வாழ்வு - 3
தருண் சொன்னதைக் கேட்டு சிரிப்பு வந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவனிடம்"அவர் என்னை பார்க்கலை டா தரு.. நம்ம குட்டிம்மாவ தான் பார்த்தாரு.. நம்ம அப்பாதான் அவர்.." என்றதும் இங்கு ஒருவனின் முகம் வெலக்கெண்ணெய் குடித்தது போல் ஆனது.
தருணிடம் மெல்லிய குரலில் கூறிக் கொண்டிருந்தவளை ஆசையாகப் பார்த்துக்கு கொண்டிருந்தவன் நம்ம அப்பா என்றதும் "அவங்களுக்கு தான் தியா அப்பா.. உனக்கு நான் வேற டி.."என்று அவன் மனது சிணுங்கியது அவளிடம்.
தருண் அவனை நெருங்கி அவன் கால்களைக் கட்டிக் கொண்டதும் தான் நினைவுக்கு வந்தான். தன் கால்களை தன் சிறு பிஞ்சுக் கரங்களால் அணைத்துக்கொண்டு தன்னை நிமிர்ந்து பார்த்த அவனைக் கண்டதும் உருகிப்போயிற்று.
அதுவரையில் இருந்த ரோமியோ உள்ளே சென்று.. உள்ளே இருந்த தகப்பன் வெளியில் வந்து விட்டான்.அய்யோ இவன் அப்பா என்றால் ரொம்ப பாசத்தைப் பொழிவானே.
அவனை தன் கைகளில் தூக்கியவன் அவனைப் பார்த்து சிரிக்கவும் தருண் "உங்க பேரு என்ன?" என்று கேட்டதும் "அபிமன்யு " என்றான். "அப்போ இன்னையில் இருந்து நீங்க அபிப்பா.." என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டான்.
பிறகு இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.. அபிமன்யு அவனிடம் உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டதும் அவன் அடுக்கிக் கொண்டே போனான்.
பின் அவர்கள் உலகத்தில் பிசியாகி விட இங்கு சந்தியா அவனை பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தாள் நல்லவங்க தான் போல தருக்குட்டிக்கிட்ட உடனே ஒட்டிக்கிட்டாங்க என்று நினைத்துக் கொண்டிருந்தவளை ஹர்ஷி அவள் கன்னத்தைக் கடித்து நினைவுலகத்திற்கு கொண்டு வந்தாள்.
உடனே நேரம் கடப்பதை உணர்ந்து அபியிடம் சென்று தயங்கிக் கொண்டே ஹர்ஷியைக் கொஞ்சம் பிடிங்க தருணைக் குளிக்க வைக்கனும் என்றதும் தன் வலது கையில் அவளை வாங்கிக் கொண்டான்.
தருண் ஹர்ஷியின் கன்னத்தில் தன் ஆள்காட்டி விரல் கொண்டு தீண்டி இந்த பாப்பா அழகா இருக்கு என்று கூறினான்.
உன்னோட பாப்பா தான் தருண் நீ எப்போ வேணாலும் வந்து நம்ம வீட்டுக்கு வந்து பார்த்துட்டுப் போகலாம். அபிமன்யு இருவரையும் தன் இருக்கைகளில் தாங்கியிருக்க அதை பார்க்க அத்தனை அழகாக இருந்தது.
கம்பீரமாக தன் பிள்ளைகளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து தன்னை அறியாமலே அவனை ரசித்தாள்.
பின் தருண் அபியிடமிருந்து கீழே இறங்கி சந்தியாவிடம் வந்தான். அவன் வந்ததும் சுடு தண்ணீரை அங்கிருந்த டப்பில் வெதுவெதுப்பாக கலந்தாள். தருணை அருகே அழைத்து அவன் உடையைக் கலைக்கக் கை வைக்கவும் அவள் கையைப் பிடித்து தடை செய்தான்.
அபியிடம் திரும்பி அபிப்பா திரும்புங்க என்று கூறினான்.அதை பார்த்து பக்கென்று சிரித்து விட்டாள். டேய் தருண் நான் இங்கதான் இருப்பேன் குளிடா ரொம்ப பண்ற என்று அவன் அருகில் வந்து அவன் தலையைக் கலைத்து விட்டான்.
