காதல்-21:
உங்க பாட்டி பேச்சை கேட்டுகிட்டு உன்னை அவ்ளோ கொடுமை படுத்தின உங்க அப்பாவை எப்படி பிரௌனி உன்னால மன்னிக்க முடியுது..
காலையிலே குளித்து முடித்து புத்தம் புது மலராக ஜன்னல் ஓரம் நின்று தலையை துவட்டி கொண்டிருந்தவளிடம் கேட்க நான் அவரை மன்னிக்க மாட்டேன் மாமா.. உங்களை அவர் எப்போ தப்பா பேசுனாரோ அப்போவே நானும் அவர்கிட்ட பேச மாட்டேன் மாமா..
ஹிம்ம் அப்படியா என்று மெத்தையில் இருந்து எழுந்து வந்தவன் அவள் தலைமுடியில் முகத்தை புதைத்து கொண்டு அப்போ இங்க இருந்து யாருக்கும் தெரியாம சாப்பாடு போகுதே பிரௌனி அது கால் முலைச்சா போச்சு..
அவன் அவ்வாறு கேட்கவும் தன் குட்டு உடைந்ததில் தன் முட்டை கண்ணை விரித்து அவனை திரும்பி பார்த்தவளுக்கு அவன் என்ன சொல்வானோ என்ற பயத்தில் பேச்சு வராமல் சதி செய்தது.
அவள் திருத்திரு பார்வையில் தடுக்கி விழுந்தவன் எழ முயலாமல் அவளிடம் சற்று விளையாடி பார்க்க நினைத்து அவள் தோள்பட்டையில் கைகளை வைத்து கொண்டு அவள் கண்களில் தன் கண்களை கலக்க விட்டவன் கைகள் சும்மா இல்லாமல் அவள் இதழை வருடி ஆக சாப்பாடு தானா கால்முளைச்சு போகல..
இந்த பிரௌனி தான் சாப்பாடு கொண்டு போய் கொடுக்கிறது.. அதையும் வெட்கமே இல்லாமல் அந்த கெடா மீசையும் வாங்கி திங்குறாரு அப்படிதானே என்கவும் மாமா அது.. அது வந்து என்று திக்கி திணற அவள் உதட்டை இருவிரல் கொண்டு பிடித்து இழுத்தவன் உனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் பிரௌனி நீயே சொல்லு என்று அவள் இதழ்களை பார்த்தவாறு கூறினான்.
ஐயோ மாமா அம்மா என்றதும் அவன் அசைந்த நொடியில் அவனிடமிருந்து தன்னை விடுவித்து கொண்டு ஓட பார்க்க அதனை நொடியில் உணர்ந்து விரைந்து சென்று கதவை அடைத்தவன் அவளை நெருங்கினான்.
அவன் நெருங்க நெருங்க பின்னால் நகர்ந்தவள் சுவர் இடிக்க நின்று அவனை கலவரமாக பார்க்க எவ்வளவு தைரியம் இருந்தால் நீ என்னை ஏமாற்றி விட்டு ஓட பார்ப்ப..
மாமா
மூச் சத்தம் வந்துச்சு என்று மிரட்டினான்.
இல்ல இல்ல மாமா நான் சத்தம் போடல என்று வாயில் கை வைத்து கொண்டு அவனை மிரட்சியுடன் பார்த்தாள்.
என்ன பிரௌனி இப்படி பாவமா பார்த்தா நான் உன்னை விட்டுடுவேனா
அதற்கு ஆம் என்று தலையாட்டியவள் அவன் முறைக்கவும் இல்லை என்று தலையாட்ட
உனக்கு தண்டனை அதிகமாகிட்டே போகுதே பிரௌனி.. இப்போ என்ன பண்ணலாம் என்று தாடையை தடவ
மாமா உங்களுக்கு கிளாஸ் இல்லையா என்று பேச்சை மாற்ற
அடிங்க நல்லா எஸ்கேப் ஆக பாக்குற.. இங்க வந்ததுல இருந்து படிக்கவும் இல்ல.. இதுல எனக்கு கிளாஸ் இல்லையான்னு கேக்குற..
ஆமா மாமா வாங்க படிக்கலாம் சொல்லி தாங்க என்று நகர பார்க்க
ஹான் உன்னை அப்படியே விட்டா அது தப்பாச்சே பிரௌனி
மாமா அடிக்க கூடாது எனக்கு வலிக்கும்ல.. வர்ஷாவும் அவரை விட்டுட்டு இங்க வந்துட்டாளா அதான் பாக்க பாவமா இருந்துச்சு.. சாப்டாரோ என்னவோன்னு தான் சாப்பாடு கொண்டு போய் குடுத்தேன் என்று தன் செயலுக்கு விளக்கம் கொடுத்தாள்.
