வாழ்வு -19:
அறையில் எந்த ஒரு அலங்கராமும் செய்யவில்லை.. அபி இதெல்லாம் எதுக்கு? ஒன்னும் வேண்டாம் என்றதால் எதுவும் செய்யவில்லை..
கோகிலா ரெண்டாவது தானே அதெல்லாம் தெரியும் என்றதும் சுருக்கென்று தைத்தது சந்தியாவிற்கு.. அர்ஜூன் என்றுமே அவளிடம் கணவனாக ஒரு நாளும் ஒரு பார்வை கூட பார்த்ததில்லை.. சந்தியாவை பொறுத்த வரையில் அர்ஜூன் அவளுக்கு தெய்வம்..ஆம் தன்னை காத்த தெய்வமே..
ஒரு முத்தம் கூட அவன் இருந்த வரையில் இருவரும் பரிமாறிக் கொண்டதில்லை.. ஆனால் இவர் என்னவென்றால் இப்படி சொல்கிறார் என்று மிகவும் வேதனை அடைந்தாள்.. பின் சந்திரா சமாதானம் செய்து அவளை அபி அறைக்கு அழைத்து சென்று விட்டார்..
அவளை எதிர்பார்த்து தன் அறையில் காத்து கொண்டு இருந்தவன் அவள் அறையின் உள்ளே வரவும் எழுந்து சென்று அவளிடம் இருந்து பால் சொம்பை வாங்கி மேசையில் வைத்தவன் அவளை தூக்கி சுற்றினான்.. பேபி என்று அவள் முகத்தில் முத்தமழை பொழிந்தான்.
அவளை இறக்கி விடும் போது தான் பார்த்தான் அவள் கண்கள் கலங்கி இருப்பதை கண்டு என்ன பேபி ஆச்சு.. என்று கேட்டதும் அதற்கு மேல் அடக்க முடியாமல் அவனை கட்டி கொண்டு அழுதாள்..அவள் அழுவது பொருக்காமல் பேபி என்று அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன் என்ன ஆச்சு என்று கேட்டான்.
ஒன்னும் இல்லை மாமா தலை வலி என்று எதோ சொல்லி சமாளித்தவள் பின் தன் கண்களை துடைத்துக் கொண்டவள் மாமா ஹர்ஷி எங்கே எனவும் அவள் படுத்திருந்த இடத்தை காட்டி விட்டு சந்தியாவை தான் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான்..
ஹர்ஷி தன் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்க அவள் தலையை வருடி விட்டவள் கட்டிலில் வந்து அமர்ந்தாள்.அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் அருகில் அமர்ந்து என்ன ஆச்சு பேபி என்று கேட்டான்.
அவள் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை.. இப்போ சொல்ல போறியா இல்ல நான் அம்மா கிட்ட போய் கேட்கவா என்று கோபமாக வந்தது அவன் வார்த்தைகள்..அவன் கோபத்தில் பயந்தவள் ( இதுக்கே பயந்தா என்ன பேபி நாளைக்கு இது சும்மா டிரெய்லர் தான் நாளைக்கு தான் மெயின் பிக்சரே…)
கோகிலா கூறியதை சொன்னதும் பற்களை கடித்து கொண்டு விருட்டென்று எழுந்தவனை பிடித்துக் கொண்டு மாமா அவங்க சொன்னது உண்மை தானே நா ரெண்டாவது தானே என்று எங்கு அவன் கோபப்பட்டு எதாவது செய்து விடுவானோ என்ற பயத்தில் அவ்வாறு சொன்னாள்…
அதை கேட்டு அவள் கைகளை உதறியவன் அவங்க சொன்ன மாதிரி பாத்தா நானும் தான் ரெண்டாவது என்று கத்தியவனை தன்னுடன் அனைத்து கொண்டு மாமா மாமா பிளீஸ் மாமா அவங்க எதாவது சொல்லிட்டு போறாங்க விடுங்க இதனால பிரச்சனை வேண்டாம் என்று சொன்னவள் அவனை இழுத்து கொண்டு வந்து மெத்தையில் படுக்க வைத்து தானும் படுத்து கொண்டாள்..
இங்கு வெளியில் பரமனும் சதாவும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.. பரமா இப்போதான் டா நிம்மதியா இருக்கு அர்ஜூன் போன பிறகு இந்த சின்ன பிள்ளை வாழாம இருக்கே என்ன பண்றதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன் அப்போதான் நீ வந்த கடவுள் மாதிரி எப்படியோ இப்போ கல்யாணமும் நடந்துடுச்சு என்று நெகிழ்ந்து போய் அவர் கையைப் பிடித்துக் கொண்டு கூறினார்.