பின் சந்தியா அவனை சமாளித்து அவன் உடையைக் கலைந்தாள். தண்ணீரைக் கண்டதும் அதில் இறங்க வேண்டும் என்ற உந்துதல் வர ஹர்ஷி அபியின் கையில் கைக்கால்களை ஆட்டி நழுவினான்.
என்னடா குட்டி மா என்ன வேணும் என்று மென்மையாக தன் மகளிடம் கேட்டான். அவள் தண்ணீரைக் கைக்காட்டவும் வேண்டாம் டா அண்ணா குளிக்கட்டும் நம்ம சும்மா பார்க்கலாம் என்று கூறியதும் அழ உதடைப் பிதுக்கினாள்.
அவள் விளையாடட்டும் கொஞ்ச நேரம் தானே இது ஹாட் வாட்டர்தான் என்றதும் ஹிம்ம் சரி என்று ஹர்ஷியின் உடைகள் கலைந்து அந்த டப்பில் உள்ள தண்ணீரில் அமர வைத்து அவளைப் பிடித்துக் கொண்டான்.
தண்ணீரில் இறங்கியதும் ஒரே குஷிதான் ஹர்ஷிக்கு தன் கைகளைத் தண்ணீரில் அடித்துக் காட்டித் தன் சந்தோஷத்தை வெளிப் படுத்தினாள்.அப்படியே அவளைக் கொஞ்சிக் கொண்டே தருணைக் குளிக்க வைத்தாள்.
இருவருக்கும் சிறு இடைவெளிதான் இருந்தது.அருகருகே தான் அமர்ந்திருந்தனர் சந்தியா தருணைக் குளிக்க வைப்பதற்காக தன் புடவையை இழுத்து சொருகி இருந்தாள்.
எதேர்ச்சியாக அபி திரும்ப அங்கு கண்ட காட்சியில் அவனால் அவன் கண்களை அந்த இடத்திலிருந்து விலக்க முடியவில்லை.
புடவையை இழுத்து சொருகியதில் அதில் கிடைத்த இடைவெளியில் தன்னை பார்த்து பளிச்சென்று சிரித்த வெண்ணிற இடையைக் கண்டு தன்னை கட்டுப்படுத்த முடியாமல் சித்தம் மொத்தமும் கலங்க எழுந்த மோகத்தில் உள்ளுக்குள் தகித்துக் கொண்டிருந்தான்.
தன்னை பார்த்து வா வாவென்று என்று அழைத்ததைக் கண்டு சுற்றும் புறம் மறந்து தன் கையை அவள் பக்கம் நீட்ட சென்றவனை தண்ணீர் தெளித்து மகள் அவனை இந்த உலகிற்கு அழைத்து வந்தாள்.
தன் மேல் தண்ணீர் பட்டதும் திடுக்கிட்டவன் அப்பொழுதுதான் உணர்ந்தான் அவன் செயலை அய்யோ மானத்தை வாங்காதடா அபி என்றதும் திரும்ப அவள் பக்கம் போன பார்வையை இவனால் கட்டுப்படுத்த முடியவில்லை..
ஒன்றரை வருடமாக தூங்கிக் கொண்டிருந்த ஒன்று தன் தலையை வெளியே நீட்டி விஷ்வரூபம் எடுத்து ஆடியது தனக்கு இப்பொழுதே வேண்டுமென்று அவனை ஆட்டுவித்தது.
கண்களை மூடித் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன் சிறிது நேரத்தில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.
சந்தியா தருணைக் குளிப்பாட்டி அவன் உடம்பைத் துடைத்து விட்டு அவனுக்கு உடையை அணிவித்தாள். ஹர்ஷியிடம் திரும்பி குட்டிம்மா நீங்க தண்ணியில் போட்ட ஆட்டத்துல நாங்க ரெண்டு பேரும் நனைஞ்சிட்டோம் என்று கூறிக் கொண்டே இயல்பாக அவனிடம் இருந்து ஹர்ஷியைத் தூக்கி அவளைத் துண்டு கொண்டு துடைத்தாள்.
