வாழ்வு-21:

சதா தனக்கு தெரியும் என்று சொல்லவும் எப்படிடா சதா என்று அதிர்ந்து கேட்டார். அபிதான்டா என்கிட்ட சொன்னான் கல்யாணத்துக்காக நீங்க எல்லாரும் நம்ம வீட்டுக்கு வந்தீங்க இல்லையா அப்போ மொபைல் விட்டுட்டேன்னு சொல்லி அபி வந்தான். நான் இங்க பசங்க இருந்த வீட்டுக்கு நான் போயிட்டேன். அப்போ போனை எடுத்துட்டு இந்த வீட்டுக்கு வந்தான்

வந்ததும் உங்க கூட பேசனும்னு சொன்னான் சொல்லுப்பா என்று சொன்னதும் தாத்தா உங்ககிட்ட ஏற்கனவே சொன்னது தான் தாத்தா என் கடந்த கால வாழ்க்கை சரியா அமையலை அந்த பெண்ணுக்கும் என் கூட இருக்க பிடிக்கலை நம்ம கூட இருக்க முடியாதுன்னு சொல்றவங்களை பிடிச்சா வைக்க முடியும் அதான் மியுச்சுவலா டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணினோம்.

அவர் கைகளைப் பிடித்துக் கொண்டவன் தாத்தா சந்தியாவை நான் நல்லா பார்த்துக்கிறேன் நீங்க அவளை பற்றி கவலைப் படாதீங்க என்றதும் உள்ளுக்குள் அதிர்ந்தவர் நீ என் பேத்தியை நல்லா பார்த்துக்குவேன்னு தான் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறேன் என்றவர் அவனை அனுப்பி வைத்துவிட்டு ஏதோ காரணத்தோட தான் மறைச்சிருப்பேன்னு எனக்கு தெரியும் பரமா அதான் நான் அந்த விஷயத்தை நான் கண்டுக் கொள்ளவில்லை.

அபி நல்ல பையன் பரமா ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பாங்க நாம அதைப் பார்க்க தான் போறோம் நீ பார்த்துக்கிட்டே இரு என்று கூறியவர் சரி நீ போய் தூங்கு பரமா நானும் படுக்குறேன் என்றதும் இருவரும் விடைப் பெற்றுக் கொண்டு அவரவர் வீட்டுக்குச் சென்றனர். இங்கு அபியை இழுத்து மெத்தையில் படுக்க வைத்துத் தானும் படுத்தவள் என்ன மாமா உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது என்ற பெரும் கேள்வியை அவனை பார்த்து ஒருக்களித்து படுத்தவாரு கேட்டாள்.

அவள் அருகே இருக்க தன் கோபம் தணிந்தவன் அவளை நோக்கி திரும்பி வலது கையை தன் தலைக்கு முட்டுக் குடுத்தவாறு அவளைப் பார்த்து படுத்தவன் தன் இடது கைக் கொண்டு அவள் முகவடிவை அளந்தவாரு என் அத்தையாகவே இருந்தாலும் என் பொண்டாட்டியைப் பேச அவங்களுக்கு உரிமை இல்லை பேபி என்று கூறினான்.

அதுப்போல யாராவது எதாவது தேவை இல்லாமல் பேசினா அதையெல்லாம் சீரியஸா எடுத்துக் கூடாது சரியா நான் சொன்னது மட்டும் தான் நீ கேட்கனும் செய்யனும் சரியா என்றவன் நான் சொல்றதை செய்வியா என்று கண்களில் குறும்புடன் கேட்டான். அவன் பார்வையிலேயே ஏதோ விவகாரமாக சொல்லப் போகிறான் என்று நினைத்தவள் தன் கண்களை விரித்து ம்ஹூம் என்று நாலா பக்கமும் தலையை ஆட்டினாள்.

