5


மிரு குளித்துவிட்டு வெளியில் வர ஆதியும் பாட்டியும் பேசிக்கொண்டு இருந்தனர்.


அவளை கண்ட பாட்டி "மிரு தம்பிக்கு சாப்பிட குடு, நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்"


" சரி பாட்டி" என்று கூறியவள் உள்ளுக்குள் பால்வாடி பாப்பா இவனுக்கு சோறு ஊட்டனும் என்று அவனை ஒரு மாதிரி பார்த்து கொண்டு பாட்டிக்கு பதிலளித்தாள்.


பார்வதி ஆதியிடம் போய் "சாப்பிட்டு கொஞ்ச நேரம் படுங்க தம்பி பயணக்களைப்பு போகட்டும் கொஞ்சம் வாடி போய் இருக்கீங்க"


அவர் அப்படி கூறியதும் தான் அவன் முகத்தை உற்று பார்த்தாள். எப்பொழுதும் போல் இல்லாமல் முகம் சோபையிழந்து சற்று வாடியிருந்தது.


தன்னுடன் எப்பொழுதும் போல் வம்பிழுத்தாலும் ஏதோ அவன் மனதை அலைக்கழிப்பது அவன் முகத்தில் தெரிந்தது.


'என்ன யோசிக்கிறான் அப்படி என்ன மனசுல வருத்தம் இவனுக்கு' அவனை அவ்வாறு பார்க்க பார்க்க அவனை தன்னுடன் அணைத்துக் கொண்டு ஆறுதல் படுத்த வேண்டுமென்று தோன்றியது.


'மூஞ்ச மட்டும் இப்படி வச்சுப்பான் ஆனால் வெளியில் எதையும் சொல்ல மாட்டான் லூசுப்பய' என்று உள்ளுக்குள் அவனை வருத்தெடுத்தவள் அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.


"ஹிம்ம் சரி பாட்டி நீங்க போய் ரெஸ்ட் எடுங்க" என்றவன் அவர் தன்னறைக்கு சென்றதும் சோபாவில் இருந்து பட்டென்று எழுந்தவன் அங்கு ஏதோ நினைவில் கையில் துண்டை வைத்துக்கொண்டு நின்றிருந்தவளை அப்படியே தூக்கியவன் அவளறைக்கு சென்றான்.


"டேய் இப்போ எதுக்கு என்னை தூக்கிட்டு வர.. என்னால நடந்து வர முடியும் விடு.." என்று அவனிடமிருந்து விடுப்பட முயல "ஏய் சும்மாவே இருக்க மாட்டியாடி" என்று இறுக்கி பிடித்தவன் "வாசமா இருக்கடி" என்று அப்படியே அவள் கழுத்தில் முகம் புதைக்க "டேய் முடி குத்துது டா விடு" என்று துள்ள அவளை அப்படியே தன் தோளில் சுழற்றி போட்டவன் "அப்போ வா வந்து ஷேவ் பண்ணி விடு" என்று தான் கொண்டு வந்த பையை துலாவியவன் ஷேவிங் கிட்டை எடுத்துக்கொண்டு அவளுடன் குளியலறைக்குள் நுழைந்தான்.


"இப்போதான் நான் குளிச்சேன் நீ பண்ணிட்டு வா நான் போறேன்" என்று விலகப்போனவளை இழுத்து பிடித்தவன் "பரவால்ல டி வா இன்னொரு தரம் குளிப்போம்" என்று அவள் கையில் திணிக்க "உன்னை கட்டிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே" என்று அவள் இழுத்து கூறவும் "நான் இன்னும் எதுவுமே பண்ணலையே டி, இப்போவே இப்படி சொல்ற" என்று அவளை பார்த்துக்கொண்டே கூற 'எதுவுமே பண்ணலைன்னு எப்படி பச்சையா பொய் சொல்றான் கோட்டிபயல்' என்று முனகியவள் அவனை முறைத்தாள்.


"ஏய் எனக்கு தூக்கம் வருது டி வா வந்து ஷேவ் பண்ணு குளிச்சுட்டு தூங்கனும் நீ அங்கிருந்து இங்க வந்ததுல இருந்து தூக்கம் போச்சு" என்று சோர்வாக சொல்ல அதற்கு பின்பும் தாமதிக்காமல் அனைத்தையும் எடுத்தவள் மீண்டும் குளிக்க வைத்து இவளும் குளித்து வர போதும் போதுமென ஆகிவிட்டது.


"நம்ம பிள்ளை கூட குளிக்க இவ்வளவு சேட்டை பண்ணாது" என்று அவன் காதுப்பட முனகியவள் அவன் தலையை துவட்ட அவள் இடுப்பிலிருந்த அவன் கை அவளது இடுப்பை இறுக்கியது.


அவன் பிடி வலிக்கொடுக்க "வலிக்குது விடு" என்கவும் "மினி பேபி நம்ம பேபி உன்னை போலவே அழகா குட்டியா கியூட்டா இருக்கும் தானே" என்று துண்டை விலக்கி அவளை பார்த்துக்கொண்டே வராத மகவிற்கு அவள் வயிற்றில் இப்பொழுதே முத்தம் பதித்தான்.