அப்பொழுது தான் பார்த்தான் தான் பாதி நனைந்து விட்டதை உடனே எழுந்து கொண்டவன் ஹர்ஷியின் உடையை அவளிடம் கொடுத்தான்.
அதை வாங்கிப் போட்டு விட்டவள் ஹர்ஷியை அவனிடம் கொடுத்து விட்டு நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன் அதுவரைக்கும் பார்த்துக்கோங்க என்று அவனைப் பார்க்காமல் ஹர்ஷியின் மேல் பார்வையைப் பதித்துக் கூறிவிட்டு சென்றாள்.
அப்பொழுதுதான் அவன் கவனித்தான் வந்ததில் இருந்து அவள் தன் முகத்தைப் பார்த்துப் பேசவில்லை என்று. ஏன் இவள் என்னை பார்த்துப் பேச மாட்டுறா என்று நினைத்ததும் அவன் மனசாட்சியோ பின்ன உன்னை மாதிரி வச்சக் கண்ணை எடுக்காமல் பார்த்துக்கிட்டு இருப்பாளா என்று கேலி செய்து அவன் மானத்தை வாங்கியது.
அது தியாக்கு கொஞ்சம் கூச்சமா இருக்கும் அதான் பேசாமா இருக்கா என்றதும் என்னாது தியாவா ஆமாம் நீ முன்னாடியும் தியான்னு தான் சொன்ன இப்பொழுதும் தியான்னு சொல்ற பிக்ஸ் பண்ணிடியா என்றதும் ஆமாம் அவ எனக்கு மட்டும் தியா என்னோட தியா என்றதும் இவனுக்கு முத்திடுச்சு என்று அவனுக்கு சான்று வழங்கி விட்டுச் சென்றது.
பின் ஹர்ஷியுடன் தருணையும் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த கல் மேடையில் அமர்ந்தான். சந்தியா சிறிது நேரத்தில் ஒரு கிண்ணத்தில் பால் சாதத்தை நன்றாகக் குழைத்து எடுத்து வந்தாள்.
இவர்கள் மூவரும் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தவள் தருணிற்கு ஒரு வாய் ஊட்டியதும் ஹர்ஷி இவளிடம் தன் கையைத் தூக்கிக் கொண்டு தன்னை தூக்குமாறு தாவினாள்.
அதை உணர்ந்தவள் அவளை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு தன் இடுப்பில் வைத்துக் கொண்டவள் அவளுக்கு கொஞ்சமாக சாதத்தை ஊட்டினாள்.அவள் ஊட்டவும் ஹர்ஷிக்குட்டி இதெல்லாம் சாப்பிடலாமா என்று கேட்டுப் பதறினான்.
அவன் பதறுவதைப் பார்த்து முகம் கனிந்தவள் அதெல்லாம் ஒன்னும் ஆகாதுங்க சாப்பாடு குடுக்கலாம் பால் சாதம் தான் குடுத்தேன் என்று அவன் கண்களைப் பார்த்துக் கூற அபி கிளீன் போல்ட்.அவள் கூறியதற்கு மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போல் ம்ம் என்று தலையை ஆட்டினான்.
இருவருக்கும் ஊட்டி முடித்தவள் தன் கையைக் கழுவிக் கொண்டு ஹர்ஷியின் உதட்டில் ஒட்டியிருந்த சாதத்தைத் துடைத்துவிட்டு அதுப்போல தருணுக்கும் துடைத்து விட்டாள்.
அதை கண்ட அபிக்கு இனி தன் மகளைப் பூப்போல் பார்த்துக் கொள்வாள் என்று நம்பிக்கைக் கொண்டான்.ஆனால் வெகுவிரைவிலே அந்த நம்பிக்கை உடைக்கப் படப்போவதை அவன் அறியவில்லை.
அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர். அங்கு ஒரு குடும்பாக அவர்கள் அங்கு அமர்ந்து பிள்ளைகளுக்கு ஊட்டுவதைப் பார்த்துக் சந்திராவிற்கு கண்ணீரே வந்துவிட்டது.
தன் மகன் இப்படி குடும்பமாக வாழ மாட்டானா என்று ஒவ்வொரு நாளும் ஏங்கிக் கொண்டிருந்தவர் இப்பொழுது இந்த காட்சியைப் பார்த்ததும் இனி தன் மகனை பற்றிக் கவலைப் படத்தேவையில்லை என்ற எண்ணம் தான் தோன்றியது.