அவர் அப்படி கூறவும் பரமனுக்கு தான் பொய் சொல்லியதை நினைத்து குற்றவுணர்ச்சியாக இருந்தது..சதா நான் உன்கிட்ட ஒரு உண்மையை மறைச்சு பொய் சொல்லிட்டேன் டா என்று கூறியதும் நெற்றி சுருக்கியவர் பின் தெளிந்தவராக மேல சொல்லு என்பது போல பார்த்தார்.
பின் சதாசிவத்திடம் பரமன் அபியின் கடத்த காலத்தைப் பற்றிக் கூறினார்.அபி கல்லூரியில் படித்து முடித்து விட்டு தன் அப்பா விருத்தாசலத்தில் துணிக்கடை வைத்திருக்க சென்னையில் தான் சொந்தமாக ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று அவன் கல்லூரி காலங்களில் இருந்தே அந்த ஆசை அவன் மனதில் வேரூன்றி இருந்தது.
கல்லூரி முடித்தவுடன் இரண்டு மாதம் தன் தந்தையுடன் கடைக்கு சென்று அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டவன் சென்னையில் பல கனவுகளுடன் தன் கடையைத் திறந்தான் அவன் கடையும் நன்றாகவே போய் கொண்டிருந்தது அபிக்கு 28 வயது ஆகவே அவன் வீட்டில் கல்யாண பேச்சை ஆரம்பித்தனர்.அபியிடம் கேட்டதுக்கு உங்க விருப்பம் போல பண்ணுங்க தாத்தா என்று சொல்லவும் பெண் பார்க்க ஆரம்பித்தனர்.
விருத்தாசலத்திலே மண்டி வைத்திருக்கிற ராமசாமியின் மகள் பேஷன் டெக்னாலாஜி படித்து விட்டு ஆடை வடிவமைப்பாளராக சென்னையில் பணி புரிகிறாள் என்று கேள்வி படவே ஊரில் அவர்களின் குடும்பத்தை பற்றி விசாரித்தனர். கல்யாண தரகரிடம் பொண்ணு நல்ல பெண்ணா சண்டை சச்சரவு இல்லாம குடும்பம் பண்ணனும்பா என்கவும் அதல்லாம் நல்ல பெண் ஐயா சென்னையில் வேலை பார்க்குது அதோட உத்தியோகம் நம்ம பையனுக்கும் உதவியா இருக்கும் என்று கூறினர்.
பின் பெண்ணை பற்றி அபியிடம் சொல்லவே ஹிம்ம் உங்க இஷ்டம் தாத்தா என்றவன் பெண் உள்ளூர் என்றதும் கண்ணை மூடிக் கொண்டு ஓகே சொல்லி விட்டான். பக்கத்து வீட்டினரிடம் மற்றும் ஊரில் விசாரித்த போது பொண்ணு நல்ல பொண்ணு வரும் அது வேணையப் பார்க்கும் அமைதி அப்படி இப்படி என்று கூறவும் நல்ல பெண் என்று பேசி முடிக்க அபியை வரவழைத்தனர்.
அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை லதா ஊரில் நல்ல பெண் என்ற பிம்பத்தை உருவாக்கி இருந்தாள். இங்கு இருந்த வரை எதுவும் தெரியாமல் அக்மார்க் கிராமத்து பெண்ணாக தான் இருந்தாள் .என்று அவள் பேஷன் டெக்னாலஜி படிக்க சென்னைக்கு சென்றாளோ அங்கு இருந்த நாகரீகத்துக்கு தன்னை மாற்றிக் கொண்டாள்..
இப்பொழுது எல்லாம் ஏதாவது விஷேச நாளில் அவள் அப்பா அம்மா கெஞ்சிக் கூத்தாடி கூப்பிடுவார்கள் வந்து ஒரு நாள் இருந்து விட்டு சென்னை கிளம்பி விடுவாள். இதில் ஊருக்கு வரும் போது மட்டும் தன் உடையை சுடிதாராக மாற்றி கொள்வாள்.
