வாழ்வு -23:

ஹர்ஷிக்கு ஊட்டிக் கொண்டிருந்தவள் ஏதோ உள்ளுணர்வு குறுகுறுக்க நிமிர்ந்துப் பார்த்தவள் பார்த்தது தன்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவனை தான்.. ஹக்கும் எப்போ பார்த்தாலும் சிரிச்சு சிரிச்சே மயக்குறான் வெள்ளப் பன்னி என்று தனக்குள் பேசிக் கொண்டவள் முகத்தை வேண்டுமென்றே வெடுக்கென்று திருப்பினாள்.

அவனா மயக்குறான் நீயே தான் அவன் சிரிப்புக்கு மயங்குற அவனை குத்தம் சொல்ற என்று அவள் மனசாட்சி கவுண்டர் கொடுக்க ஆமாம் அழகா இருக்காங்க அதுவும் சிரிச்சா ரொம்ப அழகா இருக்காங்க அதுக்கு இப்போ என்னாங்குற உன் வேலையைப் பார்த்துட்டுப் போ என்று அதனை விரட்டினாள்.

ஆக மொத்தம் புருஷனும் பெண்டாட்டியும் எல்லா விஷயத்துலையும் ஒரே மாதிரி தான் இருக்கீங்க நல்லா ஜோடி சேர்த்துருக்கீங்க டா யப்பா முடியல உங்களோட

அவளைப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் கர்ம சிரத்தையாக மகளுக்கு பால் புகட்டிக் கொண்டிருந்தாள் அவள் அருகில் வந்தவன் ஹர்ஷியின் தலையிலும் கழுத்திலும் கை வைத்து சுடுகிறதா என்று பார்த்தவன் வேண்டுமென்றே நிமிரும் போது அவள் தலையில் தன் தலையால் இடித்தான்.

ஆஹ் என்று கத்தியவள் வாய் குள்ளேயே ஏதோ முனக என்னடி முன குற என்று கேட்டதும் நான் உங்க கிட்ட பேச மாட்டேன் நீங்களும் பேசாதீங்க என்று கூறியவளைப் பார்த்து ஏன் பேச மாட்டேங்கிற பேபி என்று அவளோடு இழைந்தான். ப்ச் தள்ளுங்க பாப்பா கையில இருக்கா என்று கூற ஏய் நீ தானே என் மேல கோபமா இருக்க நீ பேசாத தள்ளி இருந்துக்கோ நான் என் ேபசாம இருக்கனும் என்று குழப்பினான்.

அவன் கூறியது ஒன்றும் புரியாமல் சந்தேமாக பார்த்தவளை நம்பு பேபி கூட்டிக் கழிச்சுப் பாரு கணக்கு கரெக்டா இருக்கும் என்றதும் யோசித்தவளை அதற்கு மேல் யோசிக்க விடாமல் பேபி மன்னிச்சிடு டி எனக்கு வேலை வந்ததுல மறந்துட்டேன் என்னை மன்னிச்சிடு பேபி என்று கேட்கவும் என் கிட்ட எதுக்கு மன்னிப்புக் கேக்குறீங்க என்றவள் பால் குடித்துத் தன் மடியில் தூங்கும் ஹர்ஷியை தூக்கித் தொட்டிலில் கிடத்தினாள்.

கை கால் கழுவிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்று தன்னை கடந்து சென்றவளின் கரம் பிடித்தவன் பேபி பேசு டி என்றதும் எனக்கு எப்போ பேசணும்னு தோணுதோ அப்போ பேசுவேன் என்றவளை இழுத்து நச்சென்று தன் மீசை முடி குத்த கன்னத்தில் முத்தமொன்றை வைக்க அதிர்ந்தாள்.

