ஆதி அந்தம் - 2


 

2


"என் பிள்ளை இன்னைக்கு காலையில் தான் வந்தான்.. வந்தவன் வீடு கூட தங்காம எங்கேயோ போறேன்ன்னு சொல்லிட்டு கிளம்பி போனவனுக்கு இப்படியா நடக்கணும்.."


"ஐயோ ஆண்டவா.. என் பிள்ளைக்கு இப்படியா நடக்கணும்.. போயிட்டு வரேன்னு சொல்லும் போதே நான் தடுத்து நிறுத்தி இருக்க கூடாதா.."


"இப்போ இப்படி படுத்து கிடக்குறானே.. கடவுளே.. என் பிள்ளைய காப்பாத்து.. அவனுக்கு ஏதும் ஆக கூடாது.."


"உனக்கு உயிர் வேணும்னா என்னோடத எடுத்துக்கோ.. என் பிள்ளைக்கு எதும் ஆக கூடாது.. நான் இனி வாழ்ந்தா என்ன..? செத்தா என்ன..?"


"ஐயோ.. எவ்ளோ ரத்தம்.. கடவுளே உனக்கு கண்ணில்லையா.. அவன் யாருக்கு என்ன துரோகம் செஞ்சான்..அவனை போய் இப்படி படுக்க வச்சுட்டியே…"


"என் பிள்ளை ஒரு சுகமும் இன்னும் கண்டதில்லையே.. அதுக்குள்ள என்ன அவசரம்னு இப்படி அவனை படுக்க போட்டுருக்க" என்று அந்த வராண்டாவில் யார் பேச்சையும் கேட்காமல் ஆதித்தனின் ரத்தக்கரை படிந்த சட்டையை கைகளில் வைத்துக் கொண்டு தன் நெஞ்சில் அடித்து கொண்டு அழுதார் சரளா..


வாய்க்கு நூறு தரம் என் பிள்ளை என் பிள்ளை என்று சொல்றாரே..இவங்க தான் ஆதித்தானோட அம்மாவா..


இல்லவே இல்லை.. சரளா அவனுடைய அத்தை.. ஆதித்தன் சிறு வயதில் இருக்கும் பொழுது ஒரு விபத்தில் அவனது தாய் சீதா காலமாகியிருக்க சிறு வயதில் இருந்து ஆதித்தனை வளர்த்தவர் சரளா தான்..


வெங்கடேசனின் கூட பிறந்த தங்கை தான் சரளா..


சரளாவிற்கு தன் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்த சபாபதியை மணம் முடித்து வைத்தார் வெங்கடேசனின் தந்தை..


சபாபதியும் பெரிய இடம் என்று பல்லை இளித்து கொண்டு இவனும் அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட அவர்களின் திருமணம் ஜரூராக நடந்து வீட்டோட மாப்பிள்ளையாக வந்து விட்டார்…


சரளா சபாபதி இருவருக்கும் கிருபாகரன் என்ற ஆணும் மாலதி என்ற பெண்ணும் இருந்தனர்..


இருவருக்குமே தன் தந்தையை போலவே அந்த நரி குணம் இவர்களிடம் தாராளமாக இருந்தது..


கிருபா எப்பொழுது இந்த கம்பெனிகளின் தலைமை பொறுப்பை ஏற்கலாம் என்று காத்து கொண்டிருக்க மாலதி எப்பொழுது ஆணழகன் ஆதித்தனை மணம் முடிக்கலாமென்று காத்து கொண்டிருந்தாள்..


சிறுவயதிலேயே அம்மாவை இழந்த ஆதித்தன் தாய் பாசத்திற்காக ஏங்க அப்பொழுது தான் சரளா திருமணமான புதிது..


தன் பிள்ளை போலவே ஆதித்தனை வளர்க்க இது பிடிக்காத சபாபதி வெங்கடேசனிடம் "மச்சான் புள்ளைய இப்போவே நல்ல ஸ்கூலாஹ் சேர்த்து விடுங்க அப்போதான் நல்லா படிப்பான்.."


