வாழ்வு-17:

மாமா இது இவ்ளோ இறக்கமா இருக்கு வேண்டாம் வேற தச்சுக்கலாம் என்றதும் அங்கு கண்ட காட்சியில் மயங்கியவன் அப்போ இது வேண்டாம் கழட்டிடு என்று வேக வேகமாக அவிழ்க்கிறேன் என்று அனைத்துக் கொக்கிகளையும் பிய்த்து எறிந்தான். அவனுக்கு அந்த ஹுக்கை கழட்டத் தெரியவில்லை பாவம் பிடித்து இழுத்ததில் அனைத்தும் தெறித்து விட்டது.. அவன் செயலைத் தடுக்க முடியாமல் மாமா மாமா வேண்டாம் என்று அவனை தள்ள முயன்றாள்.

அவன் மொபைலுக்கு அழைப்பு வரவும் ப்ச் என்ற சத்தத்துடன் அவளை விட்டுப் பிரிந்தவன் எடுத்து ஹலோ என்று உறுமினான். என்னடா அபி அனல் இங்க வரைக்கும் அடிக்குது.. தப்பான நேரத்துல போன் பண்ணிட்டேனோ என்று கேட்டான் ஹர்ஷா. இல்லைடா சொல்லு எதுக்கு டா கால் பண்ணினே என்றதும் ம்ம் அம்மா வராங்களாம் டா அதான் நான் போய் அழைச்சிட்டு வர வா இல்லை நீ போறியான்னு கேட்கத்தான் கால் பண்ணினேன் என்று கூறினான்.

ஹர்ஷா நான் இங்க பேபி வீட்டுக்கு வந்துருக்கேன்.. இங்க டிரெஸ் காமிச்சிட்டு தான் டா வர முடியும் நீ போய் அழைச்சிக்கிட்டு வா இல்லன்னா அப்பாவ போய் அத்தைய கூட்டிட்டு வர சொல்லு... நான் வரும் போது எல்லாருக்கும் டிரெஸ் நம்ம கடையில் இருந்து எடுத்துட்டு வரேன் யாரும் அலைய வேண்டாம்.. என்றதும் ம்ம் சரிடா நீ பொறுமையாவே வா என்று விட்டு போனை அணைத்தான்.

போனை அனைத்து விட்டு பாக்கெட்டில் போட்டவன் தன் பேபியைத் தேடினான். ஆளைக் காணவில்லை என்றதும் பேபி என்று குளியலறைக் கதவைத் தட்டினான். ஹான் மாமா இருங்க வரேன் என்றவள் சற்று நேரத்தில் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.அவளைப் பார்த்து ஏன் பேபி அதுக்குள்ள புடவைக் கட்டின என்று கேட்டதும் அதற்கு பதில் சொல்லாமல் மாமா பசிக்குது என்று கூறினாள்.

சரி வா போகலாம் என்றவன் அவள் கையில் இருந்த பிளவ்ஸை பார்த்தவன் நான் வேற தச்சுக் குடுக்க சொல்றேன் டா என்று கூறியவன் அவளை அழைத்துக் கொண்டு கீழே சென்றான்.பின் அவளை சாப்பிட வைத்து குழந்தைகளுக்கு வாங்கிய ஆடைகளை எடுத்துக் கொண்டு அந்த வீட்டை நோக்கி நடந்தனர்.

மாமா கல்யாணத்துக்கு பசங்களும் வராங்களா என்று கேட்டதும் ஹிம்ம் கண்டிப்பா அவங்க இல்லாமலா என்று கேட்டதும் சந்தியாவிற்கு மனம் நிறைந்து விட்டது. வீட்டை அடைந்ததும் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் இவர்கள் இருவரையும் பார்த்து ஓடி வந்தனர்.

அபிப்பா சந்தும்மா என்று தங்களை நோக்கி ஓடி வந்தவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். எங்க தருணைக் காணும் என்று கேட்க அவனுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அதான் படுத்துருக்கான் என்று கூறியதும் அபி தருணை சென்று பார்த்து விட்டு வந்தான்.

பின் பிள்ளைகளிடம் வாங்கியிருந்த ஆடைகளைக் கொடுத்து போட்டுப் பார்க்க கூறியவன் பின் வாங்கி வந்த இனிப்பு வகைகள் சாக்லேட்ஸ் அனைத்தையும் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தான்.அதனை பார்த்து மாமா எனக்கு என்று கேட்டதும் அச்சோ நான் உனக்கு வாங்கிட்டு வரலைடா பேபி.. என்றதும் கோபத்துடன் திரும்பிக் கொண்டாள்.

பின் பிள்ளைகள் அனைவரும் உடையைப் போட்டுப் பார்த்து சரியாக இருக்கிறது என்று கூறியதும் சரிடா என்று அவர்களை விளையாட அனுப்பி வைத்தவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தவளைத் தன் பக்கம் திருப்பினான்.