அவள் அதிர்ந்து கண்கள் சிவக்க ஏதோ அவனை திட்ட வர அவள் சிவந்து வரியோடிய இதழ்களை பப்பிள்காமாய் தன் அதரத்துக்குள் அதக்கி மென்றவன் நாவையும் விட்டு வைக்கவில்லை..சிறிது நேரத்தில் அவளை விட்டுப் பிரிந்தவன் பேபி கோபத்துல செமயா இருக்கே டி இப்படியே இரு செம கிக்கா இருக்கு என்று மீண்டும் ஒரு முத்தத்தைப் பதித்து அவள் கத்துவதற்குள் சிரித்துக் கொண்டே குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

நான் கோபமா இருந்தா கிக்கா இருக்குன்னு சொல்றான் என்ன மேக் இவன் என்று யோசித்தவள் யாராவது கோபப்பட்டா திரும்ப பதிலுக்கு கோபப்படனும் இல்லை வேற எதிர்வினை இருக்கும்..இவன் கிட்ட சண்டை போட்டா திரும்ப அவன் எதாவது சண்டை போடுவான் என்று பார்த்தால் இவன் இப்படி சொல்றான் என்ன பண்றது என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டாள்.

ஐயோ என்று கீழே சென்றாள்..அங்கு ஹர்ஷா தேவி தனி டிராக் ஓடிக் கொண்டிருந்தது. ரேவதி போனில் எதோ நோண்டிக் கொண்டிருந்தாள்.இவள் கீழே இறங்கும் போது தான் இரு தாத்தாக்களும் வந்தனர்..தன் தாத்தாவை பார்த்து தாத்தா தருணுக்கு சாப்பாடு குடுத்தீங்களா மதியத்துக்கு என்று கேட்டாள்.

ம்ம் சாப்பாடு ஊட்டிட்டு தான் வரேன் சந்தும்மா இப்போ நல்லா இருக்கான் என்று கூறியும் அவள் முகம் தெளியாமல் இருப்பதை அபி பார்த்து ஒரு முடிவு எடுத்துக் கொண்டான்.அப்பொழுது தேவி தருண் குட்டியை இங்கே அழைச்சிட்டு வந்துருக்கலாம்ல அண்ணி என்றதும் சிரித்தாலே தவிர எதுவும் பேசவில்லை.

அப்பொழுது தான் கவனித்தாள் அனைவரும் இருந்தார்கள் ஆனால் கோகிலா மட்டும் இல்லை என்றதும் ஹர்ஷாவிடம் திரும்பி அண்ணா அம்மா எங்க என்று கேட்டதும் அபியைப் பார்த்தவன் அவங்களக்கு ஊருல கொஞ்சம் வேலை மா அதான் அப்பா வேற தனியா இருக்காங்க எங்களை இங்க இருக்க சொல்லிட்டு அவங்க நேற்று கிளம்பிட்டாங்க என்று கூறினான்.

கோகிலா தன்னால் போக வில்லை அபி தான் தன் அத்தையை அழைத்து தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் கூறினான்.அத்தை நான் ரேவதியை என் தங்கையாக தான் பார்க்கிறேன் நான் ரேவதியைக் கல்யாணம் பண்ணிக்கலன்னு தான் நீங்க சந்தியா மேல கோபமா இருக்கீங்கன்னு தெரியும்...அந்த கோபம் சில சமயத்துல உங்களை அறியாமலே வெளியே விஷம் தோய்ந்த வார்த்தைகளா வருது..

என்னை உங்களுக்கு எவ்ளோ பிடிக்கும்னு எனக்கு தெரியும் நீங்க சந்தியாவை ஹர்ட் பண்றதா நினைச்சு என்னையும் நீங்க ஹார்ட் பண்றீங்க என் பொண்டாட்டிய பாதிக்குற எந்த விஷயமும் என்னையும் பாதிக்கும்.. நான் இப்போ கொஞ்ச நாளா தான் சந்தோஷமா இருக்கேன் பிளீஸ் அத்தை இனி என் பொண்டாட்டியை எதும் சொல்லாதீங்க என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் சென்று விட்டான்.

