ஆதி அந்தம் - 4 :


சமைத்து அனைவரையும் அனுப்பி வைத்து விட்டு தன் அறைக்கு குளிக்க சென்றாள்.அங்கு ஒருவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைத் தெரிந்தும் கண்டு கொள்ளாமல் அவள் அறைக்கு சென்றாள்..


சரி குட்டிஸ் நீங்க எல்லாரும் போய் கிளம்புங்க நானும் போய்ட்டு பிரஷ் ஆகிட்டு வரேன் என்றவன் அவள் பின்னாடியே வந்தான்.


 "மிரு நான் சொல்றத கொஞ்சம் கேளு மிரு" என்றவனை கண்டுக் கொள்ளாமல் தன் துணியை எடுத்தவளைக் கண்டு ஆத்திரம் கொண்டவன் "ஏய் நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு உன் வேலையைப் பார்த்துட்டு இருக்க நான் என்ன கேனையா..?"


"நீங்க கேனை இல்லை சார் நான் தான் இவ்ளோ நாளா முட்டாளா இருந்துட்டேன்.."


"மிரு" என்று ஏதோ கூற வர 


"சார் நமக்குள்ள போட்ட மூணு மாதம் காண்டிராக்ட் முடிஞ்சிப் போச்சு. இனி நீங்க என்னை கண்ட்ரோல் பண்ண உங்களுக்கு எந்த ரைட்ஸும் இல்ல சார்.." என்று எகத்தாளமாக கூறினாள்.


"ஒஹ் அந்த அளவுக்கு போய்டுச்சா..அப்போ நான் கட்டின தாலிய மட்டும் எதுக்கு உன் கழுத்துல போட்ருக்க கழட்டிக் குடுடி.." என்று அவள் கழுத்தை நோக்கி அவன் கரங்கள் நெருங்க பின்னால் நகர்ந்தாள்..


அவள் எங்கு தாலியை அறுத்து விடுவானோ என்ற பயத்துடன் பின்னால் நகர்ந்தவளை "பேபி நான் சொல்ல வரத கொஞ்சம் காது குடுத்து கேளு டி அப்புறம் கோபப்படுடி" என்று அவளை நெருங்கினான்..


அவள் பின்னால் நகர்ந்து கொண்டே "உனக்கு தான் என்னை பிடிக்காதுல்ல அப்புறம் என்ன புதுசா என்னை தேடி வந்துருக்க…" என்று கேட்டாள்.


"நான் என்னைக்குடி உன்கிட்ட சொன்னேன் உன்னை பிடிக்காதுன்னு"


"அதை சொல்லி தான் தெரியனுமா"


"ஏன் நான் இந்த மூணு மாசம் உன்னை ஒரு நாள் கூட தேடலையா…உன் மனச தொட்டு சொல்லு டி நான் கடமைக்காகவா எல்லாம் பண்ணினேன்.."


"ஆரம்பிச்சது வேணும்னா காண்டிராக்ட் போட்டு அப்படி இப்படி போச்சு ஆனால் அதுக்கப்புறம் நான் உன்கிட்ட நடந்துக்கிட்டதுல கொஞ்சம் கூடவா என் காதலை நீ உணரவே இல்லை.."


"ஒரு வேளை நீ உணரலையா..இல்லை நான் உனக்கு உணர்த்தலையா?" என்று தன் தாடையைத் தடவிக் கொண்டே அவளை மேலும் கீழும் பார்த்தவாறு கூறினான்..


அவன் பார்வையைக் கண்டு அதிர்ந்தவள்" ஐயோ இவன் கையில் இப்போ மாட்டினோம் விட மாட்டானே" என்று மனதிற்குள் அலறியவள்.. வெளியில் தன் முகம் மாறாமல் இருக்க ரொம்ப கஷ்டப்பட்டாள்..


"ப்ச் நகரு, நான் குளிக்கனும்" என்று நகரப் போனவளைத் தடுத்து "எனக்கும் டிராவல் பண்ணி வந்ததில் டையர்டா இருக்கு வா குளிக்கலாம்…" என்றதும் அதிர்ந்தவள் "நீ எதுக்கு வர நீ வேற ரூம்ல போய் குளி" என்று கூறினாள்.