சென்னையில் அவள் வடிவமைத்த ஆடைகள் தான் அணிவாள் அதுவும் அந்த உடைகள் மிகவும் தாராளமாக அவள் உடல் எழில்களை நெளிவு சுளிவுகளை அப்பட்டமாக எடுத்து காமிக்கும்..அதுவும் இப்பொழுது பிரபல நடிகர் விதியுத்தின் ஆடை வடிவமைப்பாளர் ஆனதில் இருந்து ரொம்ப தாராள மயமாக்க பட்டது ஒவ்வொரு ஆடையும்..
அவள் அணியும் ஒவ்வொரு ஆடையும் விழுந்து விடுமோ என்ற நிலைமையில் விளிம்பில் நிற்கும்.. அதையும் அவன் ரசித்து அவள் ஒவ்வொரு உடல் பாகங்களையும் ஒவ்வொரு முறையும் விதவிதமாக வர்ணிப்பதற்காகவே அவனை கவர இன்னும் கவர்ச்சியாக அணிந்து செல்வாள்.அவனுடன் சேர்ந்து இரவானால் பப்பிற்கு சென்று அவனுக்கு நிகராக குடித்து மட்டையாகி விடுவது வழக்கமாக இருந்தது.
இந்த நிலையில் தான் அபி வீட்டில் பெண் பார்க்க வருவதாக கூற இதை வித்யுத்திடம் கூறினாள் அதற்கு அவன் பேப் இப்போ நான் கல்யாணம் பண்ணினா மார்கெட் இறங்க வாய்ப்பு இருக்கு சோ நீ இந்த கல்யாணத்தைப் பண்ணிக்கோ ஒன் இயர் கழிச்சி டிவோர்சு கொடுத்துடலாம் என்று கூலாக கூறினான்.
(அப்பொழுது தெரியவில்லை அவளுக்கு எவ்வளவு பெரிய சொர்க்கத்தை இழக்கப் போகிறோம் என்று…)
அவன் சொல் படியே ஊருக்கு வந்தவள் பெண் பார்க்க வரும் போதும் சரி ஒன்றும் தெரியாத அப்பாவி பெண் போல் தன்னை சித்தரித்துக் கொண்டாள்.. அபி வீட்டினரும் பெண் ரொம்ப அழகா அமைதியா இருக்காள் என்று அவள் வெளி தோற்றத்தை வைத்து முடிவுக்கு வந்து விட்டனர்.பின் பெண் பார்க்க வந்த அன்றே நிச்சயத் தாம்புளம் மாற்றிக் கொண்டனர்.
உற்றார் உறவினர் என அனைவரையும் அழைத்துக் கோலாகலமாக கல்யாணத்தை நடத்தினர்.கல்யாணம் முன்பு லதாவிடம் பேச அபி அவள் நம்பரைக் கேட்க லதாவின் அம்மா அவ கொஞ்சம் கூச்சப் படுறா தம்பி என்று மழுப்பி விட்டார். தன் தாயிடம் கல்யாணம் ஆனப் பிறகு பேசிக்கிறேன் நம்பர் தர முடியாது என்று கூறி விட்டாள்…
அபி பேச வெட்கப் படுகிறாள் என்று நினைத்துக் கொண்டான் பாவம் அவனுக்கு தெரியவில்லை அந்த பேக்கு வெட்கம் எந்த கடையில் கிடைக்கும் என்று கேட்கிற ரகம் என்று..கல்யாணம் முடிந்ததும் அன்றிரவு இருவருக்கும் சடங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அவளை அபியின் அறையில் விட்டுவிட்டு செல்ல தலை வலிப்பது போல படுத்துக் கொள்ளலாம் என்று நினைத்துப் படுத்துக் கொண்டாள்…
அபி தன் அறைக்கு வந்தவன் அவள் படுத்திருக்கவும் இருமுறை அவளை அழைத்தான் ஆனால் அவள் எழவில்லை என்றதும் அவள் அருகில் சிறு இடைவெளி விட்டு படுத்துக் கொண்டான்.அவள் முழித்திருந்தால் கூட அவன் தன் வாழ்க்கையை அப்பொழுது தொடங்கி இருக்க மாட்டான்.அவளை எழுப்பியதே பேசலாம் என்று தான்.
பின் காலை எழுந்தவுடன் அவளிடம் நமக்கு முன்பே அறிமுகமில்லை கொஞ்ச நாட்கள் நம்மை ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டு நம் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று கூறவும் சரி என்று தலையை ஆட்டினாள்.