பின் ஹர்ஷியை வந்து பார்த்தவர் தன் ஊருக்கு கிளம்பி விட்டார். பின் அனைவரையும் அழைத்து சாப்பாடு பறிமாறினாள்..பின் அனைவரும் சாப்பிட்டதும் தான் சாப்பிட இருக்கையில் அமர்ந்தாள் அபியும் அவள் பக்கத்தில் அமர்ந்தான்.அவனை ஒரு பார்வை பார்த்தவள் தனக்கு சாப்பாடு எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

யாரும் தங்களை கவனிக்க வில்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டவன் சாதம் சாம்பார் என்று அளவுக்கு அதிகமாக எடுத்து வைத்தான் அதில் விழிப் பிதுங்கியவள் அவனை பார்த்து பேய் முழி முழித்தாள். தன் பார்த்தவளிடம் இது எல்லாத்தையும் சாப்பிட்டு முடிச்சிருக்கனும் இப்படி எலி மாதிரி கொறிக்கக் கூடாது என்றவன் நல்ல சாப்டா தானே இன்னைக்கு நைட் ஒர்க்கவுட் பண்றதுக்கு தெம்பு இருக்கும் என்று ஒரு குண்டைத் தூக்கி போட்டான்.

அவள் வாயில் வைத்த சாப்பாடு தொண்டையை விட்டு இறங்க மாட்டேன் என்று சதி செய்தது..அவன் நைட் ஒர்க்கவும் என்றதிலேயே ஜெர்க்கானவள் அவன் பார்த்தப் பார்வை இருக்கே அப்பப்பா என்ன பார்வை அது. தன் தலையைக் கீழே குனிந்துக் கொண்டாள்.

அவன் நகர்ந்ததும் தான் தலையை நிமிர்ந்தாள்.அவன் சென்று விட்டானா என்று பார்க்க நிமிர்ந்தவளுக்காகவே காத்திருந்தவன் போல கண்ணடித்தான் அவளை பார்த்து..அதில் இன்னும் படப்படப்பாக உணர்ந்தாள்.

எதுக்கு இப்படி எல்லாம் பண்றாங்க என்று நினைத்தவளுக்கு அதற்கு மேல் உணவு இறங்க மாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது...அவள் அப்படியே அமர்ந்திருக்கவும் மீண்டும் அவள் அருகில் அமர்ந்தவன் அவள் இடைக் கூடாக கையை விட்டு இறுக்கிப் பிடித்தவன் சாப்பிடு பேபி என்றான்..

மாமா என்று திக்கி திணறினாள் அவன் கைகளோ அவள் இடையில் மேலும் கீழுமாய் வருட இன்ப அவஸ்தையில் நெளிய ஒரு அழுத்தம் கொடுத்து தன்னை பார்க்க வைத்தவன் சாப்பிடு நான் கடைக்குப் போயிட்டு வரேன் என்று அவள் இடையில் கிள்ளி அவளை துள்ள விட்டு தான் கடைக்கு சென்றான்.

டேய் அபி உனக்கு ஒன்னுமே இல்லையாடா..உன் மேல கோபமா இருக்குற பிள்ளைக்கிட்ட போய் இப்படி பண்ற என்ற மனசாட்சியிடம்.. கோபத்தை குறைக்கிற புது டெக்னிக் உன்னை மாதிரி சின்ன பையனுக்கெல்லாம் அது தெரியாது என்றவன் உல்லாசமாக விசிலடித்தக் கொண்டே வண்டியைக் கிளப்பிக் கொண்டுப் போனான்.

வாழ்வு சிறக்கும்...

வாழ்வு- 24 :

இரண்டு மணிக்கு கடைக்கு சென்றவன் கணக்கு வழக்கு பார்த்து விட்டு மூன்றரை மணி அளவில் கடையை விட்டுக் கிளம்பி குழந்தைகள் இருக்கும் வீட்டிற்கு சென்றான். அருகில் இருந்த சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்தவன் குழந்தைகளுக்கு திண்பண்டம் வாங்கிக் கொண்டு சில வகையான சாக்லேட்ஸையும் வாங்கிக் கொண்டு கிளம்பினான்.

இவனை கண்டதும் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அருகில் ஓடி வந்தனர். அவர்கள் அனைவரையும் அறைக்கு அழைத்து சென்றவன் வாங்கி வந்த திண்பண்டங்களை பகிர்ந்து கொடுத்தான். அங்கு தான் சதாசிவமும் இருந்தார் இவனை கண்டதும் பிள்ளைகள் அறைக்கு வந்தார்.