மற்றவர்களும் இந்த காட்சியைப் பார்த்து நெகிழ்ந்துப் போயிருந்தனர். பிறகு சதாசிவம் பரமனிடம் பரமா அந்த வீட்டுக்குப் போய் பேசலாம்டா கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசனும் என்றதும் போகலாம்டா என்றதும் இவர்கள் இருவரை நோக்கி அனைவரும் வந்தனர்.
தேவி ஹர்ஷியை வாங்கிக் கொள்ள பரமன் நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு வாங்கப்பா..நாங்க போய் கல்யாணம் பற்றி பேசிட்டு இருக்கோம் என்றார்.
இருவரும் ஆமோதிப்பாக தலை அசைக்கவும் இவர்கள் வீட்டிற்குப் போக நகர்ந்தனர். அப்பொழுது ஹர்ஷி தன்னை விட்டுத் தன் அம்மா போகிறாள் என்றதும் உதட்டைப் பிதுக்கி தன் கைகளைச் சந்தியாவை நோக்கி தன்னைத் தூக்குமாறு அழுதாள்.
உடனே தேவியிடம் இருந்து வாங்கியவள் ஒன்னும் இல்லடா அழக்கூடாது என்று தன் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தாள். ஹிம்ம் இப்போவே அம்மாவ விடமாட்டேங்கிற சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கனும்ங்க என்று சேகரிடம் சந்திரா கூறினார்.
அவர் அப்படி கூறியதைக் கேட்டு ஒருவன் உள்ளுக்குள் அத்தனைப் பற்களையும் காட்டிக் கொண்டு வெளியே ஒன்றுமே தெரியாதது போல் நின்று கொண்டிருந்தவனைக் கண்டு அவன் மனசாட்சி யப்பா டேய் தாங்க முடியலைடா உலகமகா நடிப்புடா என்று அவனை கண்டுத் தலைத் தெறிக்க ஓடியது. வேறு யாராக இருக்க முடியும் நம் அபிமன்யுவே தான்..
அனைவரும் அந்த வீட்டிற்கு செல்ல இவர்கள் இருவரும் தருண் ஹர்ஷியை அழைத்துக் கொண்டு சாப்பிடும் இடம் நோக்கி சென்றனர்.
இங்கு வீட்டிற்கு வந்தவர்கள் கல்யாண தேதியை சீக்கிரம் வைக்க வேண்டும் இப்போழுதே ஹர்ஷி சந்தியாவை விட மாட்டேங்கிறா..இன்னும் நாள் தள்ளி வச்சா பிள்ளை ஏங்கிப் போயிடுவா..என்று சந்திரா அனைவரிடமும் கூறினார்.
(உங்க பேத்தி ஏங்கிப் போவாளோ இல்லையோ உங்க பிள்ளை ஏங்கிப் போயிடுவான் போல…)
அவர் சொல்லவும் அங்கு சுவற்றில் மாட்டியிருந்த காலண்டரை எடுத்து வந்து பரமனிடம் குடுத்தார். அதை வாங்கிப் பார்த்தவர் வருகிற வெள்ளிக் கிழமை முகூர்த்த நாள் தான் சதா அதை விட்டா அடுத்த மாதம்தான் இருக்கு என்று கூறினார்.
வர வெள்ளிக் கிழமையா அதுக்கு இன்னும் மூணு நாளு தானே இருக்கு அதுக்குள்ள எப்படி என்று சேகர் கேட்கவும் அதான் அபி சிம்பிளா கோயில்ல கல்யாணம் வச்சுக்கலாம்னு சொன்னான்ல என்று அவசரமாக கூறினார்.
அவருக்கு தன் மகனை சந்தியாவுடன் ஒன்றாகப் பார்த்ததில் இருந்து சீக்கிரம் கல்யாணம் முடிக்கனும்.
