மோகம்-29:

மாலை நேரம் போல் எழுந்த கதிருக்கு கட்டிலை விட்டு எழ மனதே இல்லை.. அதுவும் தன் கழுத்தைக் கட்டி கொண்டு தூங்கும் தமிழைப் பார்க்க பார்க்க அப்படியே அவளை கட்டிக்கொண்டு இருக்க ஆசை வந்தது..

(பூவாக்கு என்ன பண்ணுவ ராசா..)

ஆனால் அப்படியே இருக்க முடியாதே.. வயிறு வேறு பசித்தது தமிழை விலக்கி மெதுவாக எழுந்தவன் சமயலறைக்கு சென்று சாப்பிட்டு விட்டு சுட சுட காபி போட்டு கொண்டு வந்தான்..

என்ன டா புது பொண்ணு பண்றதை இவன் பண்றான்.. காபியை மேசையில் வைத்து விட்டு மெத்தையில் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தவளிடம் சென்று அவளை கட்டி பிடித்து கொண்டு பக்கத்தில் படுத்தவன் தன் மீசை முடிகள் குத்த முத்தமிட்டான்..

கூச்சம் தாங்காமல் சிணுங்கியவள் அத்தான் தூக்கம் வருது தூங்கனும் விடுங்க.. அவன் பக்கம் திரும்பி அவன் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டு தன் உறக்கத்தை தொடர்ந்தாள்..

ஏய் இங்க பாரு டி தூங்கு மூஞ்சி எழுந்திரு சாயுங்காலம் ஆயிடுச்சு நைட் தூங்கிக்கலாம் எழுந்திரு டி என் செல்ல குட்டி எழுந்திரு என்று அவளை தூக்கி அமர வைத்து அவள் உதட்டருகே காபி அடங்கிய கோப்பையை எடுத்து சென்றான்..

தூக்க கலக்கத்தில் நிலையில்லாமல் ஆடிக்கொண்டு இருந்தவள் அதன் வாசம் நாசியை தீண்டவும் கண் விழித்தாள்.. குடி டி இதை குடிச்சுட்டு பிரெஷா குளிச்சுட்டு மாமனுக்காக வெய்ட் பண்ணு.. வெளிய கொஞ்சம் வேலை இருக்கு நான் போய் முடிச்சுட்டு வரேன் என்கவும் அப்படி என்ன வேலை என்று கேட்கவும் ரகசியம் என்று முத்தமிட்டு விட்டு குளிக்க ஓடிவிட்டான்…

இவள் ஆற அமர நன்றாக காபியை ருசித்து விட்டு எழுந்து குளியலறை சென்றாள்.. கதிர் கிணற்றடியில் குளிக்க அவனை பார்த்து முத்தமிடுவது போல் சைகை செய்து உள்ளே சென்று கதவை சாற்றி கொண்டாள்..

கதிர் குளித்து விட்டு வந்தவன் வெளியே கிளம்பி கொண்டிருக்கும் போது தான் குளித்து விட்டு வந்தவள் அவன் அருகே நெருங்கி அவன் கால் மேல் ஏறி நிற்கவும் ஏதோ லம்பா கிடைக்கும்னு இவனும் ஆசையா குனிந்தபடி நிற்க அவன் எதிர்பாரா நேரம் அவன் காதை பிடித்து திருகவும் வலியில் ஆஹ் ஆஹ் விடு டி வலிக்குது என்று கத்தினான்..

அவன் கத்துவதை கேட்டு வெளியில் அமர்ந்தவனுக்கு ஜெர்க்கானது.. ஐயோ இவ பெரிய பஜாரியா இருப்பா போலையே.. புருஷனையே இப்படி அலற விடுறா இவ நமக்கு ஒத்து வர மாட்டா.. நாம நடையை கட்டுவோம்.. யாராலா அடி வாங்க முடியும் சத்தியமா என்னால முடியாதுபா…

நம்ம அம்மா பாத்து கட்டி வைக்கிற பெண்ணையே கட்டிக்குவோம் எதுக்கு தேவை இல்லாம தர்மடி வாங்கிக்கிட்டு.. நம்ம உடம்பு கண்டிப்பா தாங்காது…இவன் ஏதோ கொஞ்சம் பல்கா இருக்குறாதால தாங்கிக்குறான் ஐயோ நான் என் வீட்டுக்கு போறேன் என்று அவன் புலம்பி கொண்டே தன் வீட்டை நோக்கி ஓடி விட்டான்..