முன்னாடி எல்லாம் அவரு என்மேல பாசமா தான் இருந்தாரு.. எங்க ஆயா தான் இவ பொறந்த நேரமே சரியில்லை டா அதான் விவசாயத்துல இவ்ளோ நஷ்டம்ன்னு ஏத்தி விடவும் அவரு அப்படி நடந்துகிட்டார் போல..
அதை விடுங்க மாமா பழைய கதையெல்லாம் எதுக்கு.. என்றவள் உங்களுக்கு சுடு தண்ணீர் போட்டு வச்சிருக்கேன் வாங்க மாமா வந்து குளிங்க என்று அழைக்க
தண்டனை இன்னும் பாக்கி இருக்கு என்கவும்
ஐயோ இந்த மாமா மறக்க மாட்டேங்குறாரே என்று நினைத்தவள் என்ன இப்போ ரொம்ப தான் மிரட்டுறீங்க.. அதெல்லாம் முன்ன மாதிரி பயப்பட மாட்டேன்.. நான் யாரு தெரியும்ல ராம் பிரசாத்தோட பொண்டாட்டி தோள்களை குளுக்கிய படி கூற..
இந்த வாய் இருக்கே இப்போலாம் பயம் இல்ல கொஞ்சம் கூட என்று தன் பற்களால் கடித்து இழுக்க அவன் முகத்தை கைகளால் பற்றி கொண்டவள் அவன் செயலை தனதாக்கி கொள்ள பிரசாத் குஷியாகி போனான்.
அவன் பிடரி முடியில் கை விட்டு இறுக்கி கொள்ள அவள் தந்த முத்தத்தில் ஆழ்ந்து போனான்.
அவனிதழை பிரிந்தவள் மூச்சு வாங்க மாமா ரத்தகாட்டேரி பாத்துருக்கீங்களா அவன் இல்லை என்று தலையாட்டவும் அவன் எதிர்பாரா நேரத்தில் அங்கிருந்த மெத்தையில் அவனை தள்ளி அவன் மேல் படர்ந்து அவன் கழுத்தில் முகத்தை புதைத்தாள்.
ஆஹ் வலிக்குது டி.. ஆஹ்ஹ் என்று பிரசாத் கத்த கத்த அங்கு கடித்தவள் பிறகு நாவால் வருட அவனுக்கு கிளுகிளுப்பாக உணர்ந்தானோ என்னவோ
ஹே பிரௌனி விடு டி கூசுது விடு டி ஆஹ்ஹ் என்று அலற என்னை மிரட்டுவீங்களா ஹிம்ம் சொல்லுங்க என்று அவன் கன்னம் தோள்பட்டை வயிறு எதையும் விட்டுவைக்கவில்லை அவள் அனைத்து இடத்தையும் கடித்து கிச்சு கிச்சு மூட்டி அவனை அலற விட்டதில் அலாதி இன்பம் போல..
ஐயையோ விடு டி என்று மூச்சு வாங்க அவளை பிரட்டி போட்டு தான் அவள் மேல் வந்தவன் தன் முழு பாரம் அவள் மேல் போட்டு அணைத்து படுத்து கொண்டான்.
மாமா.. ஆஹ்.. நீங்க வெய்ட்டா இருக்கீங்க.. நகருங்க.. என்று அவனை தள்ள பார்க்க அவன் எங்கு அவள் பேச்சை கேட்டான்..
ரவிக்கையில் அடைப்பட்டிருந்த புறாக்களை எப்பொழுது விடுவிக்கலாம் என்ற ஆராய்ச்சியில் இருந்தானே..
முடியாது பிரௌனி இப்போ உன்னை விட மாட்டேன் என்றவன் எனக்கு பிரௌனி இந்த நிமிஷமே வேணும் குடுத்துட்டு போ அப்போ விடுறேன்..
ஐயோ இதென்ன மாமா காலையிலே விளையாட்டு..
ஹே விளையாட கேட்கலை டி கடிப்பது போல் வாயை அசைத்து சாப்பிட கேட்டேன்.. குடு டி என் பிரௌனிய என்று மல்லுக்கு நின்றான்.
மாமா அங்க யாரோ கூப்பிடுறது போல இல்லை.. பாருங்க என்கவும் இந்த வாட்டி என்னை ஏமாத்த முடியாது.. ஒழுங்கா குடு என்கவும்
அட போங்க மாமா என்று முகத்தை கைகள் கொண்டு மூடி கொண்டாள்.
அவள் முகத்தில் இருந்த கையை கடிக்க மாமா உங்க பல்லு இவ்வளவு ஷார்ப்பா இருக்கு என்று அவனை விலக்க என்னை மட்டும் கடிச்சி வச்சுட்டு இப்போ என்னை கூடாதுன்னு சொல்ற இது நியாயமே இல்ல பிரௌனி என்று அவள் கழுத்தில் கடிக்க அவள் துள்ளினாள்.