"அப்பொழுது தான் இந்த கம்பெனியை ஆளும் திறமையும் பொறுப்பும் வரும்.." என்று அவர் காதில் ஓத தன் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த வெங்கடேசன் இன்னும் "ஒரு ரெண்டு வருஷம் போகட்டும்.." என்று கூறி விட்டு அத்தோடு முடித்துக் கொண்டார்..ஒரு வருடம் கழித்து சரளாவிற்கு குழந்தை கிருபாகரன் பிறக்க அவனை பார்த்து கொள்வதில் கவனமாக இருந்தவள் ஆதித்தனை பார்க்க மறந்து விட்டாள்.


மறந்து விட்டாள் என்பதை விட மறக்கடிக்க பட்டாள் என்பதே உகந்ததாகும்…


ஆம்.. சபாபதி எப்பொழுதும் சரளாவுடன் இருந்து கொண்டு அவர் ஆதித்தனை அழைத்து வருமாறு கூறினாலும் "நான் போய் பார்த்துக்குறேன்மா நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு…"


"நைட் எல்லாம் இவன் உன்னை தூங்கவே விட வில்லை.. நீ கொஞ்ச நேரம் படு.. நான் அவனை பார்த்துக்குறேன்" என்று கூறிவிட்டு வெளியே வந்தால் அவனை என்ன என்று கூட கண்டு கொள்ள மாட்டார்..


ஆதித்தனே தன் அத்தை அறைக்கு சென்றாலும் "அவ இப்போ தான் தூங்கினா போய் டிஸ்டர்ப் பண்ணாத" என்று அவனை போகவே விட மாட்டார்..


வெங்கடேசன் மனைவி இறந்த துக்கத்தில் அறையை விட்டே வருவதில்லை..


தனக்கொரு மகன் இருக்கிறான் என்பதையே மனைவியின் மரணத்தில் மறந்தவர் போல அறைக்குள்ளே இருக்க ஆதித்தனை கண்டு கொள்ள அவ்வீட்டில் யாரும் இல்லை..


என்றும் தனிமையை விரும்பாத ஆதித்தன் தனிமைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப் பட்டான்..


இதை தனக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்ள நினைத்து சபாபதி ஒரு நாள் வெங்கடேசனின் அரை கதவை தட்டினார்..


"யாரு?" என்ற குரல் கேட்டது..


"மச்சான் நான் தான்.."  


"வாங்க சபாபதி.."


உள்ளே வந்தவர் அவர் அருகில் அமர்ந்து கொண்டு "இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி இருக்க போறீங்க.."


"உங்களுக்கு ஒரு பிள்ளை இருக்கான் மறந்து போச்சா.. நீங்க இப்படியே அறைக்குள்ளே அடைஞ்சி கிடந்தா அவன் நிலமையை யோசிச்சு பார்த்தீங்களா..?"


அப்பொழுது தான் தன் மகன் நியாபகமே வெங்கடேசனுக்கு வந்தது..


அவர் அமைதியாக இருக்கவும் அதை பயன்படுத்தி கொள்ள நினைத்தவர் "மச்சான் என் தங்கச்சியை கட்டிக்கோங்க மச்சான்.."


"உங்களை நல்ல படியாக பார்த்துக்குவா.." என்று தன் தங்கையை எப்படியாவது அவருக்கு கட்டி வைத்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு கூற வெங்கடேசன் ஒரே நிலையாக நின்று விட்டார்..


"இல்லை மச்சான்.. எனக்கு இன்னொரு கல்யாணம் வேண்டாம்.. எனக்கு என் பையன் இருக்கான்.. என் காலம் முழுக்க அவன் போதும்.."


அவர் அத்தோடு முடிந்தது போல் தன் மகனை தேடி வெளியே சென்றார்…


இங்கு சபாபதி "ச்சே.. ரொம்ப பெரிய உத்தமன்.. எப்படியாவது தங்கச்சியை கட்டி கொடுத்து ஆட்டையை போடலாம்னு பார்த்தா இவன் ரொம்ப பேசுறான்.." என்று தன் வேலை முடியவில்லை என்ற கோபத்தில் திரும்பி சென்றார்.