(ஐயே நீ வில்லனுக்கு லாய்க்கில்லை போலவே அப்படியே ஓடிடு..)

இங்கு உள்ளே ஹே தமிழ் விடு டி வலிக்குது எதுக்கு டி இப்படி திருகுற நான் தான் எதும் பண்ணலையே நல்ல பிள்ளையா சமத்தா இருக்கேன் என்று கூறியவனின் கை அவள் இடையில் தவழ்ந்து மேலேறியது..

அவன் கையை தட்டி விட்டவள் ஆமா நான் கேட்குறதுக்கு பதில் சொல்லுங்க எதுக்கு நான் போன் பேசும் போது ஆஹ் ன்னு சத்தம் போட்டிங்க அது என்ன ஸ்ஸ் ஹான்னு சத்தம் ஹிம்ம் என்று அவனை அதட்டினாள்..

ஹே அது சும்மா டி நான் பைக்கை எடுத்துட்டு வரல பஸ்ல வந்தேன் அப்போ பஸ்ல இருந்து இறங்கும் போது காலை அழுத்தி கீழ வச்சதும் வலிச்சுது அதான் கத்தினேன் என்று கூறவும் இதை என்ன நம்ப சொல்றீங்களா..

முடியாது முடியாது நான் நம்பமாட்டேன்.. நீங்க பொய் சொல்லறீங்க என்று உதட்டை பிதுக்கி அழ தயாராகவும் ஏய் இப்போ என்ன தான் டி உன் ப்ரெச்சனை.. நீ நெனைக்குற அளவுக்கெல்லாம் நான் ஒர்த் இல்லடி நம்புடி..

(அதானே நம்பிக்கை தானே எல்லாம்..)

ஹிம்ம் நீங்க போங்க நீங்க ஏதோ எனக்கு தெரியாம பண்றீங்க இப்போ கூட பாருங்க எனக்கு தெரியாம எங்கயோ போறீங்க என்கவும் அடியேய் ஏன் டி இப்படி படுத்துற நான் எங்கையும் போகலை.. இங்க சும்மா வெளியே போயிட்டு வரலாம்னு தான் கிளம்புனேன்..

சரி விடு நான் எங்கையும் போகலை போதுமா என்று அப்படியே அமர ஐயோ காரியம் கெட்டுச்சு என்று நினைத்தவள் சரி சரி நீங்க போங்க போயிட்டு நான் சும்மா விளையாண்டேன் என்று அவனுக்கு ஒரு உம்மா கொடுத்து வெளியே அனுப்பி வைத்தாள்..

சரி நான் போய்ட்டு வர வரைக்கும் பத்திரமா இங்கேயே இரு.. வேலையை முடிச்சுட்டு நான் சீக்கிரம் வந்துடுறேன் கதவை பூட்டிக்கோ பாத்து இரு.. நான் வரும்போது கால் பண்றேன் அப்போ வந்து கதவை திற சரியா..யாரு வந்து கதவை தட்டினாலும் திறக்க கூடாது என்று விட்டு சென்றான்..

தமிழ் உள்ளே செல்வதை பார்த்து சொர்ணம் வீட்டிற்கு தன் நடையை எட்டி போட்டான்..இங்கு தமிழின் அடி சத்தம் கேட்டே பயந்து வீடு வந்திருந்தவன் சோபாவில் அமர்ந்து மூஞ்சி புக்கில் யாரு கூடையோ கடலை போட்டு கொண்டிருக்க கதிர் தன்னருகில் வந்து நிற்கவும் அவனை கண்டு எழுந்து நின்றான்..

ஆமா என்ன நான் வரும் போது என் பொண்டாட்டிகிட்ட ஏதோ பேச வந்தது போல தெரிஞ்சுது என்று தாடையை தடவியவாறு கேட்கவும் இவனுக்கு கொலையே நடுங்கியது.. அது அது என்று என்ன சொல்வதென்று தெரியாமல் திக்கி திணற என்ன என்று தன் குரல் உயர்த்தி கர்ஜிக்க அண்ணா ஒன்னும் இல்லை என்று பம்மினான்..

இப்படியே கடைசி வரைக்கும் பம்மிகிட்டு எங்க பக்கம் வராம இருந்தா நீங்க பொழைச்சுப்பீங்க.. நாங்க அப்படியெல்லாம் இருக்க மாட்டோம் எங்களுக்கு சொத்து வேணும் பொண்ணு வேணும்னு இப்போ வந்தது போல அங்க வந்தீங்க.. என் கையால அடி வாங்கியே செத்துடுவீங்க..