அன்று இரவே எனக்கு சென்னையில் வேலை இருக்கு என்கவுமே இருவரையும் சென்னையில் அபி தங்கி இருந்த அப்பார்ட்மண்டில் தங்க வைத்து விட்டு வந்தனர். முதல் நாள் அவள் வெளியில் போக வில்லை வீட்டில் தான் இருந்தாள். அடுத்த நாள் அவள் உடையைப் பார்த்த அபிக்கு கோபம் கட்டுங்கடங்காமல் வந்தது..
வாழ்வு சிறக்கும்...
வாழ்வு - 20:
மறுநாள் காலையில் தன் கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்தவன் தன் அறையை விட்டு வெளியே வந்தான்..சிறிது நேரம் கழித்து லதா தான் எப்பொழுதும் அணியும் உடையை அணிந்து வெளியே வந்தவளை பார்த்த அபி அதிர்ந்தான்.
லதா என்ன இது இந்த டிரெஸ் எல்லாம் எதுக்குப் போடுற.. இதெல்லாம் போடாத இதை போட்டுக்கிட்டு வெளியே எப்படி இப்படியே வா போவ ச்சி என்று அவள் உடையைப் பார்த்து முகத்தை சுழித்தான்..வெறும் ஒற்றைக் கயிரின் சப்போர்ட்டில் அந்த ஆடை அவள் உடலில் நின்று கொண்டிருந்தது…
அதிலும் மேலே பிளவு தெரிவது போல் அவ்வளவு இறக்கமாகவும் கீழே முட்டிக்கு மேல் தொடையை டைட்டாக கவ்வி பிடித்திருந்த உடையைக் கண்டு அருவருப்பாக உணர்ந்தான்.அவன் தன்னை ஆடை மாற்ற சொன்னதில் வெகுண்டவள் ஏய் எனக்கு நீ ஆர்டர் போடாதே என் கால் தூசிக்கு சமம் நீ உன்னை யாரும் இங்க காதலோட கல்யாணம் பண்ணலை
நீ சொன்னதை வேற எவளாவது கேட்பாள்..நான் உனக்கு என்னைக்கும் கட்டுப் பட மாட்டேன் உன் வேலையை நீ பாரு நான் என் வேலையைப் பார்க்கிறேன்.. கேவலம் ஒரு துணிக் கடையை வச்சிக்கிட்டு நீ எனக்கு ஆர்டர் போடுறியா சினி பீல்டுல நான் வடிவமைக்கிற ஆடைக்கு எத்தனை ஆக்டர்ஸ் போட்டிப் போடுறாங்க தெரியுமா.
நான் இப்படி தான் டிரெஸ் பண்ணுவேன் உன்னால முடிஞ்சதை பண்ணிக்கோ என்றவளை கண்டு கோபம் வர கையை ஓங்கி விட்டான்..பின் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன் அவளிடம் பேச கூட பிடிக்காமல் கடைக்கு கிளம்பி சென்று விட்டான்..
சாக்கடையில் கல் எறிந்தால் நம் மேல் தான் படும் என்று நினைத்து கொண்டு விலகி விட்டான் இனி அவள் பக்கமே திரும்ப கூடாது என்று..தன் வீட்டாருக்கு என்ன பதில் சொல்வது இவள் இப்படி உடை உடுப்பதை பார்த்தாள் அவர்கள் தாங்க மாட்டார்கள் என்று நினைத்தவன் தன் மனதிற்குள்ளேயே வைத்து கொண்டான்..
அவள் பேசிய அவன் தன்மானத்தை சீண்டி விட்டிருந்தது.. போடி நீ எவ்வளவு பெரிய ஆளா கூட இருந்துட்டு போ என் கடைக்கு நானே ராஜா என்று மனதை தேற்றி கொண்டவன் அன்றிலிருந்து அவளை கண்டு கொள்ள மாட்டான்..
உடை தான் இப்படி அணிகிறாள் என்றால் இரவு தள்ளாடிக் கொண்டே வந்ததில் அவள் மேல் வந்த சிகரெட் வாடையும் அவள் குடித்திருக்கிறாள் என்று தெரியவே ச்சீ இப்படியும் பெண்கள் இருக்கிறார்களா என்று நினைத்தவன் வேறு ஒரு ரூமில் சென்று கதவடைத்துக் கொண்டான்..