இந்த எட்டு மாதங்களும் அவர் போகாத கோவில் இல்லை வேண்டாத தெய்வம் இல்லை. அவர் இறைவனிடம் வேண்டுவது ஒன்றே ஒன்று தான்.. எப்படியாவது என் பிள்ளை வாழ்க்கை சரியாகிடக் கூடாதா ஏதாவது ஒரு வழியை என் பிள்ளைக்குக் காட்டுக் கடவுளே...என்று தான் வேண்டுவார்.
ஆனால் இன்று தன் பேத்தியை வைத்துக் கொண்டு இருவரும் நிற்கையில் அத்தனை பொருத்தமாக இருந்தது.
சதாவிடம் வர வெள்ளிக் கிழமையே வச்சுக்கலாம் சதா என்று பரமன் கூறினார். பின் நம்ம பெரியக் கோயில்ல கல்யாணத்த வச்சுக்கலாம். வேற யாரும் வேண்டாம் சதா நம்ம வீட்டு ஆட்கள் மட்டும் போதும் சிம்பிளா முடிச்சிடலாம்.
கிராண்டா பண்ணினா பிள்ளைங்க இரண்டு பேருக்குமே சங்கடம் தான் சதா.. அதான் இந்த முடிவு என்றதும் அதுக்கென்னடா பிள்ளைங்க விரும்பினா எல்லாருக்கும் சொல்லி..
கொஞ்சம் நாள் கழிச்சு வரவேற்பு மாதிரி பண்ணிடலாம் என்று கூறவும் சரிடா பண்ணிடலாம் என்று அவர் கூற்றையும் ஏற்றுக் கொண்டார்.
பின் அனைவரிடமும் வெள்ளிக்கிழமை வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டதும் அனைவருக்கும் சம்மதம் என்றதும் சரி நாளைக்கு கோயில் ஐயரைப் பார்த்து பேசிடலாம் என்று பரமன் கூறினார்.
அதற்கு ஆமோதிப்பாக தலையாட்டிய சதா கொஞ்சம் இருங்க இதோ வரேன் என்று பொதுவாக கூறிவிட்டுத் தன் அறைக்கு சென்றார்.
அவர் வரும் போது தன் கையில் ஒரு ஃபயில் கொண்டு வந்தார். அதைப் பரமனிடம் நீட்டி வாங்கிக்க சொன்னார். அதைக் காட்டி என்ன சதா இது..
இந்த ஃபயில்ல என்ன இருக்கு என்று கேட்டதும் என் பேருல இருக்கிற சொத்து என் பேரனுடைய பேருல இருக்கிற சொத்து அனைத்தையும் சந்தியா பேருக்கு மாற்றி எழுதுன பத்திரம் தான் பரமா...என்று கூறினார்.
அது உன்கிட்டையே இருக்கட்டும் என்றவரைப் பார்த்து அதில்லைடா பரமா...அர்ஜூன் போனப் பிறகு நான் ரொம்பவே உடைஞ்சிப் போயிட்டேன். சந்தியாவிற்காக தான் என் உயிர கையில் பிடிச்சிட்டு இருக்கேன்..
எனக்கு ஒரு வேளை ஏதாவது ஆச்சுன்னா அவளை விட்டுடாதீங்கடா அவள் ரொம்ப பாவப்பட்ட பெண் டா பரமா சிறுவயதில் இருந்து ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சவ என்று அவளைப் பற்றியும் அவள் குடும்பத்தார் பற்றியும் கூறினார்.
பின் தன் பேரன் அவள் குடும்பத்திலிருந்து அவளை மீட்டுக் கொண்டு வந்ததில் இருந்து அனைத்தையும் கூறினார். பிறகு சிறு வயதிலேயே திருமணம் ஆனதையும் அஜி இறந்தது வரை அனைத்தையும் கூறினார்.
அப்புறம் அர்ஜூன் இறந்ததை எங்க ரெண்டு பேராலையும் தாங்க முடியலை...அந்த வீட்டில் இருந்தா இன்னும் அவன் நியாபகம் வந்துக்கிட்டே இருக்குன்னு தான் பக்கத்துலயே இந்த வீட்டுக்கு மாறி வந்துட்டோம்.
அர்ஜூன் இருந்த வரைக்கும் அந்த பெரிய வீட்டில் தான் பிள்ளைகளோட சந்தோஷமா இருந்தோம். யார் கண்ணு பட்டுச்சோ எங்க அர்ஜுன் எங்களை விட்டுப் போயிட்டான்.