விடுங்க மாமா நான் உங்க கூட பேச மாட்டேன் என்று மீண்டும் திரும்பி அமர்ந்து கொண்டாள்.அவன் தன்னை சமாதானப் படுத்துவான் என்று எதிர்ப்பார்த்து ஏமாந்தவள் கோபத்துடன் அவன் பக்கம் திரும்பினாள்.அங்கு அபியோ சாவதானமா ஒரு சாக்லேட்டை பிரித்து ஒரு துண்டை பிட்டுத் தன் வாயில் போட்டுக் கொண்டான்.

மாமா என்று கத்தி அவனிடம் இருந்து பிடுங்கியவள் அதில் ஒன்றை எடுக்கப் போகும் முன் அவள் இதழோடு தன் இதழைப் புதைத்திருந்தான்.பின் சிறிது நேரம் கழித்து இருவரும் வெளியே வர சதாசிவம் இவனை பார்த்து எப்போ அபி வந்த என்றதும் அவன் வந்தது முதல் பிள்ளைகளுக்கு உடைகள் எடுத்து வந்தது வரை அனைத்தையும் கூறினாள்.

பின் சிந்து நேரம் அவரிடம் பேசி விட்டு நான் கிளம்புறேன் தாத்தா என்று விடைப் பெற்றவன் தன் பேபியிடம் வந்து பேபி இன்னும் ஒரு நாள் தான் இருக்கு ஆனால் இந்த ஒரு நாளும் ஓர் யுகம் போலக் கழியுமே என்று வருத்தமாகக் கூறியவன் எப்படியாவது இந்த ஒரு நாள் சீக்கிரமா போகும் பேபி என்று கூறியவன்…

அதுக்கப்புறம் என் பேபி என்னோட கைக்குள்ளேயே இருப்பா அவளை ஒரு நொடி பிரிய மாட்டேன்... யாருக்கும் தரவும் மாட்டேன் என்று உறுதியுடன் கூறினான்.அப்புறம் ஜாலி தான் என்று அவளைப் பார்த்து கண்ணடித்தான்.மாமா தாத்தா இருக்காங்க என்று பத்திரம் காட்டினாள்.

பின் பிள்ளைகளிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான்...அவனை அனுப்பி வைத்து விட்டு வருவதாகக் கூறி அவனுடன் சென்றாள்.மாமா வண்டியில் போகும் போது மெதுவா போங்க சரியா என்றவளிடம் சரி பேபி என்றவன் வண்டியில் அமர்ந்து கொண்டு ஸ்டார்ட் செய்தவன் பாய் பேபி நான் வீட்டுக்குப் போயிட்டு கால் பண்றேன் என்றவன் கிளம்பினான்.

சேகர் தன் தங்கையின் குடும்பத்தை ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று அழைத்து வந்தார். வரும் வழி எல்லாம் என்ன அண்ணா விஷேசம் எதுக்கு குடும்பத்தோடக் கிளம்பி வர சொன்ன என்று கேட்டதும் எல்லாம் அபியைப் பற்றி தான் வீட்டுக்குப் போய் பேசலாம் மா என்று கூறினார்.

கோகிலா அபியைப் பற்றி என்றதும் ஒரு வேளை அபி கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டானோ என்று நினைத்தவர் அதான் அண்ணா வர சொல்லி இருக்காங்க என்று சந்தோஷப் பட்டார். கோகிலாவிற்கு அபி என்றாள் உயிர்… அவருக்கு தெரியாது அவனுக்கு விவாகரத்து ஆன விஷயம் ஏதேதோ சொல்லி மொழுகி வைத்திருந்தனர்..

அவருக்கு ரேவதியை அபிக்கு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை..அபியிடம் பல முறை சொல்லி பாத்தார் அவன் ஒரே பிடியாக வேண்டாம் அத்தை நான் இப்படியே இருக்கேன் என்று கூறி விடுவான்.அவரும் அதற்கு மேல் அவனை தொந்தரவு செய்ய வில்லை விட்டு விட்டார்.

இப்பொழுது தன் அண்ணன் அபியைப் பற்றி என்று கூறவும் கல்யாண விஷயமாக தான் இருக்கும் என்று நினைத்தவர் அப்பாடி இப்போவாச்சும் அபி ஒத்துக்கிட்டானே..அவருக்கு தன் மகளை அபி நன்றாக பார்த்துக் கொள்வான் தன் பெண்ணும் கஷ்டப் படத்தேவையில்லை என்று நினைத்தார்.

