழியே சரியில்லை.. அப்போ உங்க அப்பா தான் ஏதோ ஏழரைய கூட்டிருக்காரு என்று அவளை பார்க்க அவள் ஆமென்று தலையை ஆட்டவும் தன் பல்லை கடித்தவன் இவருக்கு வாயால் சொன்னால் புரியாது போல என்றவன் எழ முயல..


மாமா வேண்டாம் நான் அன்னைக்கு அவர் கிட்ட சண்டை போட்டு விட்டு தான் இங்கு மாமா வீட்டுக்கு வந்தேன் நீங்க அவர் கிட்ட இப்போ எதும் பேச வேண்டாம் என்று கூறவும் ஹேய் நான் இதை நம்ப மாட்டேன் என்றவன் மனதில் குதூகளித்தவன் வெளியில் அவளை நம்பாதவன் போல் அட போடா நான் நம்பவே மாட்டேன்..


நீயாவது உங்க அப்பாவை எதுத்து பேசுரதாவது என்று நக்கலாக கூற என்ன மாமா நம்ப மாட்டேங்குறீங்க என்னை நீங்க நம்பளையா உண்மையா மாமா நான் சொல்றதை நம்புங்க என்கவும் அட போடா காதுல எவனாவது பூ வச்சுருப்பான் அவன்கிட்ட போய் சொல்லு..


அவரை பார்த்தாவே நீ பயந்து நடுங்குவ அவரை நீ எதுத்து பேசுனியா என்று கேட்டவாறு அவளை தன் மடியில் இருந்து இறக்கி பக்கத்தில் அமர வைக்க மாமா உண்மையா மாமா நான் அவரை திட்டினேன் என்றவாறு மீண்டும் அவன் மடியில் ஏறி அமர்ந்து கொண்டவள் அவன் கழுத்தில் தன் கைகளை போட்டு கொண்டாள்.


அவன் அவளிடம் விளையாட நினைத்தவன் பதிலுக்கு சிரித்தவன் நான் நீ கூறியதை நம்பவில்லை என்பது போல் அவளை பார்த்து சிரிக்க அவன் கழுத்தில் போட்டிருந்த கைகளால் தன் முகத்தருகே அவன் முகத்தை இழுத்து கொண்டு வந்தவள் மாமா நான் முன்னாடி மாதிரி பயந்த பொண்ணுன்னு நினைச்சீங்களா..


நான் இப்போ யாரு தெரியுமா என்று அவன் விழிகளை பார்த்து கூற ஹிம்ம் நீ யாரு என்று அவன் கேட்க மாமா நான் உங்க பொண்டாட்டி இது கூடவா மறந்துட்டீங்க என்று கேட்டு அவன் தலை முடியை பிடித்து ஆட்ட அடியேய் நீ தானே இப்போ கேட்ட நான் யாரு தெரியுமான்னு அதான் நானும் கேட்டேன் என்கவும் ஹிஹி அதுவா என்று சிரித்தவள் பழையபடி அவன் முகத்தை அருகில் இழுத்தவள் அவன் மீசை முடியை இழுத்து முறுக்கி நான் யாரு என்று மீண்டும் இழுக்கவும் அவன் ஏதோ கூற வர அவன் வாயை பொத்தியவள் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க மாமா.. என்று அதட்டியவள் நான் யாரு இந்த ராம் பிரசாத்தோட பொண்டாட்டி..


என் புருஷன் எனக்கு குரங்கு வித்தையில் இருந்து கிங்காங் வித்தை வரைக்கும் கத்து கொடுத்துருக்காரு அதான் தைரியம் வந்து அவரை எதுத்து பேசிட்டேன் என்றவள் உடனே சோகமான முகத்துடன் நீங்க அப்போவே சொன்னீங்க மாமா நான் தான் அவர் அப்படி இல்லைன்னு நினைச்சுட்டேன்..


நீங்க அன்னைக்கு கிளம்பினதும் அம்மாகிட்ட அதையும் இதையும் சொல்லி என்னையும் இங்க அழைச்சுட்டு வந்துட்டாரு.. எனக்கு வேற பயமா போயிடுச்சு நான் இல்லாதப்போ நீங்க வீட்டுக்கு வந்து நான் எங்கன்னு என்னை தேடுவீங்களே அதான் கஷ்டமா போச்சு..


என்னை தேடுனீங்களா மாமா என்று கண்கள் மின்ன அவள் கேள்விக்கான பதிலை தெரிந்து கொண்டே அவனிடம் கேட்க தன் மடியில் அமர்ந்திருந்தவளை அப்படியே மெத்தையில் பிரட்டி போட்டு அவளருகில் அவளை அணைத்தவாறு படுத்து கொண்டவன் உன்னை தேடாம தான் நடுராத்திரி வந்து பூதம் மாதரி வீட்டு கதவை தட்டினேனா என்றவன் கதவை திறந்த உன் மாமா வேற ஒரு மாதிரி சிரிக்குறாரு எனக்கு வெட்கமா போயிடுச்சு டா அவர் ஏதாவது ஏடாகூடமா நினைச்சிருப்பாரோ என்றவன் அவள் கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்து கொண்டான்.


அவன் சூடான மூச்சுக்காற்று கழுத்தில் பட்டு மீசை முடிகள் குத்தி குறுகுறுப்பு மூட்ட அவனிடம் இருந்து தள்ள முயன்றவளை தன்னுடன் சேர்த்தனைத்தவன் பிரௌனி நான் அர்த்த ராத்திரியில் வந்ததும் உங்க மாமா என்னை என்ன நினைச்சிருப்பாரு.. ஐயோ என் மானமே போச்சு என்று வாத்தி ஒப்பாரி வைக்க அட என்ன மாமா அவர் ஏதும் நினைச்சிருக்க மாட்டாரு..


புள்ளை மேல இவ்வளவு பாசமா என்று பூரிச்சு போயிருப்பார்.. மாமா பொண்டாட்டிக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சா இந்த வெட்கம் மானமெல்லாம் பாக்க கூடாது மாமா அப்போதான் சோறு கிடைக்கும் என்று கிளுக்கி நகைக்க அவள் சிரிப்பை பார்த்தவன் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவளிதழை கவ்விக் கொண்டான்.


காந்தமென ஈர்க்கும்…

No comments