அதன் பிறகு தன் மகனுடன் நேரத்தை செலவு செய்ய தன் தந்தை வந்து தன்னுடன் விளையாடவும் தன் தோழனாக அவரையும் தன் விளையாட்டில் இணைத்து கொண்டவன் அப்பா என்பதை விட தோழனாகவே அனைத்தையும் பகிர்ந்து கொண்டான்..


வெங்கடேசனும் இனி தன் சகலமும் மகனே என்று மனதில் ஏற்றியவர் அவன் கேட்டது கேட்காதது அனைத்தையும் வாங்கி குவித்தார்..


அவன் சந்தோஷம் மட்டுமே பிரதானம்.. மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம் தான் அவருக்கு..


ஆதித்தனும் வளர அனைத்தும் அவனுக்கு கிடைத்தது.. அவன் என்ன நினைக்கிறகினோ அதை அனைத்தையும் செயல் படுத்தினார்..


ஆனால் இதுவரை அந்த தாய் பாசம் மட்டும் அவனுக்கு கிட்டவே இல்லை..


தன் தாய்க்காக மிகவும் ஏங்கி போனான்.. அந்த விடயத்தில் அவன் மிகவும் ஏழை தான்..


எப்பொழுதும் "ஏன் ம்மா இவ்ளோ சீக்கிரம் என்னை விட்டுப் போன..? ஏதோ பெரிய சர்ப்ரைஸ் சொல்ல போறேன்னு சொன்னீங்களே அதை சொல்லாமல் ஏன் போனீங்க எனக்கு உங்களை ரொம்ப தேடுது.." என்று அவரது புகை படத்தை பார்த்து கேட்பான்..


அதற்கு சிறு புன்னகை தான் எப்பொழுதும் அவரது பதில்..


சிறுவயதில் இருந்து அனைத்தும் கிடைக்க பெற்றவனுக்கு அவன் நினைத்தது கிடைக்க வில்லையெனில் அதை எப்படியாவது தன்னிடம் கொண்டு வரும் வித்தை அறிந்தவன்…


இவன் இங்கு வளர்ந்து வந்து கொண்டிருக்க அங்கு ஒருவன் தன் மகனிடம் "தம்பி உன் அத்தை இறந்து போனதுக்கு அவங்க ரெண்டு பேரும் தான் காரணம் அவங்களை சும்மா விடக் கூடாது.."


"அவங்களை உருத்தெரியாம அழிச்சுடனும்.." கூற "ஹிம்ம் சரிப்பா" என்று அவனும் தன் தந்தையிடம் வாக்களித்தான்..


அவன் தன் அத்தையின் புகை படத்தை தொட்டு தடவி "உனக்கு கண்டிப்பா நியாயம் கிடைக்கும் அத்தை.. உன்னை கொன்னவங்களை நான் சும்மா விட மாட்டேன்.."


அப்படி கூறிய சிறுவனின் முகத்தில் கொலை வெறி தாண்டவம் ஆடியது..


தாயில்லாமல் வளர்ந்த தன்னை தாய் போல் மடி சாய்த்து தன்னையும் தன் தங்கையையும் அரைவணைத்தவரை இப்படி கொல்ல அவர்களுக்கு எவ்வாறு மனது வந்தது..


இதை செய்தவர்களை சும்மா விட கூடாது என்று உரிய நேரத்திற்காக காத்து கொண்டிருந்தனர்…


இங்கு ஆதித்தன் தன் தந்தையிடம் தான் மேற்படிப்பிற்கு வெளிநாடு செல்வதாக கூற..


அவர் என்று அவன் ஆசைக்கு தடையாக இருந்திருக்கிறார்..


இருந்தாலும் தன் தந்தையிடம் அனைத்தையும் கூறி விட்டே செய்வான்..