என்ன புரியுதா.. என்கவும் கொஞ்சம் தைரியம் வந்ததுவோ.. ஏன் என் அத்தை பொண்ணை அவங்க அம்மா சாக கிடந்தது வச்சு அப்படியே கல்யாணம் பண்ணிக்கிடீங்க இல்லனா அவ எப்படி உங்களை கல்யாணம் பண்ணுவா.. என்று இவன் பாட்டுக்கு பேசிக்கொண்டே செல்ல அடி செருப்பால நாயே என் புருஷனை நான் எப்படி வேணா கட்டுவேன்.. உனக்கெங்க டா வலிக்குது.. என்று குரல் வந்தது..

(தோ வந்துட்டால்ல எங்க சண்டிரானி.. என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்னுட்டு..)

ஏன் டா நாயே நான் வந்து உன்கிட்ட சொன்னேனா எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல என் புருஷனை பிடிக்கலன்னு வந்துட்டான் பேச மூஞ்ச பாரு என்று அவனை அடிக்க கையை ஓங்கி கொண்டு போக கதிர் அவளை இழுத்து பிடித்து தன் கைக்குள் வைத்து கொண்டான்..

ஏய் உன்னை யாரு டி இங்க வர சொன்னது.. என்று கேட்கவும் முறைத்தாள்.. அவள் முறைக்கவும் வாயை கப்பென்று மூடி கொண்டான்.. ஏன் அவன் கேட்கும் போது வாயில் என்ன வச்சுருந்தீங்க என்று கத்தியவள் ராக்கேஷிடம் திரும்பி ஏய் சொல்லு டா நான் உன்கிட்ட சொன்னேனா..

ஆமா நீ எனக்கு யாரு..எங்க அப்பா செத்து போனப்போ வெறும் சொத்துக்காக எங்களை டார்ச்சர் பண்ண கழிசடைங்க தானே நீங்க.. வந்துட்டான் இப்போ.. அப்போ வராதவன் எதுக்கு இப்போ வந்த..ஹிம்ம் சொல்லு டா நாயே..என்று எகிற கதிருக்கு அவளை இழுத்து பிடிப்பதே வேலையாகி போயிற்று..

அவன் தமிழை அதிர்ந்து பார்க்கவும் நீங்க பாசமா வந்து பேசினா நான் வந்துடுவேன்னு நினைச்சீங்களா.. நான் வந்ததே உங்க கணக்கையெல்லாம் முடிக்கணும்னு தான் இப்போ வந்த மாதிரி என் வீட்டு பக்கம் எவனும் வர கூடாது..

எங்க அம்மா இருந்த வரைக்கும் எவனும் வந்து எட்டி பார்க்கலைல அது போலவே இப்போவும் இருக்கணும்.. அந்த வீடு எனக்காக எங்க அப்பா அம்மா விட்டுட்டு போனது..

அதை பறிச்சுக்கணும்னு கனவுல கூட நினைக்காதீங்க.. அது எங்க அம்மா அப்பா வாழ்ந்த வீடு..இனி என் வீட்டு பக்கம் வர வேலை வச்சுக்க கூடாது.. அப்படி மீறி வந்தீங்க என் புருஷன் சும்மா இருக்க மாட்டான்..

ஆமா இரு இரு என் புருஷனை பத்தி பேசுறதுக்கு உனக்கென்ன தகுதி இருக்கு.. நான் உங்க கூட தனியா வந்துட்டேன்னு எப்படி பதறி அடிச்சு ஓடி வந்தான் பாத்தள்ள..அதெல்லாம் உனக்கெங்க தெரிய போகுது..நிமிஷத்துக்கு நிமிஷம் பொண்ணு மாத்திட்டே போற நீ என் புருஷனை பத்தி பேசுறியா..

என்னை தவிர என் புருஷன் எவளையும் பாக்க கூட மாட்டான்..ஆனா நீ த்தூ நாயே அடுத்தவன் பொண்டாட்டின்னு தெரிஞ்சும் மடக்கலாம்னு பிளான் போட்டு தானே அழைச்சிட்டு வந்தீங்க..

உங்களை பத்தி ஏதும் தெரியாதுன்னு நெனச்சுடீங்களா..உன்னை உன் அப்பன் ஆத்தா பத்தி எல்லாம் தெரியும்..

 ஹிம்ம் அப்பறம் ஏதோ சொன்னியே அது என்ன ஆஹ்ன் அம்மா சாக கிடந்தப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு தானே.. ஆமா எங்க அம்மா தான் சொன்னாங்க இவரை கல்யாணம் பண்ணிக்க சொல்லி..இவங்களா ஒன்னும் என்னை கட்டாய படுத்தி தாலி கட்டுல..