ரேவதி 23 வயது பெண் தன் கல்லூரியில் படித்த சீனியர் பையன் ஹரிஷ் என்பவனை இரண்டு வருடமாக காதலித்து வருகிறாள். இந்த விஷயம் அபிக்கும் ஹர்ஷாக்கும் நன்கு தெரியும்..அவள் தங்களிடம் காதலிக்கிறேன் என்று சொன்னதுமே ஹரிஷைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் சேகரித்து விட்டனர்.

பின் அவன் நல்ல பையன் என்கவும் இவர்கள் ஒத்துக் கொண்டனர் நேரம் வரும் போது வீட்டுல சொல்லி கல்யாணம் பண்ணிக்கலாம் என்று கூறியிருந்தார்கள்.

இவர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்ததும் பரமனும் சந்திரா அனைவரும் வந்து உள்ளே அழைத்து சென்றனர். கோகிலாவின் கணவர் சண்முகம் என்ன மாமா விஷேசம் திடுதிப்புன்னு கிளம்பி வர சொல்லிட்டீங்க என்று கேட்டதும் அது ஒன்னுமில்லை மாப்பிள்ளை எல்லாம் நம்ம அபி கல்யாணத்தை பற்றி தான்…

உடனே இப்பொழுதாவது மலை இறங்குனானே நான் கூடப் பிள்ளை கடைசி வரையிலும் இப்படியே இருந்திடுவானோன்னு பயந்துட்டு இருந்தேன்.. நல்லது நடந்தா சரிதான் என்றவரிடம் ஆமாம் அண்ணி அபி ஒத்துக் கொள்ளவே கடைசியா ஹர்ஷிய வச்சி தான் மடக்கினோம்.

பரமன் நாளை மறுநாள் கல்யாணம் என்கவும் ஏதோ கேட்க வந்த கோகிலாவை தடுத்து கோவிலில் தன் நண்பனை பார்த்தது முதல் பின் சந்தியாவைப் போய் பார்த்து விட்டு வந்தது வரை அனைத்தையும் கூறினார். அப்பா நான் அபிக்கு நம்ம ரேவதியைக் கொடுக்கலாம்னு இருந்தேன்.

நீங்க என்னடான்னா எவளோ ஒருத்தியை அதுவும் ஏற்கனவே கல்யாணம் ஆனவளைப் போய் என்று கூறிக் கொண்டிருந்தவரை நானும் ஒரு கல்யாணம் பண்ணி ஒரு குழந்தைக் கூட இருக்கு அத்தை என்று கூறிக்கொண்டே வந்தான் அபி.

அது இல்லை அபி யாரோ வருவதற்கு நம்ம ரேவதி வந்த ஹர்ஷியைத் தங்கமாட்டம் பார்த்துக்குவாளே என்று கூறியவரிடம் அத்தை என் பொண்ணுக்காக இன்னொரு பொண்ணு வாழ்கையை என்னால கெடுக்க முடியாது என்று கூறியவன் ரேவதியிடம் ரேவ் என்னை கட்டிக்கிறியா என்று கண்ணடித்து கேட்கவும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் அவனை பார்த்து முடியாது என்று தலையசைத்தாள்.

அவள் ஆச்சரியமாக பார்த்தற்கும் ஒரு காரணம் உண்டு சிறு வயதில் அபி ரேவதியிடம் நன்றாகத் தான் பேசுவான்..ஆனால் லதா செய்த செயல்களால் பெண்கள் என்றாளே ஒரு நம்பிக்கையின்மை... ஒரு வெறுப்பு யாரிடமும் பேசாமல் இறுகிக் காணப்பட்டான் இந்த எட்டு மாதங்களாக.

அவன் பேசிய ஒரே ஆள் வர்ஷா மட்டுமே..ஏன் சந்திராவே அவனை நெருங்க பயந்தனர். தனக்கென்று ஒரு உற்ற துணை இல்லாமல் பச்சைக் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு தனிமையில் இருந்தது நரகம் அவனை பொறுத்தவரை…

ஆனால் இப்பொழுது தன் பேபியைப் பார்த்ததில் இருந்து அவளால் தனக்கு அனைத்தையும் தர முடியும்.. அனைத்துமாக தனக்கு இருப்பாள். இறுதி வரை தன்னுடன் வருவாள் என்று அவன் உள்மனம் அடித்து சொல்லியது.

தன் பேபியின் மீது மொத்தக் காதலையும் வைத்தவன் தன் இறுக்கம் தளர்ந்தான்…தன் ஆசைகள் அனைத்தையும் தீர்க்க அவள் ஒருத்தியால் மட்டுமே முடியும் என்று அவன் உள்மனம் திட்டவட்டமாக அடித்துக் கூறியது...

(ஏய் மனசாட்சி ரூட்டு போட்டுக் குடுத்ததே நீ தானா. அவன் எதாவது அப்படியே திட்டுற மாதிரி ஒளிஞ்சி நின்னு ரசிக்கிரியே இரு ரீடர்ஸ் உன்னை வச்சு செய்வாங்க….)