அவன் வெளிநாடு சென்று படிப்பதாக கூறவும் வெங்கடேசனும் "சரிப்ப்பா உன் இஷ்டம்" என்று கூற அவரை கட்டி கொண்டவன் "ஆனால் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ப்பா" என்று கூற "நீங்க ஹிம்ம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க.."


"நான் உங்களை பார்க்க பறந்து வந்துடுவேன்" என்று கைகளால் பறப்பது போல செய்து காட்ட தன் மகனை தன்னுடன் அணைத்து கொண்டார்..


****


இங்கு கேரள மாநிலத்தின் ஆலப்புழாவில் "ஆதி.. ஆதி.. கண்ணா எங்க இருக்க .. நான் உன்னை பார்க்கணும்.."


கண்கள் மூடியிருக்க கண்ணீர் ஆரென பெருக "என்னை விட்டு நீ இருக்க மாட்டியே.." என்று ஒரு ஜீவன் கதறி கொண்டிருந்தது..


****

"அப்பா எங்களுக்கு வரும் பொழுது நிறைய ஸ்னாக்ஸ் எல்லாம் வாங்கிட்டு வாங்க.." என்று ஒருவன் கத்த "டேய் தீனிப் பண்டாரம் இருடா.."


"எப்போ பாத்தாலும் தீனி தீனி தான்.. திங்காம ஒரு நாளும் உன்னால இருக்க முடியாதா.." என்று அவன் தலையில் கொட்ட "டேய் ஏன் டா பிள்ளையை தலையில் கொட்டுற?" என்று தன் பெரிய மகனை அதட்டி..


தன் இளைய மகனை "நீ வாடா ராஜா.. நான் நீ கேட்டதெல்லாம் வாங்கிட்டு வரேன் சரியா.. அம்மா" என்று அழைத்த வேணி பார்வதி வந்ததும் "நாங்க வெளிய போய்ட்டு வரோம் ம்மா.."


"அதுவரைக்கும் பார்த்துக்கோங்க.. பெரியவ டான்ஸ் கிளாஸ் போயிருக்கா.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவா.."


"வந்ததும் கொஞ்சம் சாப்பிட குடுங்க.. பசி தாங்க மாட்டாள்.." என்று தன் அன்னையிடம் கூறியவர் தன் மகள்களிடம் வந்தவர் "பாட்டியை தொந்தரவு பண்ணாம இருக்கணும்.."


"போய் கார்டன்ல விளையாடுங்க.. பாட்டியை டிஸ்டர்ப் பண்ண கூடாது.. அகில் தம்பியை அடிக்காத.. சின்ன பையன் தானே அவனுக்கு என்ன விவரம் தெரியும்.."


"நீ தான் நல்லது கெட்டது சொல்லணும்.. சரியா பத்திரமா இருங்க.. நாங்க போயிட்டு வரோம்.." என்று கிளம்பியவர்களுக்கு தெரியவில்லை..


தாங்கள் வர போவதில்லை என்று.. தன் பிள்ளைகளை பார்க்கவும் போவதில்லை என்று அவர்களுக்கு தெரியவில்லை..


இருவரின் சுகத்திற்கு எத்தனை குடும்பங்கள் அவரவர் அன்பு கொண்டவர்களை இழக்க போகிறார்கள்..


அந்த இருவர் யார்.. எதற்காக இவ்வாறு செய்ய வேண்டும்..?


தங்கள் சுகத்திற்காக யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.. மகன் தாயை இழக்கலாம்..


இன்னும் உலகம் என்னவென்று அறியாத அந்த சிறுவர்கள் தான் தாய் தந்தை இருவரையும் இழக்கலாம்..


அண்ணன் தன் தங்கையை இழக்கலாம்.. யார் வேண்டுமானாலும் எதையும் இழக்கலாம்.. ஆனால் தாங்கள் நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கும் அந்த இருவர் யார்..?


அதன் ஆதியும் அந்தமும் என்ன.. என்பதை ஆதி முதல் அந்தம் வரை கூறும்.


ஆதி அந்தமாகும்…


No comments:

Theme images by RBFried. Powered by Blogger.