எங்க அம்மா முன்னாடியே தான் தாலி கட்டினாரு.. இன்னும் ஒரு விஷயம் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ.. என் புருஷனை நான் கல்யாணம் கட்டுறதுக்கு முன்னாடி இருந்தே எனக்கு பிடிக்கும்..உனக்கு இப்படி சொன்னாதானே புரியும் இல்ல.. நான் வயசுக்கு வந்ததுல இருந்தே அவரை லவ் பண்ணினேன்.. இதுவரைக்கும் இந்த விஷயம் யாருக்கும் தெரியாது.. ஏன் என் புருஷனுக்கே இந்த விஷயம் தெரியாது..

கடைசியா ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ.. இனி இந்த மாதிரி ஏதாவது பிராடுதனம் பண்ணீங்கன்னு தெரிஞ்சுது.. என் புருஷனை விட்டே அடிப்பேன்.. உன் அப்பன் ஆத்தாட்டையும் சொல்லிடு என்ன வர்ட்டா ஆனால் நீ வந்துடாத நாக்கை மடக்கி பத்திரம் காட்டி விட்டு வாங்க அத்தான் நம்ம போலாம்.. என்று அழைக்க ராக்கேஷை முறைத்து விட்டு இது என் பொண்டாட்டியை சைட் அடுச்சதுக்கு என்று அவன் தலையில் நங்கென்று கொட்ட அத்தான் என்று அவன் கையை சுரண்டியவள் என் பங்குக்கு சேர்த்து ரெண்டு கொட்டு வைங்க என்கவும் தன் பொண்டாட்டி பேச்சை மீராதவன் வைத்தான் இன்னும் ரெண்டு கொட்டு கொட்டினான்..

வயசுக்கு ஏத்த மாதிரி அடக்க ஒடுக்கமா ஆம்பள பிள்ளையா வீட்டுல இரு என்ன வெளிய வந்து காலு கையை ஒடச்சுக்காத என்று அவன் கன்னத்தில் வலிக்க பட் பட்டென்று தட்டி விட்டு தமிழை அழைத்து கொண்டு வீடு வந்தான்..

(ஜாடிக்கேத்த மூடி தான் ரெண்டும்..)

மோகம் மையம் கொள்ளும்…

மோகம்-30:


அங்கு அவனை வார்த்தையால் கிழித்து தொங்க விட்டு புருஷனும் பொண்டாட்டியும் ஒன்னும் தெரியாத பிள்ளைகள் போல் பதுசாக தங்கள் வீட்டிற்கு வர நைட் கதிர் வாயை வைத்து கொண்டு சும்மா இருக்காமல் தமிழ் நைட்டுக்கு என்ன சாப்பாடு என்று கேட்டான்..


(சரியான சாப்பாட்டு ராமனா இருப்பான் போலையே..)


ஏற்கனவே அவன் மேல் கொலவெறியில் இருந்தவள் ஹிம்ம் வாயில குத்துனா வாய் தக்காளி சட்னி போட்டுக்கும் ஓடிடு எருமை அந்த நாயி அப்படி பேசுறான் நீ அப்படியே செலையாட்டாம் நிக்குற..


அவன் பேசுன பேச்சுக்கு பொலிர் பொலிர்ன்னு நாலு காதுலயே வைக்க வேண்டாமா நீ பாட்டுக்கு அவன் பேச பேச பெக்க பெக்கன்னு பாத்துட்டு நிக்குற.. ஓடிடு என் மும்நடி நிக்காத நான் இருக்குற வெறிக்கு உன்னை கொலையே பண்ணிடுவேன்..


என்கிட்ட மட்டும் எதுக்கெடுத்தாலும் தமிழு தமிழுன்னு கூவ தெரியுதுள்ள அங்க வாயே பேசாம நிக்குற என்று கத்தவும்.. 


நீ எங்கே டி என்னை பேச விட்ட.. 


(வெளிய சொல்லல..உள்ளுக்குள்ள தான் சொல்லிக்கிட்டான்..)


அவன் விவரமா தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.. இப்பொழுது எதாவது பேசினாலும் அவள் இவனை பிராண்டுவது நிச்சயம்..


(ரொம்ப பெரிய புத்திசாலி தான்டா நீ..)