அத்தை ரேவதிக்கும் இஷ்டம் இல்லை எனக்கும் இஷ்டம் இல்லை அதும் இல்லாம எனக்கு.. எனக்கு என்று தயங்கியவன் சந்தியாவை பிடிச்சிருக்கு என்று வெட்கப் பட்டுக் கொண்டே கூறினான்.அபி அத்தனை அழகாக இருந்தான். ஆண்கள் வெட்கப் படுவது அரிது..ஆனால் வெட்கப்பட்டால் அகிலம் மெச்சும் அழகு…

மச்சி என்று ஹர்ஷா கட்டிக் கொள்ள தானும் அவனை கட்டி அணைத்து விடுவித்தவன்.. அனைவரும் அபியின் வார்த்தையில் பெரும் நிம்மதி அடைந்தனர்.சந்திராவிற்கு நிரம்ப சந்தோஷம் தன் பிள்ளை வாழ்க்கையைப் பற்றி இனி கவலைப் படத் தேவையில்லை என்று நிம்மதியடைந்தார்.

 அத்தை சந்தியா ஹர்ஷியைக் கண்டிப்பா நல்லா பார்த்துக்குவா..எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.. அதும் இல்லாம அவர்கள் இருபத்தைந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதைப் பற்றியும் கூறினான்…

கோகிலா ஓ இது வேறயா என்று மனதில் ஏளனமாக நினைத்துக் கொண்டவர் வெளியில் சிரித்து வைத்தார். பின் கடையில் இருந்து எடுத்து வந்திருந்த ஆடைகளை ஹர்ஷாவும் அபியும் சென்று எடுத்து வந்தனர்.

பின் தங்களுக்கு பிடித்த உடைகளை அனைவரும் எடுத்துக் கொள்ள மீதி உடைகளைத் தன் கடையில் இருந்து ஆளை அழைத்து வர சொல்லி எடுத்துப் போகப் பணித்தான்.

என் மகள விட அவ அழகோ அப்படி என்ன பேரழிகய இவன் கண்டுட்டான் என்று அவர் ஆசை நிராசை ஆனதில் தன் மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தார்... அங்கு அபியோ தன் அறைக்கு வந்தவன் தியாவிற்கு போனில் அழைத்தான். வீட்டுக்கு போய்ட்டீங்களா மாமா...ஹிம்ம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் டா வந்தேன்...என்று கூறினான்.

எல்லாருக்கும் டிரெஸ் எடுத்துட்டு வந்தேன் டா அதை காமிச்சிட்டு இருந்தேன்..அத்தை வந்துருக்காங்க பேபி அவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தேன் என்று கூறினான். மாமா ஹர்ஷிக்கு டிரெஸ் என்று கேட்டதும் ஹர்ஷிக்கு எடுத்து வந்திருந்த உடையை அவளிடம் எடுத்துக் காண்பித்தான். 

மாமா என்று கூவியவள் இந்த டிரெஸா என்று கேட்டதும் பேபி நமக்கு ஹர்ஷியோட சேர்த்து இருபத்தாறு பிள்ளைங்க அவங்க வேற ஹர்ஷி வேற இல்லை எனக்கு எல்லாமே நம் பிள்ளைகள் தான் என்றதும் எப்பொழுதும் போனில் முத்தம் கொடுத்து சூடாக்கும் வேலை அபியுடையதாகத் தான் இருக்கும் இன்று அந்த வேலையை சந்தியா எடுத்துக் கொண்டாள் போலும்.

ஐ லவ் யூ மாமா பிள்ளைகளை ஏத்துக்கிட்டதுக்கு லவ் யூ... லவ் யூ மாமா என்று கூவியவள் பல முத்தங்களை வாரி இறைத்தாள். அவள் முத்தத்தில் சுகமாக நனைந்து கொண்டிருந்தவன் தானும் லவ் யூ பேபி என்றவன் பல முத்தங்களை வாரி வழங்கினான்.., இருவரும் மாறி மாறி முத்த மழை பொழிந்து வள்ளல் என நிரூபித்தனர்.

(நல்லா ஜோடி சேர்ந்திருக்கீங்கடா ரெண்டு பேரும் முத்தம் கொடுக்கிறதுல வள்ளலா ஐயோ .. கலிகாலம்)

அபி பெண் பிள்ளைகளுக்கு நீலமும் வெள்ளையும் சேர்ந்தார் போன்று பிராக்கும் ஆண் பிள்ளைகளுக்கு அதே நிறத்தில் ஷேர்வானியும் எடுத்துக் கொடுத்திருந்தான், அது போலவே ஹர்ஷிக்கும் எடுத்திருக்க சந்தியா ஹாப்பி அண்ணாச்சி அதன் விளைவு தான் இந்த முத்த மழை... 