ஒரு மாதத்திற்கு ஒருக்க வரும் தன் வீட்டாரிடம் ஹீரோக்களுக்கு ஆடை வடிவமைப்பதால் வெளிநாடு சென்றிருக்கிறாள் என்று வாய்க்கு வந்த பொய்யை சொல்லி விடுவான்..அவர்களும் சரிப்பா அப்புறம் வரும் போது பார்க்கிறோம் என்று விட்டு செல்வார்கள்.
விஷேச நாளில் வர சொன்னால் இங்கு நல்ல சேல் போயிட்டு இருக்கு அப்புறம் வரோம் லதாவும் பிஸி அப்படி இப்படி என்று சமாளித்து ஏழு மாதம் கடந்து விட்டது.லதா சில நாள் மூக்கு முட்ட குடித்து விட்டு பல நாள் வீட்டிற்கே வர மாட்டாள்..அபி உடை விஷயத்திலும் சிகரெட் பழக்கமும் குடிக்கிற பழக்கமும் மட்டும் தான் இருக்கு என்று நினைத்துக் கொண்டான்.
ஆனால் ஒரு நாள் அவளை இன்னொரு ஆடவனுடன் அவ்வளவு நெருக்கமாகப் பார்த்ததும் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. ச்சே குடிக்கிற பழக்கமும் நாகரீக உடை என்கிற பேரில் கேவலமாக உடை அணிகிறாள் என்று நினைத்தால் இதில் இது வேறயா என்று நினைத்தவன் ஏற்கனவே இது பெற்றோருக்கு தெரிந்தால் உடைந்து போய் விடுவார்களே என்ற மன அழுதத்தில் இருந்தவன்..
அதுவும் அவள் வித்யுத்திடம் டிவோர்ஸ் பண்ணுவதற்கு சொன்ன காரணத்தைக் கேட்டு வெகுண்டெழுந்தான்.. அவனால் என்னை திருப்திபடுத்த முடியவில்லை என்று ஆண்மை இல்லாதவன் என்று கூறினால் டிவோர்ஸ் ஈஸியா கிடைச்சிடும்..என்று அவர்களுக்குள் பேசுவதை கேட்டு ரெளத்திரமானான்.
பாருக்கு சென்றவன் மன வேதனையில் மூக்கு முட்டக் குடித்து விட்டு தன் வீட்டிற்கு வந்து முழு போதையில் சோஃபாவில் அமர்ந்திருந்தவன் அவள் எப்பொழுதும் போல போதையில் வரவே அவனை பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்ததில் என்ன டி நான் ஆம்பிளை இல்லன்னு தானே சொல்லி டிவோர்ஸ் கேட்கப் போற
நான் ஆம்பிளையான்னு இப்போ காட்டுறேன் பாரு டி என்று அவளை இழுத்து தரையில் தள்ளியவன் அவள் மேல் படர்ந்தான்.. படர்ந்தது மட்டுமே அவன் நினைவில் இருந்தது போதையில் என்ன செய்கிறோம் என்று அவன் உணரவே இல்லை…
மறுநாள் எழுந்தவன் தலை பாரமாக இருக்க சுற்று புறத்தை ஆராய்ந்தவன் ஹாலில் சோஃபாவிற்கு அருகில் தரையில் படுத்திருந்தான்..அவள் மேல் படர்ந்தது வரை மட்டுமே நியாபகம் இருந்தது...ச்சீ அபி நீயா இப்படி என்று நினைத்தவன் தன்னையே திட்டிக் கொண்டவன் ஒரு முடிவோடு ஹர்ஷா வேலை பார்க்கும் மருத்தவமனைக்கு சென்றான்…
அவனிடம் அனைத்தையும் சொல்லி எனக்கு டிவோர்ஸ் வேணும் மச்சான் என்னை பார்த்து அப்படி சொல்லிட்டா நேற்று இப்படி நடந்துக்கிட்டேன் போயும் போயும் அவக்கிட்ட போய் என்று புலம்பியவை ஒன்னும் இல்லை மச்சி ரிலாக்ஸ் இப்போ என்ன உனக்கு டிவோர்ஸ் வாங்கிடலாம் விடு வீட்டுல சொல்லி சமாளிச்சுக்கலாம் என்கவும் அவளை பார்த்து மியுச்சுவள் டிவோர்ஸிற்கு அப்ளை செய்து வாங்கியும் விட்டார்கள்.