அவன் அப்படியே நின்று கொண்டிருக்க என்ன மலமாடு மாதிரியே நிக்குற.. பதில் சொல்லு என்கவும் ஆமா நீ எதுவோ அவன்கிட்ட சொல்லிட்டு இருந்தியே என்ன அது என்று கேட்கவும் திருத்திருவென விழித்தாள்..


அவள் முழிக்கவும் ஏய் என்ன முட்டை கண்ணு வச்சு இப்படி முழிக்குற சொல்லு நீ என்ன லவ் பண்ணியா.. என்று அவளை பிடித்து உளுக்கவும் ஹிம்ம் என்று ஒரு மாதிரி இழுத்து கொண்டே அவன் கையில் சிக்காமல் ஓட்டம் பிடித்தாள்..


ஏய் நில்லு டி.. எங்க ஓடுற நில்லு என்று அவளை துரத்த அவள் அவன் கையில் சிக்காமல் ஓடினாள்..ஒருவழியாக அவளை பிடித்து கைகளில் அள்ளிக்கொண்டு அறைக்கு செல்ல விடுங்க அத்தான் நான் போய் எதாவது சமைக்கிறேன் என்று அவனிடமிருந்து நழுவ நீ எங்கேயும் இப்போதைக்கு போக முடியாது..


சொல்லு உன் காதல் காவியத்தை என்று கேட்க போங்க நீங்க கிண்டல் செய்றீங்க நான் சொல்ல மாட்டேன் என்று முகத்தை திருப்ப ஏய் நீ என்னை லவ் பண்ணுனன்னு சொல்றதே அதிசயமா இருக்கு இதுல கிண்டல் பண்ண என்ன இருக்கு..


நீ லவ் பண்ணினது கூட தெரியாம இருந்துருக்கேன் பாரேன் என்று கூற ஹுக்கும் தெரிஞ்சா மட்டும் இழுத்து வச்சு முத்தம் கொடுக்க போறீங்களா என்று வாயை விட அவன் விடாமல் பற்றி கொண்டான் தன் இதழால்..


ஒரு கலவரமே நடத்தியவன் ஹிம்ம் அப்போ தெரியல அதன் பண்ணல ஆனால் இப்போ தெரிஞ்சுடுச்சே அதான் பண்ணிட்டேன் இனி நிறைய பண்ணுவேன் என்று மீண்டும் அவளிதழில் ஒற்றி ஒற்றி எடுக்க ஓரூ முறை விட்டவள் மறுமுறை அவன் அவ்வாறே செய்ய அப்படியே அவன் உதட்டை கவ்வி இழுத்து கொண்டாள்..


அவன் அதுதான் சாக்கென்று அவள் சேலையை விலக்கி இடை வருடி தன் மோகத்தை அவளுக்குள் செலுத்த மங்கையவள் மயங்கி கிறங்கி போனாள்..


பின் ஒருவாறு அவனிடமிருந்து பிரிந்தவள் மூச்சு வாங்க ஓய் சொல்லு டி எப்படி மாமன் மேல காதல் வந்துச்சு எனக்கும் சொல்லேன் கொஞ்சம்.. அதை உன் வாயால கேட்கும் போது அப்படியே ஜிவ்வுன்னு இருக்கும் டி சொல்லு சொல்லு..


(தேன் வந்து காதுல பாயுமோ..)


ஹிம்ம் கிண்டல் பண்ண கூடாது சரியா என்று சிணுங்க நான் ஏன் டி உன்னை கிண்டல் பண்ண போறேன்.. நீ சொல்லு முதல்ல நான் எவ்ளோ ஆர்வமா இருக்கேன் தெரியுமா நம்மையும் ஒரு புள்ளை லவ் பண்ணிருக்குன்னு நினைக்கும் போது ஒரு மாதிரி ஜாலியா இருக்கு.. என்று அவளை தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு அவள் தோளில் தாடையை பதித்தவாறு கேட்டான்..


உங்களுக்கென்ன.. எவ்ளோ சூப்பரா இருக்கீங்க தெரியுமா.. ஊரு புள்ளைக கண்ணெல்லாம் உங்க மேல தான் அவளுக கண்ணுல கொள்ளி கட்டையை வைக்க.. என்று திட்டும் மூடுக்கு மாற அடியேய் நான் எதை சொல்ல சொன்னா நீ வேற எதையோ பேசுரியே அது இப்போ ரொம்ப முக்கியமா..


எனக்கு அது முக்கியம் தான் என் புருஷன் எனக்கு மட்டும் தான் வேற எவளும் பாக்க கூடாது..