அவன் உள்ளே வந்தால் என்ன நடக்கும் என்பதை அறிந்தவளாய் அவனை விடாது அடம்பண்ணினாள்.


எவ்வளவு முயன்றும் அவள் முகம் சிவப்பதை தடுக்க அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.. "பேபி உன் முகம் சிவப்பா ஆயிடுச்சி டி.." என்று அவள் கன்னத்தை வருடினான்.


அவன் வருடலில் கண்களை மூடியவள் நிதர்சனம் உரைக்க அவனை விட்டுத் தள்ளி நின்றாள்.."வா பேபி இப்போ என்ன நம்ம புதுசாவா ஒன்னா குளிக்கப் போறோம். எத்தனை தடவை ஒன்னா குளிச்சிருக்கோம்…" என்று அவள் கைகளைப் பற்றி இழுத்தான்.


அவன் பேச்சில் லஜ்ஜையுற்றவள் "வெட்கங்கெட்ட பய எப்படி பச்சையா கூப்பிடுறான்.." என்று மனதில் நினைத்தவள் அவன் பிடித்திருந்த கையை உதறினாள்.அவள் உதறியதும் "இப்போ உனக்கு என்ன தான் டி பிரச்சனை" என்று கத்தினான்.


"ஏய் கத்தாத பாட்டி எழுத்து வந்துடப் போறாங்க" என்று பயந்துக் கொண்டே கூறியவளைப் பார்த்து "நான் சொல்லதான் போறேன்" என்று கூறி கதவை நெருங்கினான்.


அதிர்ந்தவள் அவன் பின்னால் இருந்து அவனை அப்படியே அணைத்துக் கொண்டவள் "வேண்டாம் ஆது. நம்ம பிரச்சனை நமக்குள்ளையே இருக்கட்டும். இதெல்லாம் கேட்டா பாட்டி தாங்க மாட்டாங்க" என்று அவனிடம் கூறினாள்.


"சரி உனக்கு என்ன பிரச்சனை?" என்று திரும்பி அவளை பார்த்து கேட்டான். "எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை போட்ட அக்ரிமண்ட் முடிஞ்சி போச்சு.. அவ்ளோதான் நமக்குள்ள இருந்த உறவு அப்போவே முடிஞ்சிப் போச்சு…" என்று கூறினாள்.


"அப்போ நம்ம ஒன்னா இருந்தது எல்லாம்" என்று கேட்டவனிடம் சற்று திணறியவள் "அது நான் சகிச்சுக்கிட்டு இருந்தேன்" என்றதும் கோபமானவன் "அப்போ நான் உன்னை ஒரு தடவை கூட பாதிக்கலையா?" என்று கேட்டான்.


அவன் எதை கேட்கிறான் என்று அறிந்தவள் தன் மனதறிந்து "இல்லை" என்று பொய் உரைத்தாள்.


அவள் இல்லை என்று சொன்ன மறுநொடி பெட்டில் விழுந்தாள் அவள் என்ன என்று உணரும் முன்பே அவள் மீது படர்ந்தவன் "நான் தான் உன்னை பாதிக்கலையே அப்போ புருவ் பண்ணுடி" என்று அவளை மொத்தமாக ஆட்கொண்டான்..


அவன் தன் மேல் படரவும் அவனை தள்ளி விட்டு எழுந்தவள் "டேய் மூணு மாதம் தானே டா காண்டிராக்ட் போட்ட, அதுவும் மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் இதுக்கேத்த மாதிரி தானே டா கரெக்டா மூணு மாதம் காண்டிராக்ட் போட்டுருந்த இப்போ எதுக்கு வந்த விடு.. உனக்கும் எனக்கும் எதுவும் இல்லை" என்று காட்டமாகக் கூறினாள்.


அவளை இழுத்தவன் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டவன் "மிரு அப்போ அறிவில்லாம ஏதோ பண்ணிட்டேன் டா என்னை மன்னிச்சிடு மிரு மா.. என்னை மன்னிச்சிடுடா நான் பண்ணினது தப்பு தான் டா சரியா விசாரிக்காம கோபத்துல அப்படி பண்ணிட்டேன்.. என்னை மன்னிச்சிடுடா என்று கூறியவனைப் பார்த்து எப்படி என்னால உன்னை மன்னிக்க முடியும்.. முடியவே முடியாது ஆளை விடு" என்றவள் எழுந்துக் கொள்ளப் பார்த்தாள்.