அவளை அப்படியே மெத்தையில் அமர்த்தி மடியில் படுத்து கொண்டவன் வயிற்றில் முகம் புதைத்து பல முத்தமிட்டவன் அப்படியே தூங்கி போனான்.


அவன் தலை முடியை கோதி கொண்டிருந்தவள் அவன் எதுவும் அசைவில்லாமல் இருக்கவும் அழைத்து பார்த்தவள் அவன் தூங்கவும் அவன் நெற்றியில் முத்தமிட்டவள் அவனை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு நகர அவள் கைகளை பிடித்து கொண்டவன் "மிரு இங்கேயே என் கூடவே இரு டி" என்று தூக்கத்தில் உலறினான்.


"நீ தூங்கு ஆது உனக்கு சாப்பிட எடுத்துட்டு வரேன்" என்று அவன் தலையை கோதி கொடுக்க அவள் கையை விட்டவன் சீக்கிரம் வாவென்று முனகியபடி தூங்கினான்.


மிரு ஆதிக்கு சாப்பிட எடுத்து வந்தவள் "ஆதுமா சாப்பிட்டு தூங்கலாம் எழுந்துக்கோ"


அவனிடம் அசைவில்லை.


"ஆது" என்று மெதுவாக அவனை அசைக்க "ஹிம்ம்" என்று அவளை இழுக்க அவன் அருகில் சென்றவள் "ஆதுமா சாப்பிடலாம் எழுத்துரு" என்று கூற "வேண்டாம்" என்று தலை மட்டும் அசைக்க "டேய் சாப்பிட்டா உனக்கு அது தருவேன்" என்று அவன் காதில் மெல்ல கூற படக்கென்று தூக்கத்தில் இருந்து எழுந்தான்.


"மினி பேபி உண்மையாவா?" என்று கண்கள் மின்ன கேட்டவனிடம் தலை குனிந்து கொண்டு முகம் சிவக்க "ஹிம்ம்" என்று கூற "பேபி சிவக்குது டி சாப்பாடு வேண்டாம் வா" என்று இழுக்க "ஆதுமா" என்று கண்டிப்பு தோரணையில் அழைக்க "எனக்கு இது வேண்டாம் நீ தான் வேணும்" என்று சிறுப்பிள்ளையாய் கை கால்களை உதறி அடம் பண்ணினான்.


அவனருகில் அமர்ந்து அவனுக்கு ஊட்ட தூக்கக்கலக்கத்தில் சாமியாடி கொண்டே சாப்பிட அவனுக்கு வாய் துடைத்து விட்டு "இப்போ தூங்கு ஆது" என்று அவனை விட்டு எழ "எங்க போற என்கூடவே இரு டி" என்று கைகளை பிடிக்க "இதெல்லாம் வச்சுட்டு பாட்டி என்ன பண்றாங்கன்னு பார்த்துட்டு வரேன் ஆது".


அவள் வரும் வரை ஏதேதோ எண்ணங்கள் மனதில் அலைமோத பிரண்டு பிரண்டு படுத்தவன் தூங்க முடியாமல் எழுந்தமர மிரு வரவும் அவளை கட்டிக்கொண்டான்.


அவன் இப்பொழுது செய்து வைத்த வேலைக்கு கண்டிப்பாக தன்னுயிர் போக போவது உறுதி என்று அவனுக்கு நன்றாக தெரியும்.


ஆனால் அவனால் மிருவை விட்டுவிட்டு தனியாக அங்கு இருக்க முடியவில்லை. என்னதான் நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று இங்கு வந்து விட்டான்.


தான் வந்தது அவன் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது.


அவனுக்கு தெரியவில்லை இன்னும் எத்தனை நாள் தான் உயிரோடு இருக்க போகிறோம் என்று அதனால் தான் மிருவிடம் வந்து விட்டான்.


தன் தலையை கோதி கொடுத்துவளிடம் "மினி பேபி நான் இல்லாம நீ இருந்துருவியா?" என்று கேட்க அவள் அவன் கேட்பது புரியாமல் விளையாட்டிற்கு "ஒஹ் நான் உன்னை கொஞ்ச நாளில் மறந்துடுவேன்".


"அது மட்டுமில்லாம நீ அக்ரிமெண்ட் போட்டதால் உன்மேல் எனக்கு பாசமெல்லாம் இல்லை சோ ஈஸியா மறந்துடுவேன்" என்று கூற அவளை நிமிர்ந்து பார்த்தவன் "குட் மிரு அண்ட் சாரி எல்லாத்துக்கும் உன்னை கஷ்ட படுத்தியிருந்தா என்னை மன்னிச்சிடு".


"அதுக்கு முன்னாடி நாளைக்கு நாம நம்ம வீட்டுக்கு போறோம் நீ மட்டும் இல்லை எல்லாரும் தான்" என்று அழுத்தி கூற "நான் வரலை வேண்டாம்" என்று பழையபடி ஆரம்பிக்க அவளை பேசவிடாமல் இதழை தன் வசப்படுத்தியவன் அதில் ஊறிய தேனை சுவைக்க சுவைக்க அதில் மூழ்கி விட்டான்.