குட்டீஸ் இன்னும் ஒரு மாசத்துல உங்க எல்லாரையும் அப்பா புது வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன் அது வரையும் சமத்தா நல்ல பிள்ளைகளா இங்க இருக்கனும் சரியா என்று கேட்டதும் அனைவரும் சரிப்பா என்றனர். ஒரு வாண்டு அப்பா பெரிய வீடா இருக்குமா என்று கேட்டான் ஹம்ம் ஆமாம் கண்ணா பெரிய வீடு தான். உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கும் ஆனால் இப்போ சொல்ல மாட்டேன் சர்பிரைஸ் இன்னும் ஒரு மாசத்துல பார்க்க தானே போறீங்க என்றான்.

நானும் அம்மாவும் வந்து உங்களைப் பார்ப்போம் சரியா ஒரு வேளை அம்மாவால வர முடியலைன்னா நான் வருவேன் சரியா குட்டிஸ் எல்லாம் இந்த ஒரு மாசத்துக்கு மட்டும் தான் சரியா அப்புறம் எல்லாரும் பக்கத்துப் பக்கத்துலையே இருப்போம். நீங்கலாம் பெரிய பிள்ளைங்க இல்லையா தருண் உங்களை விட குட்டிப் பையன் தானே அதனால இப்போ தம்பியை மட்டும் கூட கூட்டிட்டு போறேன் சரியா

இன்னும் ஒரு மாதம் கழித்து உங்களையும் அழைச்சிட்டு போயிடுவேன் சரியா என்றதும் சரிப்பா என்றதும் வெரி குட் குட்டீஸ் நான் சொன்னதும் ஓகே சொன்னதுக்கு என்றவன் நீங்க சொன்ன பேச்சு கேட்டதால உங்களுக்கெல்லாம் கிப்டா சாக்லேட் என்று கூறியவன் அனைவருக்கும் சாக்லேட்ஸை கொடுத்து விளையாட அனுப்பி வைத்தான்.

தருண் மட்டும் சாக்லேட்டை கையில் வைத்துக் கொண்டு சாக்லேட்டையும் அபியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். அவன் செய்கையைப் பார்த்து என்ன கருக் குட்டி என்று கேட்க ப்பா அம்மா சாக்லேட் நான் கேட்டதுக்கு இப்போ வேண்டாம் நாளைக்கு வாங்கித் தரேன்னு சொன்னாங்க.. நான் இப்போ சாக்லேட் சாப்பிட்டா உடம்பு சீக்கிரமா சரியாகாதுன்னு சொன்னாங்க என்று சாக்லேட் சாப்பிட முடியாதோ என்று நினைத்துக் கொண்டு பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அபியிடம் கூறினான்.

அவன் கூறியதைக் கேட்டதும் சிரித்தவன் தருக்குட்டி இனி நீ அழ மாட்டேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணு உனக்கு உடம்பும் சரியாயிடும் நீ சாக்லேட்டும் சாப்பிடலாம் என்று கூறியதும் அவன் கையில் ஓடி வந்து ப்ராமிஸ் பண்ணியவன் சாக்லேட்டை பிரித்து வாயில் போட்டுக் கொண்டு அபியைப் பார்த்து சிரித்தான்.

அபி அவனை தன்னுடன் அணைத்துக் கொண்டு சாக்லேட்னா அவ்வளவு பிடிக்குமா என்று அவனுக்கு முத்தம் வைத்து கிச்கிச்சு மூட்டிய தில் சிரித்தான்.பின் அவனை விளையாட அனுப்பி வைத்தவன் சதாசிவம் நிற்கவும் வாங்க தாத்தா என்றதும் அபி ஏதோ வீடு என்று சொன்னியே என்றதும் ஹிம்ம் ஆமாம் தாத்தா நம்ம வீட்டுக்கு Uக்கத்துல ஐந்து ஏக்கர் விலைக்கு வந்துச்சு வாங்கிட்டேன்.