அவன் செயலில் கண்கள் கலங்கிய வளைத் திசைத்திருப்ப பேபி நாளைக்கு வேற பிளவுஸ் கொடுத்து அனுப்புறேன் போட்டுப் பாரு என்கவும் மதியம் நடந்தது நினைவு வரவே ச்சி போங்க மாமா என்று வெட்கப்பட்டாள். திரையில் தெரிந்த அவள் முகத்தை ரசித்தவன் பேபி செமையா இருந்துச்சு பேபி என்று மோகத்தில் பிதற்றினான்.

மாமா போதும் பிளீஸ் என்று அவனை அடக்கியவள் சிறிது நேரம் பேசிவிட்டு மனமே இல்லாமல் போனை அனைத்தனர்..

மறுநாள் சதாசிவம் தங்க பக்கத்திலே இருந்த வீட்டிற்கு அவர் உடமைகள் என அனைத்தையும் இடம் மாற்றினர்..அபியின் வீட்டிற்கு பக்கத்திலே இருந்தது அந்த வீடும்.. பின் ஐயர் அதிகாலை ஆறு மணி நல்ல நேரம் என்று குறித்துக் கொடுத்திருக்க பிள்ளைகளுடன் அவர்கள் கோவிலுக்கு வருவதற்கு அபி ஏற்பாடு செய்திருந்தான்.

கல்யாண நாளும் அழகாக விடிந்தது.. பிள்ளைகளை அனைவரும் அந்த கோயிலை சுற்றி சுற்றி விளையாடிக் கொண்டிருக்க இங்கு தேவியும் ரேவதியும் தியாவை அலங்கரித்துக் கொண்டு இருந்தனர்.

மேக்கப் எல்லாம் வேண்டாம் என்றதும் அவள் பேச்சை இருவருமே கேட்கவில்லை அவள் செங்காந்தள் கண்களுக்கு கரு மை தீட்டி அவள் கண்களுக்கு இன்னும் அழகு சேர்ந்தனர்.

அலங்காரம் முடித்து அவளைப் பார்த்த தேவி அண்ணி செம அழகா இருக்காங்க அண்ணா உங்கள பார்த்து அப்படியே மயங்கி விழப் போறாரு என்று கூறினாள்.

(அவன் ஏற்கனவே விழுந்துட்டான்…)

அங்கு விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளை அழைத்து அவரவர் உடைகளை அணிவித்தனர்.அப்பொழுது தருணுக்கு அந்த ஷேர்வாணி சரியாக வரவில்லை அதனால் அவனுக்கு வேறு உடை அணிவித்தனர்.

அதை பார்த்து தருண் அழுதான் எனக்கும் அந்த டிரெஸ் வேண்டும் என்று மற்ற பிள்ளைகள் போட்டிருந்த ஆடையை காட்டி அடம் பிடித்துக் கொண்டிருந்தான்.அப்பொழுது அங்கு வந்து கோகிலா ஏய் எதுக்கு அழுகிற என்று அதட்டினார்.

கூட இருந்த பெண்மணி விவரத்தை சொல்லவும் உனக்குலாம் புது பிரெஸ் ஒரு கேடா அனாதைக் கழுத என்று சின்னப் பிள்ளை என்றும் பாராமல் திட்டினார். பின் அவர் அப்படி பேசவும் அந்த பெண்மணி அவனை தூக்கிக் கொண்டு வந்து விட்டார் சந்தியா இருந்த அறைக்கு…

தருண் அழுகவும் எழுந்து வந்த சந்தியா ஏன் என் தருக்குட்டி அழுகுறாங்க..என்ன ஆச்சு தருக்குட்டி என்று கேட்டதும் அந்த பெண்மணி அனைத்தையும் கூறி கோகிலா பேசியதையும் கூறினாள்.

இந்த அம்மா இப்படி தான் யாருகிட்ட என்ன பேசனும் எப்படி பேசணும்னு தெரியாது என்று தலையில் அடித்துக் கொண்டவள் சந்தியாவிடம் மன்னிப்பு கேட்டு தருணை சமாதானம் செய்தாள். இதைக் கேட்ட தேவி தன் அண்ணனிற்கு குறுஞ்செய்தி போட்டாள் இங்கு வருமாறு..

அவள் அனுப்பியதைப் பார்த்து சந்தியா இருந்த அறைக்கு வந்தவன் பார்த்தது தருண் விடாமல் அழ அவனை பார்த்து கண்கள் கலங்க சமாதானப் படுத்திக் கொண்டிருந்த தன்னவளை தான்.. என்ன என்று விஷயத்தைக் கேட்டுத் தெரிந்துக் கொண்டவன் போன் போட்டான்.

அன்று உடைப் போட்டு சரிப்பார்த்த பொழுது தருணுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவனுக்கு போட்டுப் பார்க்கவில்லை.