பின் அவள் தலையை அசையாதவாறு பிடித்துக் கொண்டவன் அவள் இதழ் நோக்கி குனிய ஹர்ஷி வீறிட்டுக் கத்த சட்டென்று எழுந்தவன் ஹர்வியைத் தூக்கி குட்டி மா என்னடா ஆச்சு என்ன பண்ணுது என்று பதட்டமாகக் கேட்டவன் ஹர்ஷி உடம்பு நெருப்பென தகிக்க மூச்சு விட முடியாமல் சிரமப்படுவதைப் பார்த்துக் கண்கள் கலங்க குட்டி மா என்னடா ஆச்சு என்று அவளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே தியா போய் ஹர்ஷாவ எழுப்பு என்றதும் கீழே விரைந்தாள்.

அபி ஹர்ஷியைத் தூக்கிக் கொண்டு கீழே வர தியா ஹர்ஷாவின் அறை கதவைத் தட்ட திறத்தவன் பதட்டத்துடன் தன் முன் நின்ற தியாவைப் பார்த்தவன் அபி ஹர்ஷியைத் தூக்கிக் கொண்டு வருவதைப் பார்த்தவன் அவனிடம் விரைந்தான்.

ஹர்ஷியைத் தொட்டுப் பார்த்தவன் ஹாஸ்பிட்டல் சீக்கிரம் கிளம்பலாம்டா ஒன்னும் இல்லை பயப்படாத ஒன்னும் ஆகாது என்றவன் காரை எடுத்தான். இவர்களின் சத்தம் கேட்டு அனைவரும் வெளியே வர பதறியவர்கள் ஹாஸ்பிட்டல் விரைந்தனர்.மாமா ஹர்ஷிக்கு ஒன்னும் ஆகாது என்று அவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள அவன் அவள் கைகளை கெட்டியாக இறுக்கிக் கொண்டான்.

ஹாஸ்பிட்டல் வந்ததும் ஹர்ஷா ஹர்ஷியைத் தூக்கிக் கொண்டு டாக்டரிடம் சென்று காட்டியதும் வைரல் பீவர் என்று ICU-ல் அட்மிட் செய்தனர்.அபி அதை கேட்டதும் அங்கிருந்த இருக்கையில் தன் கைகளைத் தலையில் வைத்துக் கொண்டு இடிந்துப் போய் அமர்ந்தான்.

அவன் அருகே அமர்ந்தவள் அவன் கைகளைத் தட்டிக் கொடுத்தாள் மாமா ஒன்னும் ஆகாது ஹர்ஷிக்கு என்று அழுதாள்.அனைவரும் டாக்டர் வைரல் பீவர் என்று கூறவும் பதறினர். கோகிலா சும்மா இல்லாமல் தன் தொண்டையைத் திறந்தார்.

இவ வந்த நேரம் தான் பிள்ளைக்கு முடியாம போயிடுச்சு... ராசி இல்லாதவ என்று எப்படியாவது அவள் மனதைக் கஷ்டப் படுத்தி விட வேண்டும் என்றே அவர் பேசினார் போலும். அவர் கூறியதைக் கேட்டதும் உடல் இறுகியவள் தன் கையை அபியின் கைகளில் பிரித்தெடுக்க முயன்றவளை அபி விடாமல் இறுக்கிக் கொண்டான்.

கோகிலா கூறியதைக் கேட்டவன் அமைதியாக இருந்தான் சந்தியாவின் உடல் இறுகுவதை உணர்ந்தவன் அவள் கெட்டியாக பிடித்துக் கொண்டவன் விடவில்லை.

பின் ஹர்ஷா வெளியே வரவும் அவனிடம் சென்று என்னடா ஆச்சு என்று கேட்கவும் ட்ரிட்மெண்ட் போயிட்டு இருக்கு டா நாளைக்கு காலையில் ஹர்ஷிய பார்க்கலாம் நீங்க எல்லாம் வீட்டுக்குப் போங்க என்று கூற இல்லை நான் இங்கேயே இருக்கேன் என்று விடாப்பிடியாக அமர்ந்துக் கொண்டான்.