அவளை விடாமல் இறுக்கிப் பிடித்தவன் "எனக்கு பதில் சொல்லிட்டுப் போடி" என்றதும் என்ன சொல்லனும் என்றதும் "நான் பேசுறத கொஞ்சம் கேளு டி…"


" சரி என்னை விடு" என்றதும் அவளை விட்டவன் எழுந்து அமர்ந்து கொண்டவன் கட்டில் தலைமாட்டில் சாய்ந்து கொண்டு அவளை இழுத்துத் தன் கைவளைவிற்குள் வைத்துக் கொண்டான். "மிரு எனக்கு கோபம் அதிகமா வரும்னு உனக்கே தெரியும் தானே நான் யாருக்கிட்டேயும் முகம் கொடுத்துக் கூட அனாவசியமா பேச மாட்டேன்னு உனக்கே தெரியும் தானே அதுவும் பெண்கள் கிட்ட சுத்தமா பேச மாட்டேன் தானே ."


"ஆனால் நானும் ஒரு பெண்ணுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வருவேன்னு யாராவது சொல்லியிருந்தா போடா லூசுன்னு சொல்லி இருப்பேன். அதும் இந்த ஏழு நாள் நீ இல்லாம எனக்கு ஒன்னுமே ஓடல மிரு எனக்கு நீ வேணும் மிரு.. ஒரு வேளை நான் உன்னை முதன் முதலா பார்த்தப்பவே உன்கிட்ட விழுந்துட்டேனோ என்னவோ அதான் உன்னை என்னுடையவளா ஆக்கிக்கறதுக்கு இப்படி பண்ணிட்டேனோ மிரு.. பிளீஸ் மிரு டேய் புரிஞ்சிக்கோடா" என்று கெஞ்சினான்.


"நீ சொன்னியே மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்னு அது அப்படி இல்லைடி இப்போதான் உன் மேல கொள்ளை ஆசை வருது டி இந்த மூன்று மாதம் போனதே தெரியலைடி.. எனக்கு ரொம்ப ஸ்டிரெஸா இருக்கு டி தலையே வெடிக்கிற போல இருக்கு டி.. என்னை சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியலை மிரு.." என்று தலையைப் பிடித்துக் கொண்டு அமரவும் பதறியவள் "ஒன்னுமில்லை ஆது ரிலாக்ஸ்" என்று கூறினாள்.


ஆனால் அதில் ஒரு விலகல் இருந்ததை ஆதி உணர்ந்தான். அவள் கைகளைத் தன் கைகளுக்குள் பொதிந்துக் கொண்டவன் அவள் கண்களைப் பார்த்து "மிரு சத்தியமா அவங்க உன் அப்பா அம்மான்னு எனக்கு தெரியாது டா என்னை நம்புடா.. உங்க அப்பாவ பழி வாங்க நான் அப்படி பண்ணலை டா நீ என்னை பேஸ்புக்ல பாளோ பண்ணினல்ல" என்று கேட்டதும் அவனை அதிர்ச்சியுடன் நோக்கினாள். அவள் அதிர்ந்த பார்வையைப் பார்த்து "எனக்கு தெரியும்" என்று கூறினான்.


"ஹிம்ம் நீ என்னோட ஒவ்வொரு போட்டோக்கும் கமெண்ட் போடுவல்ல ஒரு க்யுரியாஸிட்டி அந்த மினி யாருன்னு தெரிஞ்சுக்கனும்னு என் ஆளுங்ககிட்ட சொன்னேன் நீ தான் மினின்னு உன் போட்டோ குடுத்தானுங்க.. உன் போட்டோவப் பார்த்ததும் உன் கிட்ட இருந்த ஏதோ ஒன்னு என்னை ஈர்த்துச்சு அப்போ அது புரியலை இந்த ஏழு நாள் எனக்கு காமிச்சுக் குடுத்துச்சுடி நீ இல்லாத வாழ்க்கை நரகம் டா மிரு" என்று அவளை அணைத்துக் கொண்டான்.