ஏய் தமிழு யாரு என்னை பார்த்தாலும் என் கண்ணு உன்னை மட்டும் தான் டி பார்க்கும்.. ஏன்னா நீ மட்டும் தான் இங்கே இருக்க என்று தன் நெஞ்சை சுட்டி காட்ட அவள் அவன் நெஞ்சில் சத்தமாக முத்தமிட்டு சாய்ந்து கொண்டாள்..


மாமா அப்பா செத்த பிறகு நாங்க இந்த வீட்டுல தான் இருந்தோம்.. நயிட்டெல்லாம் அம்மா தூங்கவே மாட்டாங்க.. கதவை தட்டுற சத்தம் கேட்கும் அம்மா வெளிய போனா இந்த ஆம்பளைங்க எல்லாம் ஒரு மாதிரி பார்ப்பாங்க..


எங்க அத்தை வீட்டுல அப்போலாம் ஏதும் கண்டுக்க மாட்டாங்க.. எங்க அம்மா சொல்லிருக்காங்க.. அவங்களுக்கு இந்த வீட்டை எப்படியாவது அவங்க பேருல மாத்தணும்னு நிறைய முயற்சி பண்ணினாங்க..


ஆளு வச்சு கூட மிரட்டினாங்க.. என்னை வச்சுக்கிட்டு அம்மாவால ஒன்னும் முடியலை.. அதான் நம்ம ஊருக்கு என்னை கூட்டிட்டு வந்தாங்க.. எனக்கு அப்போலாம் விவரம் தெரியாது நான் ஊருக்கு வரும் போது எனக்கு அஞ்சு வயசுதான்..


மாமா தான் நாங்க இருக்க ஹெல்ப் பண்ணுவாங்க..அதுனால அம்மா எப்போவும் மாமாவை பற்றி அடிக்கடி பேசுவாங்க.. அவங்க தனியாளா என்னை வளர்த்தாங்க..


அப்போலாம் அம்மா நமக்காக இவ்வளவு கஷ்ட படுறாங்களே நாம நல்லா படிக்கணும்னு படிச்சேன்.. நீங்க எனக்கு சின்ன வயசுல குச்சி மிட்டாய் வாங்கி தருவீங்க நியாபகம் இருக்கா என்று கண்கள் மின்ன கேட்க அடியேய் குச்சி மிட்டாய் வாங்கி குடுத்ததுக்கா லவ் பண்ணின என்று அதிர்ச்சியில் நெஞ்சில் கைவைத்தவாறு கேட்டான்..


அட ச்சி அத்தான் அப்போ இல்ல அப்போ உங்களை எனக்கு பிடிக்கும் அவ்ளோதான் அந்த வயசுல எனக்கெப்படி லவ்வ பத்தி தெரியும் நீங்க என்ன லூசா..


அப்போலாம் என்னை தூக்கிக்கிட்டு கடையில் போய் நிறைய வாங்கி தருவீங்க.. ஆனால் நான் வயசுக்கு வந்த பிறகு நீங்க அப்படியே ஒதுங்கிட்டீங்க.. நானும் நீங்க பேசுவீங்கன்னு பார்த்தேன் ஆனால் நீங்க பேசவே இல்லை..என்று வருத்தத்துடன் கூறினாள்..


தமிழு உன்கூட பேசக்கூடாதுன்னு இல்ல.. நீ பெரிய பெண்ணாயிட்ட இது கிராமம் வேற.. ஒரு பையனும் பொண்ணும் தனியா நின்னு பேசினா இவங்க ஏதாவது கதை கட்டி விட்டுருவாங்க டா.. உன் நல்லதுக்காக தான் நான் பேசாம போயிருப்பேன்..


மத்தபடி உன்கிட்ட பேசக்கூடாதுன்னு எதுவும் இல்லை என்று தன் செயலுக்கு விளக்கம் கூற.. ஹிம்ம் நான் பெரிய பெண் ஆனப்பிறகு கூட அம்மா உங்களை தானே சீர் செய்ய கூப்பிட்டாங்க.. நீங்க தானே தட்டி கட்டுனீங்க..


முன்னாடி எல்லாம் என்கிட்ட வம்பிழுத்து பேசுவீங்க.. வேணும்னே கன்னத்தை பிடுச்சி கிள்ளுவீங்க.. அதுக்கப்பறம் அதெல்லாம் இல்லை பேசுறது கூட இல்லை .. எனக்கு அப்போ ஒன்னுமே புரியல.. நான் எதாவது தப்பு பண்ணிட்டேனா அதனால் தான் நீங்க பேசாம போறீங்களான்னு நிறைய யோசிப்பேன்..