பின் ஹர்ஷா தேவியிடம் திரும்பி கூட்டிட்டு போ தேவி பாப்பாக்கு ஒன்னும் இல்லை நாளைக்கு வந்து பார்க்கலாம் அழாத எல்லாரையும் கூட்டிட்டு வீட்டுக்குப் போ காலையில் வரலாம் என்று அனுப்பி வைத்தான். ரேவதி சந்தியாவை அழைக்கவும் அபி சந்தியா இங்கேயே என் கூட இருக்கட்டும் என்றதும் அனைவரும் கிளம்பினர்.

பேபி வீட்டுக்குப் போறியா என்று தியாவிடம் கேட்க இல்லை அத்தான் நான் இங்கேயே இருக்கேன் ஹர்ஷி தேடுவா என்றதும் அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டவன் அவள் தலை மேல் தன் தலையை வைத்துக் கொண்டவன் இருவருமே தான் பெறாத மகளுக்காக விழித்தேக் கிடந்தார்கள்... 

அதிகாலை நான்கு மணியளவில் வந்த டாக்டர் உங்க பொண்ண போய் பார்க்கலாம் ஆனால் இன்னும் ரெண்டு நாள் அப்ஸர்வேஷன்ல இருக்கட்டும் இரண்டு நாட்கள் கழித்து டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம் என்றதும் சரி என்று ஹர்ஷியைப் பார்க்க விரைந்தனர்.

அங்கு வாடி வதங்கிய மலர் போல படுத்திருந்த தன் மகளை கண்டதும் கண்கள் கலங்க ஹர்ஷியின் பாதங்களை கைகளில் ஏந்தி முத்தமிட்டவன் குட்டி மா என்று அழுகையில் தொண்டை கரகரக்க அழைத்தான்.

மாமா ஹர்ஷிக்கு சரி ஆயுடுச்சுனு டாக்டர் சொன்னாங்கள்ள எதுக்கு இப்போ கலங்குறீங்க என்று அவன் தலை முடியை வருடவும் அவள் இடுப்பை கட்டிக்கொண்டு அழுதான்.. சிறிது நேரம் அப்படியே இருந்தவன் நான் ரொம்ப பயந்துடேன் பேபி ஹர்ஷிக்கு எதாவது ஆயிடுமோனு என்று கூறியவன் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான்.

பின் இருவரும் பக்கத்தில் இருந்த கட்டிலில் சிறிது நேரம் படுத்திருந்தவர்கள் காலையில் அனைவரும் வந்து பார்க்க ஹர்ஷி விழித்தாள்.. தியாவை பார்த்து கைகள் இரண்டையும் தூக்கி அழ உடனே கட்டிலில் அமர்ந்து ஹர்ஷியை மடியில் போட்டு தட்டிக் கொடுத்தாள்.

இது போலவே இரண்டு நாளும் தியாவை அங்கும் இங்கும் நகர விட வில்லை.. இரண்டாம் நாள் மாமா ஹர்ஷியைக் கொஞ்சம் பார்த்துக்கோங்க நான் தருணை பார்த்துட்டு வரேன் அவன் நான் சாப்பாடு கொடுக்கலைன்னா சாப்பிட மாட்டான்.. நான் போய் பார்த்துட்டு வரேன் என்று கூறியவளிடம் நான் போய் பார்த்துட்டு வரேன் தியா..

நான் கூட்டிட்டு வரேன் தியா ஹர்ஷி நீ அவளை விட்டு நகர்ந்தாலே அழறா நான் போய் பார்த்துட்டு வரேன் என்றவன் கிளம்பினான். ஆனால் நடுவில் ஏதோ வேலை வர தருணை பார்க்க போவதை மறந்து விட்டான்.

இரண்டு தியா வராததால் சதாசிவம் தான் தருணுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்தவர் மூணாவது நாள் அவனை சமாளிக்க முடியவில்லை..அவன் அழ ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டான்..தேம்பிக் கொண்டே பிட்ஸ் வந்தது போல் இழுக்கும்.