அவனை விலக்கியவள் "அப்போ முன்னாடியே என்னை பத்தி தெரியுமா?" என்று கேட்டதும் "ம்ம் தெரியும் உன்னை பற்றிய எல்லா டீடெய்லும் தெரியும் எனக்கு அப்போ தெரியாது உங்க அப்பா அம்மாவ.. நம்ம கல்யாணம் முடிஞ்சு இரண்டு மாதம் கழித்து தான் தெரியும்.. மாமா அப்பாக்கு நம்பிக்கைக்குரியவர்னு எனக்கு தெரியும்.. அவரை நானும் பாத்துருக்கேன் பட் நீ அவரோடு பொண்ணுன்னு தெரியாது."


"உன் டீடெய்ல்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி ஒரு மாதம் கழித்து தான் உங்க அப்பா அம்மா இறந்துட்டதாகவும் நீ வேலை தேடிக்கிட்டு இருக்குறதாகவும் எனக்கு தகவல் கிடைச்சிது. உடனே உன்னை என்கிட்ட வர வைக்க ஒரு வழிக் கிடைச்சதும் இண்டர்வியூ நடத்தி அப்புறம் உன்னை அப்பாயிண்ட் பண்ணி என் கூடவே வச்சிக்கிட்டேன் ."


"அதுக்கப்புறம் நடந்தது தான் உனக்கே தெரியுமே…டேய் மிரு அப்பா என்கிட்ட மாமா தான் பணத்தைக் கையாடல் பண்ணிருக்காருன்னு சொன்னப்ப எனக்கு அவரா இப்படின்னு தோணுச்சு..ஆனால் பொருமையா யோசிச்சப் பிறகு தான் தெரியுது வேற யாரோ இதைப் பண்ணிருக்காங்கன்னு."


"அதான் இனி பிஸ்னஸ் எல்லாம் நானே டேக் ஓவர் பண்ணப் போறேன்.. அந்த கருப்பாடு யாருன்னு கண்டுப்பிடிக்கனும் மாமாவோட சாவுக்கு நியாயம் கிடைக்கனும் என்றவனை கட்டிப் பிடித்துக் கொண்டு ஆனால் எங்க அப்பா அம்மா இனி வர மாட்டாங்களே ஆது நான் என்ன பண்ணுவேன்."


"என் தம்பி, தங்கச்சிங்க என்ன பாவம் பண்ணினாங்க..எங்க அப்பா அம்மா யாருக்கும் கெடுதல் பண்ணலையே.. எங்களை விட்டுட்டு இவ்வளவு சீக்கிரம் போக அவங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு..நம்ம கல்யாணம் கூட யாருக்கும் தெரியாம நடந்துச்சு.." என்று அவன் தோள் சாய்ந்து கதறினாள்.


"ஷ் மிரு ஒன்னும் இல்லைடா இனி நான் இருக்கேன் நாம ரெண்டு பேரும் உன் தம்பி தங்கைகளை இனி பார்த்துக்கலாம் சரியா" என்று கூறினான் அப்பொழுதும் அவள் முகம் தெளியாமல் இருக்கவும் "மிரு இங்க பாருடா நாளைக்கு நாம எல்லாரும் நம்ம வீட்டுக்குப் போறோம்" என்ற குண்டைத் தூக்கிப் போடவும் அதிர்ந்தாள்.


"நான் வரலை"


"ஏன் என்னாச்சு..நான் நமக்கு கல்யாணம் ஆனதை சொல்லிக்கிறேன் அதுக்காக பயப்படாத சரியா" என்றதும் "இல்லை வேண்டாம் நான் வரலை" என்று திரும்பத் திரும்ப அதையே கூறினாள்.


அதில் கடுப்பானவன் அவளைத் தூக்கிக் கொண்டு "நீ என்ன சொன்னாலும் உன் கை காலக் கட்டியாவது வீட்டுக்குத் தூக்கிட்டுப் போவேன்… இறுதியாக நாம எல்லாரும் நாளைக்கு நம்ம வீட்டுக்குப் போறோம் டாட் " என்று அவள் பம்மில் ஒரு தட்டுத் தட்டி அவளுடன் குளியறைக்குள் நுழைந்தான்.