அப்புறம் தான் புரிஞ்சுது நீங்க ஒரு உம்மனா மூஞ்சின்னு என்று கூறவும் முறைத்தான்..


பின்ன என்ன அத்தான் ரோட்டில் போகும் போது மூஞ்ச உர்ருன்னு வச்சுக்கிட்டு எந்த பக்கமும் பாக்காம ஏதோ கடிவாளம் கட்டின குதிரை கணக்கா நேரா பாத்து ஓட்டுவீங்க.. நானும் நீங்க வயல் பக்கம் வரும் போதெல்லாம் உங்க வண்டி சத்தம் கேட்டு எங்கிருந்தாலும் வெளிய வந்து பார்ப்பேன்..


உங்களை பார்க்கலைன்னா அன்னைக்கு நாளே நல்லா இருக்காது தெரியுமா.. அப்படி தான் ஒரு நாள் எனக்கு ட்வெல்த் எக்ஸாம் அப்போ உங்களை பாக்கவே இல்லை நீங்களும் வருவீங்க வருவீங்கன்னு பார்த்து நேரம் தான் போச்சு ..


டைம் ஆகுதேன்னு நான் என்னோட சைக்கிள் எடுத்துக்கிட்டு கொஞ்ச தூரம் போனேன் பஞ்சர்.. அன்னைக்கு பயந்த மாதிரி நான் என்னைக்கும் பயப்படுல தெரியுமா அத்தான்.. ஐயோ போச்சே எக்ஸாம் வேற இருக்கு எப்படி போறதுன்னு தெரியாம திருத்திருவென முழிச்சுட்டு நிக்கும் போதுதான் நீங்க வந்தீங்க..


ஐ மாமாவை பாத்துட்டேன் என்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் எக்ஸாம்க்கு டைம் ஆகுது.. நீங்க வண்டிய நிறுத்துவீங்களான்னு ஒரு பக்கம் சந்தேகம் வேற.. நீங்க தான் இந்த பக்கம் அந்த பக்கம் கூட பாக்க மாட்டீங்களே..


எல்லாம் போச்சுன்னு நான் நினைக்கும் போதுதான் நீங்க நேரா என்கிட்ட வந்து வண்டிய நிறுத்துனீங்க.. சத்தியமா நான் நினைக்கவே இல்லை நீங்க என்கிட்ட பேசுவீங்கன்னு..


என்ன தமிழ் இங்க நிக்குற என்று கேட்கவும் நான் பாட்டுக்கு உங்களை பார்த்துட்டு பெக்க பெக்கன்னு முழுச்சிட்டு நின்னேன்.. அதுக்கப்பறம் தான் நான் வண்டி பஞ்சர் ஆனது சொன்னதும் உனக்கு இன்னைக்கு எக்ஸாம் தானே என்று அதட்டுனீங்க..


நான் ஆமா சொல்லவும் அப்புறம் எதுக்கு அப்படியே திருவிழால தொலைஞ்சி போன பாப்பா போலவே நிக்குற வண்டியில் ஏறு என்று சொன்னதும் தான் நான் ஏறினேன்..


ஒழுங்கா எக்ஸாம் எழுது..டென்ஷன் ஆகாதன்னு என்கிட்ட சொல்லிட்டு நீங்க கிளம்பிட்டீங்க.. நான் எக்ஸாம் எல்லாம் எழுதிட்டு வெளிய வந்து பாத்தா நீங்க வந்து நிக்குறீங்க.. எனக்கு செம ஷாக்..நான் கூட இவங்க ஏன் இங்க வந்து நிக்குறாங்க என்று நினைச்சுட்டு வந்தா அடுத்து போட்டீங்க பாருங்க ஒரு குண்டு அதுல தான் உங்ககிட்ட கவுந்துட்டேன்..


(இதுக்கப்பறம் நான் சொல்றேன் நான் சொல்றேன்..)


தமிழ் தேர்வு எழுதி விட்டு வெளியே வர கதிர் பள்ளிக்கூடத்தின் மெயின் கேட்டிற்கு அருகே நின்று கொண்டிருக்க ஏன் இந்த மாமா இங்க வந்து நிக்குறாங்க என்று யோசித்துக் கொண்டு வந்தவள் தன் பாட்டிற்கு நடந்து சென்றாள்..


இவளை முதலில் பார்க்காதவன் என்ன இன்னும் வரல எக்ஸாம் எப்படி எழுதுனான்னு தெரியலை இன்னும் வரலை என்று அங்கும் இங்கும் திரும்பி பார்க்க அவள் கொஞ்ச தூரத்தில் நடந்து செல்வது தெரிந்தது..