அபி வேலையால் மறந்து போக தியாவும் அபி போய் பார்த்திருப்பான் என்று நினைத்திருக்க சதாசிவமும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினார். அன்று ஹர்ஷியை டிஸ்சார்ஜ் செய்து கூட்டிப் போக அனைவரும் வந்திருக்க கோகிலா இந்த இரண்டு நாட்களாக வரவில்லை அதை கவனிக்கும் நிலையில் சந்தியாவும் இல்லை..

தருண் இங்கு சந்தியா வேணும் என்று அழுதுக் கொண்டிருந்தான். அனைவரும் சமாதானப் படுத்தியும் கேட்க வில்லை ஒரு கட்டத்தில் தேம்பிக் கொண்டிருந்தவனின் உடல் வெட்டி வெட்டி இழுக்கவும் அங்கிருந்தவர்கள் பயந்து ஹாஸ்பிட்டலிற்கு அழைத்து சென்றனர்.

இதை கேள்வி பட்ட சந்தியா அபியிடம் நான் நீங்க போய் பார்த்திருப்பீங்கன்னு நினைச்சு தானே நான் இங்க இருந்தேன் என்கிட்ட பேசாதீங்க என்றவள் தருணிடம் சாரி சாரி தருக்குட்டி என்று வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்க முகம் சிவக்க அவனை அணைத்துக்கொண்டு அழுதாள்..

வாழ்வு சிறக்கும்...

வாழ்வு- 22 :

காலையில் அனைவரும் ஹர்ஷியை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டனர். ஹர்ஷி ம்மா ம்மா என்று சந்தியாவிடம் இருந்து யாரிடமும் போகாமல் அவளிடமே இருந்தாள். அவளை விட்டு இங்கும் அங்கும் நகர விட வில்லை. அவள் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அவள் மாராப்பின் மடிப்பை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு விடவில்லை.

அபியிடம் கூட வரவில்லை அவளுக்கு பால் புகட்ட பால் புட்டியை எடுத்துக் கொண்டு வந்தவன் குட்டி மா வாடா அப்பா கிட்ட பால் குடிக்கலாம் என்றதும் வரவில்லை ஹர்ஷியை மடியில் போட்டு அவனிடம் இருந்து வாங்கி ஹர்ஷிக் குட்டி கொஞ்சம் ரு டிங்க என்று அவளைக் ெகாஞ்சி எப்படியோ பாதி பாட்டில் காலி ஆனதும் அவனிடம் கொடுத்தாள்.

போதும் மாமா கொஞ்ச நேரம் கழிச்சு கொடுக்கலாம் என்றவள் தன் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்து பாலை இறக்கி அவளைத் தட்டிக் கொடுத்துத் தூங்க வைத்தாள். அப்பொழுது தான் அபிக்கு சதாசிவம் போன் செய்தார் அபி சந்தியா கொஞ்சம் இந்த AA ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு வாப்பா என்றதும் என்ன தாத்தா யாருக்கு என்ன ஆச்சு என்று பதறினான்.

இவன் பதறவும் அருகில் வந்தவள் என்ன மாமா என்று கேட்டவள் அவன் போனை வாங்கி தாத்தா என்கவும் தருணை ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணிருக்கு மா வாடா கொஞ்சம் சீக்கிரம் கரு ஒன்னும் இல்லை இப்போ நல்லாருக் கான் உன்னை தேடுறான் என்றதும் நான் வந்துட்டேன் தாத்தா என்று வைத்து வேகமாக கீழே இறங்கினாள்.

அபி சந்திராவிடம் ம்மா ஹர்ஷிய பார்த்துக்கோங்க நாங்க கொஞ்சம் வெளியே போயிட்டு வரோம் என்று அவசர அவசரமாகக் கூறிவிட்டு தியாவை அழைத்துக் கொண்டு சென்றான். மருத்துவமனைக்கு சென்று எந்த அறை என்று கேட்டுக் கொண்டு சென்றனர். அங்கு தருண் அழுது அழுது முகம் வீங்கி சிவந்து எனக்கு சந்தும்மா வேணும் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தவனை கண்டு தருக்குட்டி என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