போன் பேசிவிட்டு தியாவிடம் இருந்து தருணை தூக்கிக் கொண்டு வெளியில் வந்தவன் இன்னும் கொஞ்சம் நேரத்தில் டிரெஸ் வந்துடும் ஒன்னும் இல்லைடா கண்ணா அழாத என்று கண்களைத் துடைத்து விட்டான்.

சிறிது நேரத்தில் ஒருவர் புது உடையைக் கொண்டு வந்து கொடுக்க அதில் இருந்த சாக்லேட்டை எடுத்து அவனிடம் நீட்டியவன் போட்டிருந்த உடைகளைக் கலைந்து புது உடையை அணிந்து விட்டான்.

அழகா இருக்க தருக்கு படி என்கவும் சிரித்தவன் அபியின் கன்னத்தில் முத்தம் கொடுத்தான். பின் அவனை கையில் ஏந்திக் கொண்டு சந்தியாவின் அறைக்கு சென்று கருணை அவளிடம் விட்டான். நான் இருக்கும் போது நீ எதுக்கும் அழாத பேபி என்றவன் அவள் கன்னத்தைத் தட்டிக் கொடுத்து சென்றான்.

ஐயர் நேரம் ஆயிடுச்சு என்று கூறியதும் அபியை முதலில் அழைத்து அமர வைத்து மந்திரம் சொல்ல ஆரம்பித்தார்.சிறிது நேரத்தில் பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ என்று கூறவும் தியாவை அழைத்து வந்தனர்.

அன்று அவள் மேல் போட்டுப் பார்த்த மெரூன் கலர் காஞ்சிப் பட்டில் தேவலோக மங்கையென ஜொலித்தவளை விட்டு அவன் கண்களை அங்கும் இங்கும் அசைக்க முடியவில்லை. இப்பொழுது விட்டாலும் அப்படியே தூக்கிட்டுப் போகும் நிலையில் தான் இருந்தான்.

பின் அபியின் அருகில் அமர்ந்து அவனை ஒரு பார்வைப் பார்த்தவள் குனிந்துக் கொண்டாள். பின் இருவரும் ஐயர் கூறிய மந்திரத்தை பின்பற்றி சொல்லி ஐயர் தாம்புலத்தை நீட்ட மங்களநாணை எடுத்தவன் தியாவின் கழுத்தில் மிகுந்த காதலுடன் அணிவித்தான்.

பின் இருவரும் பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கினர். அப்பொழுது அந்த கோவிலில் வேலை செய்யும் ஒருவர் இந்த கோயிலில் கல்யாணம் பண்றவாளுக்கு எல்லாருக்கும் இரட்டைக் குழந்தை பிறக்கும் என்று சொல்லி சென்றார்.

சந்தியாவின் காதருகே குனிந்தவன் பேபி அப்போ பர்ஸ்ட் ரெண்டு செகண்ட் ரெண்டு மொத்தமா சேர்த்தா முப்பது கரெக்ட்டா இருக்குல்ல என்று கேட்கவும் ஐயோ மாமா கோவில் இருந்துக்கிட்டு என்ன பேசுறீங்க என்று அவன் கையில் ஒரு அடிப் போட்டாள்.

அந்த சந்தோஷத்தை கோகிலா தன் ஆஸிட் வார்த்தைகளால் உருக்குலைத்தார். அன்று இரவு சந்தியாவை அபியின் அறைக்கு அனுப்பி வைக்கும் போது சந்திரா அபி மனசு நோகாம நடந்துக்கோடா என்று அவள் தலையை வருடியவாறு கூற அருகில் இருந்த கோகிலா சும்மா இல்லாமல் ரெண்டாவது தானே அண்ணி அதெல்லாம் நல்லா தெரியும் என்று கூறினார்.

அவர் அப்படி கூறவும் சந்தியாவிற்கு கண்கள் கலங்கி விட்டது...சந்திரா கோகிலாவை அதட்டியவர் சந்தியாவை அபியின் அறைக்குள் அனுப்பி வைத்தார்..

வாழ்வு சிறக்கும் ….

வாழ்வு -18:

பிள்ளைகள் அனைவரும் ஒரே உடை அணிந்து அத்தனை அழகாக இருந்தனர்...அபி கல்யாணம் முடிந்ததும் அனைவரையும சரவண பவன் உணவகத்திற்கு அழைத்து சென்றான்..

குடும்பமாக அமரும் நீடை டேபிளை ஏற்கனவே அபி பதிவு செய்திருக்க அதில் பெரியவர்களை அமர வைத்து ஹர்ஷாவை அவர்களைப் பார்த்துக் கொள்ளும் படி சொல்லி விட்டு இங்கு பிள்ளைகளுக்கென பதிவு செய்திருந்த தனி அறைக்கு அனைவரையும் அழைத்து சென்றான்.