அவன் அருகாமையில் அனைத்தையும் மறந்தவள் போல் அவனுடன் தானும் சரிக்கு சமமாக அவன் இதழை இழுத்து கடித்து அவன் கழுத்தோடு தன் கைகளை கோர்த்துக் கொண்டு சேர்த்து அணைத்து கொண்டாள்.


அவள் தனக்கு ஒத்துழைக்கவும் எப்பொழுதும் போல் இப்பொழுதும் அவள் ஒவ்வொரு செயலிலும் அவளிடம் மயங்கியவன் அவன் கைகள் அவள் மேல் அத்துமீறியது.


அவன் ஒரு கை அவள் இடையை தழுவியிருக்க ஒரு கை மேலெழுந்து அவன் ஏற்படுத்திய உணர்ச்சி குவியல்களில் விரைத்து நின்ற மேடுகளை தடவி கொடுத்தான்.


அதற்கு மேல் பொறுக்காமல் அவளோடு மெத்தையில் சரிந்தவன் அவள் மொத்தத்தையும் கொள்ளை கொண்டான்.


அன்று மாலை அனைவரையும் அழைத்து "உங்ககிட்ட நான் பொய் சொல்லிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க பாட்டி நான் அனாதை இல்லை எங்க நீங்க என்னை பற்றி விஷயம் தெரிந்தால் எங்க கல்யாணத்திற்கு ஒத்துக்க மாட்டீங்களோ என்ற ஒரு பயம் அதான் பொய் சொல்ல வேண்டியதாகி போச்சு".


"மாமா வேலை பார்த்தார் இல்லையா அது நம்ம கம்பெனி தான் வெங்கடேசன் எங்க அப்பா தான். நாங்க உயிருக்கு உயிரா காதலிச்சோம் நான் இல்லைன்னா அவள் இல்லை என்ற அளவுக்கு காதலிச்சோம்" என்று ரீலாக விட்டுக்கொண்டிருக்க "அடப்பாவி நாம எங்கடா காதலிச்சோம்."


"எப்படி அளந்து விடுறான் பாரு" என்று நினைத்தவள் அவனருகில் சென்று "அதிகமா சொல்லி மாட்டிக்காத மடையா" என்று அவன் காதில் குசுகுசுவென கூறினாள்.


"ஒஹ் ரொம்ப ஓவரா இருக்கோ சரி சரி" என்று அசடு வழிந்தவன் வெளியில் பாவமாக முகத்தை வைத்து கொண்டு "சாரி பாட்டி நான் நாளைக்கு அப்பாகிட்ட பேசிட்டு உங்களை எல்லாம் அங்கு அழைத்து செல்கிறேன்" என்று கூறியவன் அவர் முகத்தை பார்க்க அவரும் மிருவை பார்த்து யோசனையுடன் "சரிப்பா முடிஞ்சதை பற்றி பேசி என்ன ஆகப்போகுது."


"விடுங்க நீங்க உங்க அப்பாகிட்ட பேசிட்டு சொல்லுங்க" என்றுவிட்டு பிள்ளைகளை அழைத்து கொண்டு சென்று விட்டார்.


அவர்கள் சென்றதும் "ஆதுமா இதெல்லாம் யாரு உன்னை சொல்ல சொன்னது பாட்டி சந்தேகமா பார்த்துட்டு போறாங்க" என்றவள் அவன் கையில் கிள்ளி "நாம ரெண்டு காதலிச்சோமா எப்படி இப்படி உன்னால் சொல்ல முடியுது" என்று சிரிக்க "லவ் யூ மிரு" என்று சட்டென்று கூற "வேண்டாம் உன் உயரம் வேற நாங்க வேற இதுல நான் தான் உன் பொண்டாட்டி என்று சொன்னால் என்னை அவர்கள் உன் மனைவியா பார்ப்பதை விட எங்கப்பா உங்க கம்பெனியில் கையாடல் பண்ணினது தான் அவர்களுக்கு நியாபகம் வரும்".


"அந்த பணத்தை எங்கப்பா எடுக்க வாய்ப்பே இல்லை. அவர் அப்படி பட்டவர் இல்லை எனக்கு எங்கப்பாவை பற்றி நல்லா தெரியும்" என்று வலியுடன் கூறவும் அவளை அணைத்து கொண்டவன் "ஷ் மிரு மாமா எடுக்க மாட்டார்னு எனக்கும் தெரியும் நீ கவலைப்படாத சீக்கிரம் பணத்தை எடுத்தது யாருன்னு கண்டு பிடுச்சுடலாம்" என்று அவளுக்கு ஆறுதல் கூறினான்.


அடுத்த நாள் காலையில் தன் வீட்டிற்க்கு சென்றவன் தன் தந்தையிடம் "நான் இனி இங்கேதான் ப்பா இருக்க போறேன். நானே எல்லாம் இனி பார்த்துக்குறேன்" என்று கூற அங்கிருந்த சிலருக்கு பகீரென்று இருந்தது.


ஆதி அந்தமாகும்...