அவன் உடம்பு சுடவும் அழாத தருக்குட்டி அம்மா தான் வந்துட்டேன்ல பீவர் வேற இருக்கு இன்னும் அதிகமாகிடும் டா என்று அவனை தட்டிக் கொடுத்தவள் என்ன தாத்தா ஆச்சு என்று சதாசிவத்திடம் கேட்டாள் உன்னை மூணு நாளா பார்க்கலைன்னு ஒரே அடம் இரண்டு நாள் எப்படியோ சமாளிச்சிட்டேன் இன்னைக்கு வேணும் பார்க்கனும் என்று அழுதுக்கிட்டே இருந்தான்.

தருண் அழுதா தான் வெட்டி வெட்டி இழுக்கும்ல அதுப்போல வந்துருச்சு காலையிலேயே இங்க தூக்கிட்டு வந்துட்டோம் என்று கூறிக் கொண்டிருந்த போது டாக்டர் வரவும் அவரிடம் சென்றனர். அவர் வந்து தருணை பரிசோதித்தவர் ஒன்னும் இல்லை ஹி இஸ் பெர்பெக்ட்லி ஆல்ரைட் அழ விடாம பார்த்துக்கோங்க, வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகலாம் என்று சில மாத்திரைகளை இரண்டு வேளைக்கு கொடுக்குமாறு கூறிவிட்டு சென்றார்.

அவனை கைகளில் தூக்கிக் கொண்டே ஏன் அழுத தருக் குட்டி நேற்று தான் அப்பா வந்து பார்த்தாங்க தானே என்று கேட்டுக் கொண்டிருந்தவளை பேபி என்று தன் பக்கம் திருப்பியவனை என்ன மாமா என்று கேட்க பேபி நான் நேற்று அவனை போய் பார்க்கலை ஏதோ வேலையில் மறந்துட்டேன் என்று கூற எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை.

(ஏன் டா நீயா போய் மாட்டுற ...)

நீங்க போய் பார்க்கிறேன்னு சொன்னதால் தானே நான் போகலை என்று கேட்டவள் நான் போயிருந்த இப்போ பிள்ளைக்கு இந்த நிலைமை வந்துருக்காது என்று கூறியதும் பேபி போகனும்னு தான் மா கிளம்பினேன் ஒரு வேலை அவசரமா வந்துச்சு அதான் அதை பார்க்க போனதுல மறந்துட்டேன் என்று பரிதாபமாக கூறினான்.

அவள் கோபத்தில் அவனை முறைத்தவள் தருணை தன்னோடு அணைத்துக் கொண்டு சாரி தருக்குட்டி என்னை மன்னிச்சிடுடா என்று அவன் உச்சந்தலையில் முத்தமிட்டவள் அபியைக் கண்டுக் கொள்ளாமல் தாத்தா வாங்க போகலாம் வீட்டுக்கு என்றதும் அவர் அபியை பார்த்தார். அவர் பார்வையைப் பார்த்தவள் விடுவிடுவென நடந்து சென்று சதாசிவம் வண்டியில் போய் அமர்த்துக் கொண்டாள்.

அபி சதாசிவத்திடம் நீங்க கூட்டிட்டுப் போங்க தாத்தா தியா வருவா என்றதும் சரி அபி நான் கிளம்புறேன் என்றவர் தன் வண்டியின் அருகே சென்றார். அவர் வண்டியில் அமர்ந்து டிரைவரை கிளம்ப சொன்னவர் அபியைப் பார்த்து தலையசைத்தார்.தியா ஓரக்கண்ணால் அபியைப் பார்த்தவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அதில் சிரித்தவன் அவளை நெருங்கி கோபமா பேபி என்றான் சிரித்துக் கொண்டே அவள் எதுவும் பேசாமல் இருக்கவும் வீட்டுக்கு வர மாட்டியா என்று லூசு போலவே வேண்டுமென்றே அவள் வாயைப் பிடுங்கக் கேட்டான். நான் ஏன் வரனும் வர மாட்டேன் போடா என்றாள் கோபத்தில் சதாசிவம் பாவமாக இருவரையும் பார்த்தார்.