ஹர்ஷி சந்தியாவை விட்டு இறங்க மாட்டேன் என்று ஒற்றே அடம்.. அவள் இடுப்பை விட்டு இறங்க மாட்டேன் என்று அடம்பிடித்தாள் அவள் நெஞ்சில் தலை சாய்ந்து கொண்டு யாரிடமும் வா மாட்டேன் என்று தலையை ஆட்டி அடம் பிடித்துக் கொண்டிருந்தாள்.

காலையில் இருந்து பிள்ளை சோர்ந்தார் போல் தான் இருந்தாள்.. எதுவும் சாப்பிடவும் சந்தியா பாட்டிலில் இருந்த பாலைக் கொடுத்தாலும் குடிக்க வில்லை. ஹர்ஷாவிடம் காட்ட ஒன்றுமில்லை என்று கூறினான் அதிகாலையில் எழுந்ததாக இருக்க வேண்டும் தூங்கினால் சரியாகி விடும் என்றான்.

பின் பிள்ளைகளை அமர வைத்து அனைவருக்கும் கொஞ்சமாக உணவை ஆர்டர் பண்ணி சாப்பிட சொன்னவன் பின் அவர்களுக்கு பிடித்த இனிப்பு என்னவென ஒவ்வொருவரிடமும் கேட்டு அதை ஆர்டர் செய்து சாப்பிட வைத்தான்.

பின் சந்தியாவை அமர வைத்து அவர்களுடனே சாப்பிட வைத்தவன் நீங்களும் சாப்பிடுங்க மாமா என்று அவனையும் அமர வைத்து உண்ண வைத்தாள். ஹர்ஷிக்கு ஊட்ட போனவனின் கையை தன் கைகளில் தள்ளி கை சந்தியாவின் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

குட்டிமா அது என்னோட இடம்.. என்கவும் மாமா.. என்று பிள்ளைகளைக் காட்டி அடக்கினாள்.அப்போ ஊட்டி விடு பேபி என்கவும் பிள்ளைகளை பார்க்க அவர்கள் தங்களுக்குள் பேசி சிரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.பின் அவனுக்கு ஊட்ட இவன் அவளுக்கு ஊட்ட என்று அந்த நேரம் அழகாக சென்றது.

பின் பிள்ளைகளையும் அங்கு சமைத்து போரும் இரண்டு பெண்களையும் அவர்களுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தவன் தன் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றான். வீட்டிற்கு வந்தவுடன் சந்திரா ஆரத்திக் கரைத்து எடுத்து வந்து ரேவதியிடம் கொடுக்க அவள் எடுத்தாள்.

அபி அத்தான் பெருசா போடனும் எடுங்க எடுங்க என்று இருவருக்கும் திலகமிட்டவள் கையை அவனை நோக்கி நீட்டினாள். சந்தியாவும் சிரிக்க அபி தன் பர்சை எடுத்து அப்படியே தட்டில் போட்டான். வாவ் வாலட் செம உள்ள இருக்கிற பணம் கிரடிட் கார்ட் எல்லாம எனக்கு தான் என்று சிரித்துக் கொண்டே வெளியில் கொட்ட சென்றாள்.

பின் சந்தியாவை வலது கால் எடுத்து உள்ளே வருமாறு கூறிய சந்திரா அவள் வந்ததும் பூஜை அறைக்கு சென்று விளக்கேற்ற சொன்னார். பின் அவள் விளக்கேற்றிவிட்டு இருவரும் இறைவனை வணங்கி விட்டு வந்தனர்.பின் பாலும் பழமும் கொடுக்க இதையெல்லாம் வேண்டா வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தார் கோகிலா.

பின் இருவரையும் கொஞ்ச நேரம் தூங்குங்க என்று அறைக்கு அனுப்பி வைத்தனர் ஹர்ஷியை அபி வாங்கிக் கொண்டு மூவரும் அபியின் அறைக்கு சென்றனர். அவர்கள் சென்றதும் பரமன் சதாசிவத்துடன் அவர் வீட்டுக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு சென்றார். இங்கு கோகிலாவும் சண்முகமும் ஓய்வெடுக்க தங்கள் அறைக்கு வந்தனர்.