அதுல தான் இப்போ வீடு பிள்ளைகளுக்கு கட்டிட்டு இருக்கேன் என்றதும் அபி எதுக்கு வீண் செலவு என்றதும் செலவைப் பார்த்தால் ஒன்னும் வேலைக்காகாது தாத்தா தியாவ பார்க்கலைன்னு தருண் அழுது ஹாஸ்பிட்டல் எல்லாம் போய் எல்லாருக்கும் கஷ்டம் இதே பிள்ளைங்க நம்ம பக்கத்துலேயே இருந்தா அவர்க ஏங்க மாட்டாங்கல்ல நாமும் அலைய வேண்டாம் என்று கூறினான்.

தியா சொன்னா நீங்க போய் தருணை பார்த்துட்டு வாங்கன்னு அன்னைக்கு இந்த வீட்டோடு பிளான் பார்த்து சொல்லுங்கன்னு இன்ஜினியர் கூப்பிட்டார் அதை பார்க்க போனது ல தி யா சொன்னதை மறந்துட்டேன் தாத்தா என்றதும் அவனை சதாசிவம் கட்டி அணைத்துக் கொண்டார்.

அபி கல்யாணம் முடிந்த அன்றே இருபத்தைந்து பிள்ளைகளையும் சட்டப்படி தத்தெடுத்தற்கான பார்மில் தான் சந்தியாவிடம் அன்று கையெழுத்து வாங்கினான். அதையும் சதாசிவத்திடம் கூற மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தார். இவனை எந்த ரகத்தில் சேர்ப்பது என்ற ஆராய்ச்சியில் இருந்தார்.

வாங்க தாத்தா வீட்டுக்குப் போகலாம் என்று அழைத்தவனிடம் நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன் அபி நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க என்றதும் பிள்ளைகளிடம் கூறிவிட்டு தருணை தன்னுடன் அழைத்துக் கொண்டு அவனுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு திண்பண்டம் வாங்கிக் கொடுத்து அழைத்து வந்தான்.

வீட்டிற்கு வந்ததும் தோட்டத்தில் ஹர்ஷியை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்த தியாவை பார்த்து ம்மா என்று கூவிக் கொண்டே ஓடி அவள் கால்களைக் கட்டிக் கொண்டான்.அவனை இங்கு எதிர்பாராதவள் தருக்குட்டி என்று கூவியவன் இங்க எப்படி நீ என்று அவன் தலையைத் தடவினாள்.

அப்பா தான் மா கூட்டிட்டு வந்தாரு என்று கூறியவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான். வாடா தருக்குட்டி உள்ளே போகலாம் என்று அவனை தூக்கிக் கொண்டான் அபி. அவனை பின் தொடர்ந்தவள் தங்கள் அறைக்கு வந்ததும் ஹர்ஷிக்கு விளையாட பொம்மையை அவளிடம் கொடுத்து விட்டு அவள் விழாமல் இருக்க தலையணையை பின்னால் வைத்தாள்.

தருக்குட்டி என்று அழைத்ததும் அவன் இவளிடம் ஓடி வந்து அவள் மடியில் எறி அமர்ந்து கொண்டான்.அவன் தலையை அவள் தடவிக் கொடுக்க சுகமாக அவள் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டவன் அம்மா நான் இனிமே இங்கே தான் இருக்கப் போறேனாம் அப்பா சொன்னாங்க என்று குதூகலமாக கூறினான்.

ஓ...என்றவள் அபியை நிமிர்ந்து பார்க்க அவன் கண்ணக்குழி விழ சிரித்தவன் கண்ணடித்து உதட்டை குவித்து முத்தமிடுவது போல் சைகை செய்ய படக்கென்று கீழே குனிந்துக் கொண்டாள்.அவன் கண்ணக்குழி சிரிப்பில் தன்னைப் பறிக் கொடுத்தவள் அவன் கண்ணடித்து உதட்டை குவித்ததும் படப்படவென்று வந்தது.