வீட்டில் சொன்ன பொழுது இரண்டு வீட்டிற்கும் பெரிய பிரச்சனை வந்தது லதா வீட்டில் உன் பையன் ஆண்மை இல்லாதவன் அதான் என் பெண் டிவோர்ஸ் அப்ளை பண்ணிருக்கா என்கவும் சேகர் லதாவின் அப்பாவை அடிக்க வே போய் விட்டார்.
யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்றான் அந்த ஆளு என்று குதித்தவரை சேகர் விடு அவங்க கிட்ட இனி பேசி ஒரு பிராயோஜனமும் இல்ல..விடு இனி அவங்க யாரோ நாம யாரோ அவங்களுக்கும் நமக்கும் இனி பேச்சு இல்ல என்றவர் தன் மகனை அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.
வீட்டினரிடம் இருவருக்கும் ஒத்துப் போக வில்லை என்று தான் சொல்லி வைத்திருந்தனர்..அவள் குடிப்பதையோ இன்னொருவன் கூட சுத்துவதையோ அபி சொல்லவில்லை. அதன் பிறகு அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க ஒரு நாள் லதா அபார்ட் பண்ணுவதற்காக ஹர்ஷா வேலை செய்யும் மருத்தவமனைக்கு வந்திருக்க எதேர்ச்சியாக அவளை பார்த்த ஹர்ஷா…
அந்த டாக்டரிம் விசாரிக்க அவள் அபார்ட் பண்ண வந்திருக்கிறாள் என்றும் ஆனால் கரு ஐந்து மாதத்திற்கு மேல் ஆகி விட்டதால் கலைத்தால் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்று சொன்னதும் கிளம்பி விட்டதாக கூறினார்.
அதை கேட்ட ஹர்ஷா இதை அபியிடம் சொல்லலாமா வேண்டாமா என்று சிறிது நேரம் யோசித்த ஹர்ஷா பின் அபிக்கு கால் பண்ணினான். அனைத்தையும் சொன்னவன் அந்த பக்கம் அமைதியாக இருக்கவும் மச்சி என்று அழைத்ததும் நான் அவளை பார்க்கனும் என்றதும் எதுக்குடா என்றதும் பார்க்கனும் லீவ் சொல்லிட்டு வா என்று கட் பண்ணி விட்டான்.
பின் இருவரும் லதாவின் வீட்டிற்கு சென்றனர்.. மச்சி அவக்கிட்ட நீ என்ன பேச போற வா போகலாம் என்றவன் அவன் என்ன செய்ய போகிறான் என்பதை அறிந்து வேண்டாம் என்று தடுத்தான்..இரு மச்சான் எனக்கு அந்த பேபி வேணும் மச்சான் நா பண்ணின தப்புக்கு இனி வாழ் நாள் முழுமைக்கும் அந்த குழந்தை போதும் என்றவன் அந்த குழந்தை வேண்டாம்னு நினைச்சு தானே அபார்ட் பண்ண போயிருக்கா…
நான் செய்த செயலுக்கு தண்டனையா... தண்டனை இல்லை பிராயசித்தமா நினைச்சுக்கிறேன் மச்சி எப்படியும் அழிக்க நினைச்ச குழந்தையை அவள் நலன் கருதி கண்டிப்பா பெற்று எடுப்பா ஆனால் அந்த குழந்தையை அவள் வளர்க்க மாட்டா டா ஏதோ ஒரு அனாதை ஆசிரமத்துல வளர போறதுக்கு என் மகளா மகனா வளர்ந்துட்டு போகட்டுமே…
வீட்டுல கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்றாங்க ஆனால் இனி கல்யாணம் என்ற வார்த்தைக்கே என் வாழ்க்கையில் இடமில்லை..எனக்கு யாரை பார்த்தாலும் வெறுப்பா இருக்கு மச்சி என்றதும் மச்சான் அப்படியே இருந்தாலும் அஞ்சு மாதம் என்று டாக்டர் சொன்னாங்கடா அது உன் குழந்தையா இருக்க வாய்ப்பே இல்லை டா என்றதும் மச்சி ப்ளீஸ் டா எனக்கு இந்த குழந்தை வேணும்
அது யாரோட குழந்தையா இருந்தாலும் பரவா இல்லை நான் தானே வளர்க்கப் போறேன் அவ என் குழந்தையா தான் வளரும் அது என்னை தான் அப்பான்னு கூப்பிடும் என்று என்னென்னமோ பேசி ஹர்ஷாவை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்கு வந்து விட்டான்.