என்ன கோகி உன் முகமே சரி இல்லையே என்ன ஆச்சு என்கவும் ஒன்னும் இல்லைட்க என்றவரைப் பார்த்து அவர் மனதை சரியாக கணித்தவராக கோகி உன் ஆசை புரியுது ஆனால் பிள்ளைகளுக்கு பிடிக்காம கல்யாணம் பண்ணி வச்சு எதுக்கு அவங்க வந்க்கையை வீணாக்கனும்.. நீயே பார்த்த தானே அபி எவ்ளோ சந்தோஷமா இருக்கான்னு அவன் முகத்தைப் பார்த்தாலே தெரியலையா உனக்கு..,

ஹர்ஷியும் அந்த பெண்ணை விட்டு யாருக்கிட்டயும் போக மாட்டுற நம்ம ரேவதி கிட்டக் கூட அவ்ளோ க்ளோஸா இல்ல ஆனால் சந்தியா கிட்ட இயல்பா ஒட்டிக்கிட்டா.. சந்தியாவும் நம்ம பொண்ணு மாதிரி தான் உன் பெண்ணா அவளை நினைச்சுக்கோ எல்லாம் சரியா போய்டும் என்று கூறவும் ம்ம் என்று தலையை ஆட்டிக் கொண்டார்.

இங்கு ஹர்ஷாவும் தேவியும் அத்தான் நீங்க இந்த டிரஸ்ல செமயா இருக்கீங்க என்று அவன் ஷேவ் செய்த தாடையை விரல்களால் வருடியவாறு கூறினாள். ஏய் ஜாங்கிரி நீ மட்டும் என்னவாம் இந்த லெகங்கால்ல நச்சுன்னு இருக்க என்று அவள் இடையில் கைக் கொடுத்து இழுத்து தன்னுடன் சேர்த்தணைத்தவன் நான் எப்போ இந்த ஜாங்கிரிய சாப்பிடுறதுன்னு ஆவலா இருக்கேன்டி என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

அவனோடு இன்னும் ஒண்டியவள் ரேவதி கல்யாணம் முடிஞ்சதும் நம்ம கல்யாணம் வைக்கலாம்னு அம்மாவும் அத்தையும் சேபிக்கிட்டாங்க அத்தான் என்று அவனிடம் கூறினாள்.. ஹிம்ம் சீக்கிரம் அவளுக்கு கல்யாணத்தை முடிக்கனும் அப்போ தான் நான் சிக் ஜாங்கிரி சாப்பிட முடியும் என்று அவள் ஆப்பிள் கன்னத்தைக் கடித்து சுவைத்தான்.

அத்தான் சென்னை எப்போ கிளம்புறீங்க என்று சோகமாக கேட்டதும் அவள் முகத்தை வருடிக் கொண்டே இனி போக மாட்டேன் டா இனிமே இங்க தான் ஹாஸ்பிட்டல் கட்டலாம்னு பிளான்ல இருக்கேன். அதும் இல்லாம இனிமே உன்னை பிரிஞ்சு இருக்க முடியாது சோ இங்கேயே ஹாஸ்பிட்டல் கட்டுற வரைக்கும் வேற ஹாஸ்பிட்டலில் பிராக்டிஸ் பண்ணனும் என்று கூறியதும் ஐய் சூப்பர் மாமா இனிமே நீங்க இங்க தான் இருப்பீங்களா என்று அவனை தன்னுடன் அணைத்துக் கொண்டு தன் சந்தோஷத்தை அவனுக்கு உணர்த்தினாள்.

இங்கு அபியின் அறைக்குள் வந்தவர்கள் ஹர்ஷி சந்தியாவிடம் தாவ இருடா அம்மா டிரெஸ் மாத்திட்டு வரேன் என்று அவள் கன்னத்தில் முத்தமிட அபியும் தன் கன்னத்தைக் காட்டவும் ஆனா நீங்க ரொம்ப பண்றீங்க மாமா என்று சலித்தவள் இரண்டு கன்னத்திலும் கொடுத்து விட்டு தன் பெட்டியில் இருந்த உடைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு ஓடி விட்டாள்.

அவள் செயலில் சிரித்தவன் ஹர்ஷியிடம் என்னடா செல்லம் பண்ணது என்று கேட்கவும் உதட்டைப் பிதுக்கி கையைத் தூக்கி ஆட்டியவள் அவன் நெஞ்சில் சாய்த்து கொண்டாள்.தியா பட்டுப் புடவையைக் கலைந்து விட்டு வேறு சாதாரணப் புடவைக்கு மாறியவள் வெளியில் வந்து ஹர்ஷியை வாங்கிக் கொண்டாள்.

நான் போய் பிரஷ் ஆகிட்டு வந்துடுறேன் பேபி என்று கூறிவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான். ஹர்ஷியைத் தன் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்துக் கொண்டே அந்த அறையைப் பார்த்தாள். ஒரு சோஃபா செட்டுடன் டீபாயும் ஒரு கபோர்டும் ஒரு சைடில் இருக்கவே கொஞ்சம் தள்ளி ஹர்ஷி விளையாட அனைத்து விளையாட்டு பொருட்களும் இருக்கவே அங்கே சென்று அதனை காட்டி கொஞ்சம் புட்டியில் இருந்த பாலை புகட்டினாள்.

சிறிது நேரத்தில் அபி வரவும் அவனிடம் தாவிய ஹர்ஷி மெத்தையைச் சுட