அபியோ அவள் பதிலில் சிரித்தவன் வண்டியைக் கிளப்ப சொன்னான். பின் அவர்கள் கிளம்பியதும் வீட்டிற்கு கால் பண்ணி ஹர்ஷி என்ன செய்கிறாள் என்று கேட்டு விட்டு தன் கடைக்கு சென்றான். அவன் மனசாட்சியோ அவ திட்டுறா நீயும் கேட்டுட்டு சிரிச்சுட்டு நிக்குற என்று கேள்வி எழுப்பவும்
என்னோட தியா பேபி கோபப்படும் போது சூப்பரா இருக்கா என்று கூறவும் அட வெட்கங்கெட்டப் பயலே என்று திட்டிவிட்டுச் சென்றது.

இங்கு வீட்டுக்கு வந்து தருணுக்கு சாதம் கொஞ்சம் ஊட்டியவள் அவனை தன் மடியில் போட்டுத் தட்டிக் கொடுத்துத் தூங்க வைத்தாள். அவன் தூங்கியதும் ஜெயாவை அழைத்து தம்பியைப் பார்த்துக்கோ ஜெயா அங்க ஹர்ஷி பாப்பாக்கும் உடம்பு சரியில்லை நான் காலையில் வரேன் என்று கூறியவள் மற்ற பிள்ளைகளுடன் சிறிது நேரம் செலவழித்தாள்.

கிளம்புவதற்கு முன்பு தருணை பார்க்க வந்தவள் இப்பொழுது கொஞ்சம் பீவர் குறைந்து இருக்கவும் அவன் தலையை வருடினாள் அவன் எழுந்து சாக்லேட் தா ம்மா என்று கேட்கவும் பீவர் குறையட்டும் நாளைக்கு வாங்கி தரேன் என்று கூறியதும் ம்ம் என்று சமத்தாகப் படுத்துக் கொண்டான்.

அவன் தலையைத் தடவிக் கொண்டே தருக்குட்டி நான் இப்போ அங்க வீட்டுக்குப் போறேன் ஹர்ஷி பாப்பாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை நான் உன்னை நாளைக்கு வந்து பார்க்கிறேன் தடுக்குட்டி வரும் போது சாக்லேட் வாங்கிட்டு வரேன் சரியா அது வரையும் இங்க சமத்தா இருக்கனும் சரியா என்றதும் ம்ம் என்று தலையாட்டினான்.

சிறிது நேரம் இருந்து விட்டு ஆயிரம் முறை சொல்லி விட்டு மதைே இல்லாமல் கிளம்பிச் சென்றாள். தருணை விட்டுச் செல்ல மனதே இல்லை ஆனால் அங்கு ஹர்ஷி தான் இல்லாமல் இருக்க மாட்டாள் என்று கிளம்பினாள்..

இங்கு வீட்டுக்கு வந்ததும் என்ன மா என்று கேட்ட சந்திராவிடம் தருணுக்கு உடம்பு சரியில்லை அத்தை அதான் போய்ட்டு வந்தோம் இப்போ நல்லா இருக்கான் என்று கூறி விட்டு ஹர்ஷிக்கு பாலை எடுத்துக் கொண்டு தன் அறைக்கு தூக்கி சென்றாள்.

அபி மதிய உணவிற்கு வீட்டுக்கு வந்தவன் தன் அறையில் ஹர்ஷி சத்தம் கேட்கவே சென்று பார்த்தவன் தியா இருக்கவும் அடக்க மாட்டாமல் சிரித்தான்... அவள் தன்னிடம் வர மாட்டேன் என்று சொல்லி விட்டு விரைவாக வந்து தன் மகளுக்கு பால் புகட்டி கொண்டிருப்பதை பார்த்தவன் உருகி போனான்…

தன் தியா பேபியின் மேல் கொள்ளை கொள்ளையாக ஆசை வந்தது…

வாழ்வு சிறக்கும்...