அப்பொழுது தான் தருணின் துணி அடங்கிய பையைக் கண்டதும் இங்கே தான் இருக்க போறான என்று கேட்டாள். ஆனா எதுக்கு என்று லூசுதனமாக கேட்டாள்.என் பையன் இங்க தான் இருப்பான் என்று கூறினான். அதற்கு மேல் எதுவும் அவள் கேட்கவில்லை.அவளே காலையில் இங்கு அழைத்து வந்திருப்பாள் தான். கோகிலா என்ன சொல்வாரோ என்று பயந்து தான் அழைத்து வரவில்லை.

தருணிடம் எதாவது சாப்பிடுறியா தருக்குட்டி என்று கேட்கவும் ம்ம் என்றவன் அவளிடம் இருந்து பிரிந்து அபியின் கையில் இருந்த பையை வாங்கி அதில் இருந்த பால் பன்னை எடுத்து சாப்பிட்டு தியாவிற்கு ஒன்றை கொடுத்தவன் அபியிடம் வந்து அப்பா உங்களுக்கு என்று நீட்டினான்.

எனக்கு இந்த பால் பன் பிடிக்காது தருக்குட்டி வேற பால் பன் தான் பிடிக்கும் என்று தியாவை பார்த்துக் கொண்டே கூறினான். இவர் ஏன் இப்படி பார்க்கிறாரு என்று நினைத்துக் கொண்டிருக்கையில் வேறையா அது எப்படி இருக்கும் என்று கேட்ட தருணிடம் அது அப்புறம் வாங்கித் தரேன் என்று கூறினான்.

இப்போ சாக்லேட் சாப்பிடு என்று கொடுக்க அதை வாங்கிக் கொண்டு சந்தியாவைத் திரும்பிப் பார்த்தான்.அதைக் கண்டவள் நோ தருண் அதை சாப்பிடக் கூடாதுன்னு சொன்னேன்ல என்றதும் அப்பாக்கிட்ட பிராமிஸ் பண்ணிட்டேன் சாப்பிடலாம்னு சொன்னாரு என்றதும் தியா அபியை முறைத்தாள்.

அவள் முறைப்பதைப் பார்த்த தருண் அம்மா அப்பா பாவம் அப்பாவ திட்டாதீங்க என்று அவன் முன்னால் நின்று தன் இரு கைகளையும் விரித்துக் கொண்டு அபியை மறைத்துக் கொள்வது போல் நின்றான் அதை கண்ட சந்தியாவிற்கு சிரிப்பு வந்து விட்டது.

அபியின் அருகில் அவன் ரொம்பவே குட்டியாக தெரிந்தான்..அவன் அபியை மறைப்பது போல் நின்று தன்னிடம் இருந்து காப்பாற்றுபவன் போல் நின்றதும் சிரிப்பு வந்து விட்டது. சின்னவனை ரசிப்பது போல் அவன் பின்னால் நின்ற பெரியவனையும் ரசித்தாள்.

தான் பார்ப்பது அவளுக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்க ஆனால் அவள் பார்வையைக் கண்டு கொண்டான் அபிமன்யு.
பின் கீழே வந்தனர்.. அனைவரும் பேசிக் கொண்டு இருந்தார்கள்...அவர்களுடன் போய் பாட்டி தாத்தா என்று சந்திரா போய் அமர்ந்து கொண்டான். 

தேவி ஹர்ஷாவிடம் தருணை சரியான வாலு என்கவும் எனக்கு வாலு எல்லாம் இல்லை அத்தை என்று முகத்தை சுருக்கி திரும்பி நின்று காட்ட அவனை இழுத்து தன்னோடு சேர்த்தனைத்த க்யூட் பாய் டா தருக்குட்டி என்று முத்தமிட்டாள்.

பின் அனைவரும் இரவு உணவு உண்டு விட்டு அபி தன் அறைக்கு தருணுடன் வர தியா சந்திராவுடன் சமயலறையில் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு தன் அறைக்கு வர அங்கு கண்ட காட்சியில் அதிர்ந்தாள்.