அவன் குளியலறைக்குள் தன்னை தூக்கி செல்லவும் அடுத்து என்ன நடக்கும் என்று அறிந்தவள் "ஐயோ படுத்துறானே.." என்று மனதிற்குள் அலறியவள் "டேய் விடுடா, ஏன் இப்படி பண்ற விடுடா எரும மாடு பன்னி" என்று திட்டினாள்.


"பேசாம இருந்தினா சேதாரம் கம்மியா இருக்கும் வசதி எப்படி" என்று கேட்டதும் "விடுடா எதுக்கு இப்போ என்னை தூக்கிட்டு வந்த நான் தான் உன்னை பிடிக்கலன்னு சொல்றேன்ல" என்று கையால் அவன் முதுகில் அடித்துக் கொண்டே கால்களை உதறினாள்.


அவளை சுற்றி இருந்த கைகளைக் கொண்டு அவளைத் தன்னோடு இறுக்கினான்.அவள் ரொம்ப துள்ளவும் தன் முகத்தருகே இருந்த இடுப்பில் பல் பதிய கடித்தான்.அவன் கடித்ததில் துள்ளியவள் அவன் தோளில் கடித்து வைத்தாள்.


(டேய் ரெண்டு பேரும் நாயா மாறிட்டீங்களாடா மாறி மாறி கடிச்சுக்குறீங்க…)


அவள் கடித்ததில் அலறியவன் அவளை இறக்கி விட்டு குனிந்து நெஞ்சில் சதைப் பற்றான இடத்தைக் கடிக்கவும் "ஹம்மா" என்று கத்தியவள் அவன் முகத்தை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டாள். 


அவள் தன்னை அணைத்ததும் முகத்தை அங்கேயே அழுத்திப் புரட்டியவன் "மினி பேபி" என்கவும் அவளுக்கு மண்டையில் அலாரம் அடித்தது.


"ஐயோ!" என்று மனதிற்குள் அலறியவள் அவனை எப்படியாவது தன்னிடம் இருந்து விலக்க பார்த்தாள்.அவன் மினி பேபி என்று அழைத்தால் அடுத்து என்ன நடக்கும் என்று இந்த மூன்று மாதத்தில் அறிந்திருந்தாள்.


"ஏய் பன்னி மாடு நகருடா" என்று அவனை தள்ளி விட்டாள்.."என்ன மரியாதை எல்லாம் பலமா இருக்கு பயம் விட்டுப் போச்சா?" என்றவாறு தன் தாடையைத் தடவிக் கொண்டு அவளை பார்த்தவாறு கேட்டான்.


"உன்னை பார்த்து எனக்கெதுக்கு பயம் நீ என்ன பெரிய புலியா சிங்கமா போடா" என்று உதட்டைச் சுழித்துக் கொண்டு நக்கலாகக் கூறினாள். "ஓ..அப்போ பயம் இல்ல சரி அதையும் பாத்துருவோம்" என்றவன் நொடியில் ஷவரைத் திறந்து விட்டு அவளை இழுத்து இதழை அணைத்து அவளையும் தன்னுடன் அணைத்துக்கொண்டு ஷவரின் அடியில் நின்றான்.


மேலிருந்து தண்ணீர் கொட்ட இருவரும் அதில் நனைந்தவாரு நின்றிருக்க காஞ்ச மாடு சோலைக் காட்டில் புகுந்தது போல எழு நாட்களாக ஏங்கிப் போயிருந்த அவள் இதழ் தேனை ஒரு சொட்டு விடாமல் பருகிக் கொண்டிருந்தான்.


அவளுக்கோ திடீரென்று தலையில் தண்ணீர் கொட்ட அவள் சுதாரிப்பதற்குள் இதழை சிறைப் பிடித்து மூச்சு முட்ட வைத்தான்.சிறிது நேரத்தில் அவளிடம் இருந்து பிரிந்தவன் அவள் முகத்தை ரசித்துப் பார்த்தான்.