சந்தியாவின் கடந்த காலத்தைக் கேட்டவர்களுக்கு அவளுடைய குடும்பத்தின் மீது அவ்வளவு கோபம் வந்தது. இப்படியும் மனிதப் பிறவிகள் இருப்பார்களா என்று தான் தோன்றியது.
பரமன் சதாவை அணைத்துக் கொண்டவர் டேய் சதா.. ஏன் டா நல்ல விஷயம் பேசும்போது இப்படி சொல்ற உனக்கு ஒன்னும் ஆகாதுடா.. நாம நம்ம கொள்ளு பேரப்பிள்ளைகளை வளர்க்க தான் போறோம் நீ வேணாப் பாரு இது கண்டிப்பா நடக்கும்..என்று கூறினார்.
அபியும் சந்தியாவும் கல்யாணம் பண்ணி வதவதன்னு பிள்ளைகளைப் பெற்றுக் கொடுப்பாங்க நம்ம அவர்களை வளர்க்கலாம்டா என்று அவரை சமாதானப் படுத்தினார்.
(நீங்க சொன்னாலும் சொல்லைனாலும் அதுக்குத்தான் அங்க ஒருத்தன் எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டு இருக்கான்…)
நம்ம அர்ஜூனே அவங்களுக்கு பிள்ளையா பிறப்பான் மாமா நீங்க வேணும்னா பாருங்க என்று சந்திராவும் கூறினார்.
நீ சொன்னது நடந்தா சந்தோஷப் படுகிற முதல் ஆள் நான் தான் மா என்று தன்னை சமன்படுத்திக் கொண்டு கூறினார்.
இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க அங்கு ஒருவன் எப்போடா கையில் கோழி சிக்கும்...எப்போ பிரியாணி போடலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
ஹர்ஷியை சந்தியாவும் தருணை அபிமன்யுவும் தூக்கிக்கொண்டு சாப்பிடும் இடத்திற்கு வந்தனர். அங்கு வேலை செய்யும் சிவகாமி இருவரையும் பார்த்து சந்தியாவிடம் யாரு பாப்பா இது என்று கேட்டதும் நான் கட்டிக்கப் போறவர் அம்மா என்று சிறு வெட்கத்துடன் தலையைக் கீழே குனிந்துக் கொண்டே கூறினாள்.
அவள் கன்னத்தை வழித்து என் ராசாத்தி இப்போவாச்சும் சம்மதிச்சியே.. ஐயாவோட மனசு இப்போதான் குளிர்ந்திருக்கும் வயசுப் புள்ளை வாழாம இருக்குறது அவருக்கு எவ்ளோ வேதனை தெரியுமா..இனிமே அந்த மனுஷன் நிம்மதியா இருப்பாரு..
எவ்ளோ நாள் தான் பாப்பா அர்ஜூன் தம்பிக்காக அழுதுட்டு இருப்ப உன் வாழ்க்கையைப் பாரு பாப்பா என்றவர் அபிமன்யுவிடம் பக்கம் திரும்பியவர் உங்க பேரு என்ன தம்பி என்று கேட்டதும் அவன் அபிமன்யு என்கவும் எங்க சந்தியா பாப்பாவ பத்திரமா பார்த்துக்கோங்க தம்பி..நல்ல பிள்ளை என்று கூறியவர் இருவரும் சாப்பிட சாப்பாடு எடுத்து வந்து வைத்தார்.
சந்தியா அவரிடம் நாங்க போட்டு சாப்பிட்டுக்கிறோம் ம்மா நீங்க போய் ஓய்வு எடுங்க என்றதும் அவர் அங்கிருந்து கிளம்பினார்.
அபிமன்யுவோ அவள் வெட்கப்பட்டுக் கொண்டே அவரிடம் சொல்வதைப் பார்த்து மயங்கியவன் அடுத்து சிவகாமி அர்ஜுனை பற்றி பேசியதில் தன் மயக்கம் தெளிந்தான்.