நான் நிக்குறத பாக்கமயே போயிட்டாளா..என்று தன் வண்டியை ஸ்டார்ட் செய்தவன் அவளிடம் சென்று நிறுத்த தன் முன் வண்டியை நிறுத்தவும் ஒரு நொடி பயந்து பின்னே சென்றவள் கதிரை பார்க்கவும் அவனை என்ன மாமா இங்க நிக்குறீங்க என்று கேட்டாள்..


உன் சைக்கிள் பஞ்சர் தானே தமிழ் அதான் உன்னை ஸ்கூல்ல விட்டுட்டு பஞ்சர் கடையில் கொண்டு விட்டுருக்கேன்.. நீ எப்பபை நடந்து வருவேன்னு தான் வந்தேன்.. வா வந்து ஏறு வண்டில என்று பின் சீட்டை கண்களால் காட்டவும் அவனை ஆச்சர்யமாக பார்த்தாள்..


அவள் அப்படுயே பார்த்து கொண்டே நிற்கவும் தமிழ் ஏறு போகலாம் என்கவும் ஏறி அமர்ந்தாள்..


இதையெல்லாம் அவனிடம் சொல்ல ஒஹ் உன்னை பைக்கில் ஏத்திட்டு வந்ததும் உனக்கு வந்துச்சா.. அது தெரியல எப்போ வந்ததுன்னு ஆனால் நீங்க தான் என் புருஷன்னு நான் முடிவு பண்ணிட்டேன்.. கட்டுனா உங்களை தான் கட்டணும்னு இருந்தேன்..


நான் நெனச்சது தான் அம்மாவும் நெனச்சுருக்காங்க.. எப்படியோ உங்களை கல்யாணம் பண்ணிட்டேன்.. எனக்கிருந்த ஒரு ஆசையும் நிறைவேறிடுச்சு நான் இப்போ எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா அத்தான் என்று அவனை கட்டிக்கொண்டு கூறினாள்..


தமிழு..


ஹிம்ம்


ஹே அம்மு..


ஹிம்ம் சொல்லுங்க அத்தான்..


நீ சின்ன வயசுல என்னை மாமான்னு தானே கூப்பிடுவ இப்போ என்ன அத்தான்னு கூப்பிடுற..


அது அது.. அது வந்து.. என்று அவன் சட்டை பட்டனை திருகி கொண்டே உங்களை மாமான்னு நிறைய பேரு கூப்பிடுவாங்க..எனக்கே ஒரு தம்பியோ தங்கச்சியோ.. இல்லை சசி அக்காவோட பையன் கூட உங்களை மாமான்னு கூப்பிடலாம்..


ஆனால் நான் மட்டும் தான் உங்களை அத்தான்னு கூப்பிடுவேன்.. நீங்க எனக்கு மட்டும் தான் அத்தான்.. என்று தன்னோடு அவனை இறுக்கவும் அவனும் அவளை இறுக்கி கட்டிக்கொண்டு செல்லக்குட்டி நானும் உன்னை லவ் பண்றேன் டி..


என்னைக்கு நான் உன் கழுத்துல தாலி காட்டினேனோ அப்பொதுல இருந்து நான் முழுசா மாறிட்டேன் டி..


கல்யாணத்துக்கு முன்னாடிலாம் நான் இப்படி இல்லடி.. என்னை மாத்திட்டே.. நான் நானாகவே இல்ல டி..


நீ நானாகி நாளாச்சு..


என்ன மாறிட்டீங்க நான் தெரிஞ்சிக்கலாமா..


ஹிம்ம் உன் இம்சை இல்லாம தூங்க முடியல டி..


நான் இம்ஸையா உங்களுக்கு.. போங்க நான் பேச மாட்டேன்..


ஐயோ அப்படி மட்டும் சொல்லிடாத டி அது முன்னாடி..


உன்னை சீண்டாம முன்னாடி தூக்கம் வராது..


இப்போ உன்னை தீண்டாம தூக்கம் வராது..


இப்படி முதலுக்கே மோசம் பன்றியே இது உனக்கே அநியாயமா தெரியல.. என்று அவளை இழுத்து தன்னுள் சுருட்டிக் கொண்டான்…


மோகம் மையம் கொண்டுவிட்டது..


வாங்க நாம தொந்தரவு பண்ண வேண்டாம் ஓடிடலாம்..


சுபம்…


மங்களம்...