அவன் பிரிந்ததும் அப்பாடி என்று மூச்சு விட்டவள் 'எருமை மாடு எப்படி முத்தம் கொடுக்கிறேன்னு நாக்கை கடிச்சி வச்சிருக்கான் பாரு' என்று தன் ரோஸ் நிற நாக்கை வெளியே நீட்ட சிங்கம் பாய்ந்து விட்டது.


பிறகென்ன சும்மா இருந்திருக்கலாம் என்று தன்னையே நொந்துக் கொண்டாள் அவனை பற்றி தெரிந்தும் மறந்து அவன் முன் இவ்வாறு செய்தது என் தப்பு தான் என்று தன்னையே அர்ச்சித்துக் கொண்டாள் அனுபவி என்று..


அவன் அவளின் ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாக கவனித்து அவளைத் தூண்டி விட்டு அவன் பாணியில் அனைத்தையும் செய்து முடிப்பான். இதில் ஏழு நாள் பட்டினிக் கிடந்தவன் இல்லையா.. பாய்ந்து விட்டான்.


அவன் முத்தமிட்டதில் முகம் சிவக்க நீரில் நனைந்த பன்னீர் ரோஜா போல் நின்றிருந்தவளை ரசித்துக் கொண்டிருந்தவன் அவள் நாக்கை வெளியே நீட்டவும் சித்தம் கலங்க பித்தம் தலைக்கேற மோக கடலில் மூழ்கிட பாய்ந்து விட்டான்.


அவளை ஒரு வழி ஆக்கியவன் மேலும் முன்னேற போக வெளியில் இருந்து பாட்டி குரல் கேட்டது.. "மிருணா மிருணா" என்று அவளை அழைத்தார்..அது வரையில் இருந்த மாய வலை அறுந்து விழ அவனிடம் இருந்து வேகமாக பிரிந்தவள் "வரேன் பாட்டி குளிச்சிட்டு இருக்கேன்" என்று கூறியவள் "ஆது வெளியே போ நான் குளிச்சிட்டு வரேன்" என்று கூறினாள்.


"முடியாது என்னை குளிக்க வை அப்புறம் நீ குளிக்கலாம்" என்று அடமாக நின்றான். இப்பொழுது ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அவனை குளிக்க வைத்தாள்..அப்பொழுதும் அவன் சும்மா இருக்கவில்லை அவளை வருடி துள்ள விட்டு சீண்டிக் கொண்டு இருந்தான்.


ஒரு வழியாக அவனை குளிக்க வைத்து வெளியில் தள்ளி கதவை அடைத்துக் கொண்டாள்.. பின் தன் பேகில் இருந்து டிரெஸ் எடுத்து போட்டுக் கொண்டவன் வெளியில் சென்றான்.அவனை எதிர்ப்பார்க்காத பாட்டி "எப்போ மாப்பிள்ளை வந்தீங்க காஃபி சாப்பிடுறீங்களா?" என்று கேட்டார்.


"அதிகாலையிலேயே வந்துட்டேன் பாட்டி மிரு குடுத்தா அவ குளிச்சிட்டு இருக்கா.. இப்போ வந்துருவா" என்றவன் சில பல விஷயங்கள் அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.


இங்கு அறையில் குளித்து விட்டு வந்தவள் வெளியில் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தவள் இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை என்று கொனட்டிக் கொண்டாள்.


அவள் வந்ததும் மூவரும் சாப்பிட்டு விட்டு பாட்டி அவர் அறைக்கு போக இருவரும் மிரு அறைக்கு வந்தனர். அவனை பார்த்து "எப்போ திரும்ப போற?" என்று கேட்க "ஓய் உனக்கு அம்னீஷியாவா? நான் இனி அங்க போறதா இல்ல எல்லாம் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்."


"இனி இங்க தான் நாளைக்கு நாம எல்லாரும் நம்ம வீட்டுக்குப் போறோம்" என்று திட்டவட்டமாகக் கூறினான்.


பின் அன்று மாலை அனைவரும் வந்தவுடன் அவன் சொன்ன கதையைக் கேட்டு வாயில் கை வைத்தாள் மிரு 'அடப்பாவி' என்று.


ஆதி அந்தமாகும்..