வெறும் சாட்ஸுடன் தருண் நின்றிருந்தான் ஆனால் அவனுக்கு போட்டியாக அபியும் வெறும் சாட்ஸுடன் நிற்கவும் அதை பார்த்து ஸ்தம்பித்தாள். முடி அடர்ந்த மார்பு அவளை வா வந்து மஞ்சம் கொள் என அழைக்க அவன் கட்டுடல் அவளைக் கட்டிப் போட்டது.

ஐயோ என்ன இப்படி நிக்குறாங்க என்று நினைத்துக் கொண்டு அவனையே வைத்தக் கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். தருண் விளையாண்ட களைப்பில் சீக்கிரம் உறங்கி விட இவள் குளியலறை சென்று வந்து விட்டு ஹர்ஷிக்கு பால் கொடுத்து விட்டு அவளை தட்டி தூங்க வைத்து விட்டு வரும் போது அபி தருண் அருகில் படுத்து உறங்கி இறந்தான்.

தருணிற்கு மறு பக்கம் வந்து படுத்தவள் ஏதோ இன்னைக்கு ஒர்க்கவுட் அது இதுன்னு சொன்னாரு இப்போ தூங்குறாரு என்று பெருமூச்சு விட்டவள் தருணை அனைத்துக் கொண்டு கண்ணை மூடினாள்.

சிறிது நேரம் கழித்து தன் பக்கத்தில் தன்னை நெருக்கி படுக்க அதிர்ந்தவள் சட்டென்று எழப் பார்த்தாள்.அந்த கோழியை எழ விடாமல் அப்படியே அமுக்கியவன் அவள் காது மடலை பற்களால் கடிதிழுக்க சிலிர்த்தாள்.

எழுந்த உப்புக் கண்டம் போட்டுவேன் படுடி என்றவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டான்.மாமா கூசுது எழுந்துறீங்க பிளீஸ் என்றதும் முடியாது என்றவனின் கையை அவள் இடையில் தாராளமாக ஊர்ந்தது…

மூச்சை இழுத்து விட்டவள் மாமா பிளீஸ் மாமா என்று திக்கி திணறியும் அவன் அவளை விடவில்லை. அவனிடம் இருந்து வெகு சிரமப் பட்டு விலகியவள் அவனை திசைத்திருப்பத்தான் அந்த கேள்வியைக் கேட்டாள். ஆனால் அதுவே சிங்கத்தை சிகரம் தொட வைத்து விட்டது..

அவனிடம் இருந்து பிரிந்து மாமா நீங்க வேற ஒரு பால் பன் சாப்பிடுவேன்னு சொன்னீங்கள்ல்ல அது எங்க கிடைக்கும்.. இல்லனா ரெசிப்பி சொல்லுங்க என்றதும் அடக்க மாட்டாமல் சிரித்து விட்டான்.. பின் பிள்ளைகள் எழுந்து விடுவார்கள் என்று பயந்து சிரிப்பை அடக்கியவன் கண்டிப்பா சொல்லியே ஆகனுமா..என்று மீண்டும் கேட்டான்.

ம்ம் என்று தலையாட்டியவளைக் கொஞ்சம் கூட யோசிக்க விடாமல் அவள் இதழை சிறை செய்தவன் தன் முத்தத்தில் அவளைத் திளைக்க வைத்து... அவள் மாராப்பு சேலையை விலக்கி தன் பால் பன்கள் இரண்டையும் அடக்க தன் இரண்டு கைகள் போதாமல் இன்னும் இரண்டு கைகள் இருந்திருக்கலாம் என்று வருத்தப் பட்டான்.

அவன் அவள் இதழில் இருந்து பிரிந்தவன் தன் பால் பன்களில் ஒன்றைக் கவ்விக் கொண்டான்.அப்பொழுது தான் தியாவிற்கு தன்னிலை விளங்கியது. அப்புறம் அவளை எங்கு விட்டான்...அவளைத் துள்ள விட்டு..துடிக்க விட்டு தனக்கு பிடித்தப் பால் பன்னை சுவைத்து அவளுக்கு தான் சொன்ன பால் பன் எது என்று அறிமுகப் படுத்தி வைத்தான்…

சிங்கம் சிகரம் தொட்டு விட்டது….ஹா ஹா..

வாழ்வு சிறக்கும்...