காலிங் பெல் அடிக்க யாரென்று பார்க்க அவள் திறக்கவும் இவர்கள் இருவரும் நிற்க உள்ளிருந்து வித்யத்தின் குரல் கேட்டது யாரு பேப் என்று வித்யுத் தான் கொஞ்சம் பேசணும் என்றான்.பின் உள்ளே வந்து வித்யுத்திடம் அனைத்தையும் கூற எப்படியும் ஆர்பனேஜ் தான் நாங்க பிளான் பண்ணிருந்தோம் என்று சொல்லும் போதே ஹார்ஷாவிற்கு கோவம் வந்தது.
தன்னை கட்டுப் படுத்தியவன் குழந்தை பிறந்ததும் எங்க கிட்ட கொடுத்திடுங்க அதன் பிறகு இந்த குழந்தையை எங்களிடம் இருந்து கேட்கக் கூடாது..என்று ஹர்ஷா சொல்ல நெவர் என்று திமிராகக் கூறினான்..அபி இருவரையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை அவனுக்கு அவர்களைப் பார்க்க அருவருப்பாக இருக்க தன் கைகளை ஆராய்ந்துக் கொண்டிருந்தான்.
பின் அவர்களிடம் பேசி விட்டு அபியுடன் வீட்டிற்கு வந்த ஹர்ஷா அபி என்று அவனை கட்டிக் கொண்டான். தானும் அவனை கட்டிக் கொண்டவன் மச்சி குழந்தை பிறந்ததும் நான் நம்ம ஊருக்கே போயிடலாம்னு இருக்கேன் டா என்று கூறவும் சரிடா உன் மனசுக்கு என்ன தோணுதோ அதை செய் என்கவும்
நான் எப்பொழுதும் உன் கூடவே இருப்பேன்டா என்று அபியை தன் தோளோடு அணைத்துக் கொண்டான்..பின் தன் கடையை ஒருவரிடம் விற்றவன் குழந்தைப் பிறந்ததும் பால் கூட கொடுக்காமல் தன் வேலை முடிந்தது என்பது போல கிளம்பியவளை அற்பப் புழுவைப்போல் பார்த்தான்.
அந்த சிறு பிஞ்சு பசியில் அழ என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப் போனான்.பின் ஹர்ஷாவின் உதவியோடு ஹர்ஷிக்குப் புட்டியில் பால் கொடுத்தான்.அன்றிலிருந்து ஹர்ஷி அவன் உயிராகினாள்.அவள் அழுதால் இவனுக்கு தாங்காது…
பின் குழந்தைக்கு பத்து நாள் ஆனப் பிறகு தன் ஊருக்கு மொத்தமாக வந்து விட்டான். தன் மகனை குழந்தையுடன் பார்த்தவர்கள் அதிர்ந்தனர்.பின் அவனிடம் கேட்க என்னோட குழந்தை தான் பெத்துக் கொடுத்துட்டுப் போயிட்டா இனி அவ பேச்சை இங்க எடுக்காதீங்க என்றும் நான் இனி இங்க தான் இருக்க போறேன் என்றும் கூறினான்.
எனக்கு என் மகள் போதும் இன்னொரு கல்யாணம் பற்றி என்கிட்ட இனி பேசாதீங்க என்றவன் தன் அறைக்கு சென்று விட்டான் தன் மகளுடன். எவ்வளவு சொல்லியும் ஒத்துக்கொள்ளவே இல்லை. வீட்டிலும் அதிகமாக யாரிடமும் பேசுவது இல்லை..
தனக்குள்ளே இறுகிப் போனான். ஆனால் சந்தியாவைப் பார்த்ததும் அனைத்தையும் மறந்தவன் அவள் தன் மனைவி தன் மகளைக் கொஞ்சிக் கொண்டு இருக்கிறாள் என்று அவளிடம் உரிமையாக நடந்துக் கொண்டான்.
தனக்கு தெரிந்தவற்றை பரமன் தன் நண்பனிடம் கூறி சதா மறைச்சு கல்யாணம் பண்ணது தப்பு தான் டா ஆனால் அபியை எங்களை பொருத்த வரை அவள் எப்போழுதோ இறந்து போயிட்டா டா என்று கூற அபிக்கு விவாகாரத்து ஆனது எனக்கு முன்பே தெரியும் தெரிஞ்சு தான் கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டேன் என்று குண்டைப் போட்டார் சதாசிவம்.
வாழ்வு சிறக்கும்…
0 Comments