என் தியா எனக்காக மட்டும் தான் அழனும் என்னை மட்டும்தான் அவள் உயிரா நினைக்கனும் அவளுக்கு நான் மட்டும் தான் முக்கியமா இருக்கனும் என்று நினைத்துக் கொண்டு தன் உரிமையை எப்படியாவது அவளிடம் நிலைநாட்ட சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தான்.
அர்ஜூன் தன் நெருங்கிய நண்பனே ஆயினும் அவனுக்கு இப்பொழுது அவன் தியா தான் அவன் கண்களுக்குத் தெரிந்தாள்.அவளை பார்த்த உடனே ஏதோ ஓர் உணர்வு அவள் தனக்கு மட்டுமே.. அவள் தன் உடைமை என்பது போல் தோன்றியது.
சிவகாமியை அனுப்பி வைத்தவள் அவன் பக்கம் திரும்பினாள்.அவனோ தன் யோசனையில் தீவிரமாக இருந்தான்.அவனை என்னங்க என்று அழைத்தாள்..
அவன் இன்னும் தன் நினைவிலே உழன்று கொண்டிருக்க அவன் தோளை தட்டி என்னங்க என்று அழைத்ததும் தான் கனவில் இருந்து திடுக்கிட்டு விழித்தவன் போல சிறிது நேரம் எடுத்துக் கொண்டான் தன் நிலைக்கு வர…
அப்பொழுது தான் கவனித்தான் அவள் கை தன் தோளில் இருப்பதைக் கண்டு புன்னகைத்தான்.அவளை நோக்கி தன் தோள் மேல் படிந்திருந்த அவள் கையைப் பார்த்து கண்களால் சைகை செய்தவன் படக்கென்று அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.
அவன் தன்னை பார்த்து சைகை செய்யவும் என்னவென்று புரியாமல் பார்த்தவள் அவன் கண்ணடிக்கவும் பட்டென்று தன் கையை எடுத்துக் கொண்டவளுக்குப் படபடவென்று நெஞ்சம் அடித்துக் கொண்டது.
சிறிது நேரத்தில் தன்னை சமன் செய்து கொண்டு அவனை நிமிர்ந்து பார்க்காமல் உட்காருங்க சாப்பிடலாம் என்று கூறியதும் அமர்ந்தவன் தன் மடியில் தருணை அமர்த்திக் கொண்டான்.
ஒரு பிளேட்டை எடுத்து அவன் முன்னால் வைத்து சாப்பாடு பறிமாறினாள். சாப்பாடு போட்டு குழம்பை ஊற்றியவள் பொரியலை வைக்க அவள் கையைப் பிடித்தான்.
அவன் கையைப் பிடித்ததும் திடுக்கிட்டு அவனை நிமிர்ந்துப் பார்த்துத் தன் கண்களை விரித்தாள்.ஏன் டி இவ்ளோ பெருசா விரிக்கிற ஏற்கனவே விழுந்தவன் தான் இன்னும் என்னால் எழ முடியலை என்று தன் மனதிற்குள் புலம்பினான்.
அவன் மனசாட்சியோ டேய் அபி உனக்கே இது ஓவரா தெரியலை பார்த்து ஒரு இரண்டு மணிநேரம் ஆயிருக்காது அதுக்குள்ள எப்படிடா என்று கேட்க அதெல்லாம் உனக்கு புரியாது ஓடு என்று அதனை விரட்டியவன் தன் குரலை செறுமிக்கொண்டு தியா பேபி எனக்கு ஊட்டி விடு என்று அவன் கூறியதும் அவனை கலவரமாக பார்த்தாள்.
விரிந்திருந்த பேராழி கண்ணில் மீண்டும் விழுந்தவன் தருணிடம் புகார் வாசித்தான். தருண் குட்டி இங்க பாருடா அம்மா உங்களுக்கெல்லாம் ஊட்டி விட்டாங்க அப்பாக்கு ஊட்டி விட சொன்னா முறைச்சுப் பார்க்கிறாங்க…
நீ இதெல்லாம் கேட்க மாட்டியா தருக்குட்டி என்று அவனை பெரிய மனிதனை போல பாவனை செய்து அவனிடம் புகார் கூறினான்.அவன் கூறியதும் தருணும் சந்தும்மா அபிப்பா பாவம்தானே ஊட்டி விடுங்க என்றதும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றிருந்தாள்.
அவள் அப்படியே நிற்பதைப் பார்த்து தருணிடம் எனக்கு பசிக்குதுடா தருக்குட்டி என்றதும் அதில் தன் பயம், வெட்கம் அனைத்தையும் தூக்கிப் போட்டவள் சாதத்தைப் பிசைந்து அவன் வாயருகே கொண்டு போனாள்.
அவளைப் பார்த்துக் கொண்டே அவள் கையால் சாதத்தை வாங்கிக் கொண்டான். சாதத்தை மட்டுமா சாப்பிட்டான் அவள் வெண்டைப் பிஞ்சு விரல்களையும் அல்லவா சாப்பிட்டான். பிள்ளைகள் முன்பு தன் உணர்வுகளை அடக்க பெரும்பாடு பட்டாள்.
ஒவ்வொரு தடவையும் அவன் சாதத்தை சாப்பிடும் போதும் தன் விரல்களையும் விட்டு வைக்காமல் நாவால் உதட்டால் வருடிக் கொண்டிருந்தான்.அந்த அவஸ்தை அவளால் தாங்க முடியாமல் ஏன் இப்படி எல்லாம் பண்றாங்க என்று நினைத்துக் கொண்டே ஊட்டி விட்டாள்.
தன் அப்பாவிற்கு அம்மா ஊட்டுவதைப் பார்த்து உற்சாகமடைந்த ஹர்ஷி தன் இருக்கைகளையும் சேர்த்து தட்டினாள்.
அவள் அவஸ்தைப் படுவதைப் பார்த்து ரசித்தவன் போதும் இதோடு நிறுத்திக்கலாம் என்று நினைத்தவன் போதும் என்கவும் அப்பாடி என்று நினைத்துக் கொண்டு தன் கையைக் கழுவினாள்.
தருண் சந்தியாவை அழைத்து சந்தும்மா எனக்கு துடைச்சி விடுவீங்கல்ல என்று தன் வாயைக் காட்டிக் கூறியவன் அப்பாவுக்கும் துடைச்சி விடுங்க என்றதும் அபிக்கு ஆயிரம் வாட்ஸ் பல்பு போல் முகம் பிரகாசமானது.
வாடா மகனே சூப்பர் நான் சொல்லிக் குடுக்காமலே பட்டையே கிளப்புறியே என்று மனதுக்குள் அவனை பாராட்டியவன் வெளியே ஒன்றும் தெரியாதது போல் சிரிக்க முயன்ற உதட்டைக் கட்டுப்படுத்தி இறுக்கி வைத்துக் கொண்டான்.
சிறிது நேரம் தயக்கத்துடன் நின்றவள் பிறகு என்ன நினைத்தாளோ அவன் அருகில் வந்து தண்ணீரைத் தொட்டு அவன் அழுத்தமான உதட்டைத் தன் நடுங்கும் விரல்களால் துடைத்தாள்.
அப்பொழுது கிடைத்த சந்தர்ப்பத்தை அபிமன்யு விடவில்லை அவள் வெண்பஞ்சு விரல்களுக்கு மீசை முடிக்குத்த ஒரு அழுத்தமான முத்தத்தை வைக்கவும் கூச்சத்தில் தன் கையை விலக்கிக் கொண்டாள்.
அவள் விலகியதும் சிரித்தவன் எழுந்துக் கொண்டு தருணிடம் தருண் நமக்கெல்லாம் அம்மா ஊட்டி விட்டாங்கள்ல்ல அதனால நாம அம்மாக்கு ஊட்டலாமா என்று கேட்டதும் அதிர்ந்து அவனைப் பார்த்து அதெல்லாம் வேண்டாம் நானே சாப்டுக்கிறேன் என்று கூறினாள்.
அவள் அப்படி கூறவும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு தருணிடம் சின்னப் பிள்ளை போல் புகார் வாசித்தான்.
அதன் பிறகு அவன் செய்த செயலில் சந்தியா "அய்யோ..என்ன இவங்க இப்படி எல்லாம பண்றாங்க…" என்று மனதுக்குள் அலறினாள்.
அபி என்ன பண்ணியிருப்பான்….
வாழ்வு சிறக்கும்….
0 Comments