மாமா கடிக்காதீங்க என்று சிணுங்க அதுவே அவனை இன்னும் சேட்டை செய்ய உந்த அவள் மென்மை கோலங்களையும் விடாமல் கடித்து வைக்க ஆஹ் மாமா என்று நெஞ்சை நிமிர்த்தினாள்.
அவன் முகத்தை அங்கேயே அழுத்த மலையென எழுந்த மோகத்தில் மூச்சடைத்து போனான்.
கயலு.. கயலு.. என்று கதவை தட்ட சர்ரென்று ஏறிய போதை இறங்கி விட்டது.
அவள் மேல் படுத்திருந்தவனை உலுக்கி மாமா வெளியே கூப்பிடுறாங்க..
கிசுகிசுவென பேசினாள்.
எனக்கும் காது கேக்குது டி.. முதல்ல உன்னை ஊருக்கு கடத்தனும்.. அப்போதான் என்ன வேணாலும் பண்ணலாம் என்று முத்தம் கொடுத்தவன் அவள் மேலிருந்து எழுந்தான்.
மொச்சு மொச்சுன்னு எப்போ பார்த்தாலும் முத்தம் குடுத்துட்டே இருக்கீங்க மாமா என்று வேண்டுமென்றே சலித்து கொள்ள அவள் நினைத்தது போலவே நீ வெளிய போகவே வேண்டாம் டி..
அவளை பிடித்து கணக்கே இல்லாமல் முத்தங்களை வாரி இரைக்க இன்னும் இன்னும் என்பது போல் அவன் முத்தத்தை ரசித்து கொண்டிருக்க அதனை கண்டவன் கடித்து வைத்தான்.
ஆஹ்ஹ்.. என்று தேய்க்க அவளை பார்த்து சிரித்தவன் நான் போய் குளிக்கிறேன் நீ போய் என்னன்னு கேளு பிரௌனி என்கவும் வெளியே சென்றாள்.
அவள் கதவை திறந்து வெளியே வர என்னடி இவ்ளோ நேரம் தூக்கம்.. இப்படி தூங்கினா மாப்பிள்ளை என்ன நினைப்பார்..
எங்க அவரு சுடு தண்ணி போட்டு கொடுத்தியா..
ஹிம்ம் குளிக்குறாங்க ம்மா..
என்ன பிள்ளையோ போ.. புருஷனை ஒழுங்கா கவனிக்க தெரியலை.. என்ன பண்ண போகுதோ என்று அவள் காப்பியை கொடுக்க
உனக்கு மட்டும் உன் புருஷனை ஒழுங்கா பாத்துக்க தெரியுதா என்றவள் ஓடிவிட்டாள்.
வரேன் இரு டி.. உனக்கு வாய் நீளமாயிடுச்சு.
இங்கு குளித்து விட்டு வந்தவனுக்கு காப்பியை கொடுத்தவள் மாமா நாம எப்போ நம்ம வீட்டுக்கு போறோம்..
வீட்டுல சொல்லிட்டு கிளம்பலாம் டா என்று கன்னம் தட்டியவன் காபியை ஒரு மிடறு விழுங்கியவன் அவளிடம் நீட்டினான்.
அதனை வாங்கி குடித்தவள் சரி மாமா நீங்க ட்ரெஸ் போட்டுட்டு வாங்க.. நான் போய் உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்று வெளியே வந்தாள்.
அனைவரும் சாப்பிட்டு முடிக்கவும் துரை மெதுவே பேச்சை ஆரம்பித்தார்.
தம்பி கயலுக்கு சின்னதா ஒரு பங்க்ஷன் வச்சிறலாம்ன்னு இருக்கோம்.. நீங்க என்ன நினைக்கிறீங்க என்று அவன் விருப்பத்தை கேட்கவும் பிரௌனிக்கு என்றவுடன் ஹிம்ம் உங்க இஷ்டம் போல செய்ங்க..
நான் ஏதாவது செய்யணுமா என்கவும் தாய் மாமன் தான் ட்ரெஸ் நகை எடுக்கணும் இது எல்லாருக்கும் இப்படி தான் பண்ணுவாங்க..
முன்னாடியே இதெல்லாம் நடந்துருந்தா நம்ம மருது தான் எல்லாம் பண்ணனும்..
இங்கு வாத்திக்கோ நான் தான் பண்ணுவேன் என் பிரௌனிக்கு.. என்று தனக்குள் பெரும் போராட்டமே நடத்தினான்.
ஆனால் நம்ம கயலுக்கு தான் நீங்க இருக்கீங்களே.. உங்களுக்கு என்ன எல்லாம் வாங்கணும்னு தோணுதோ எல்லாத்தையும் வாங்கி குடுங்க.. என்று துரை கூறியதும் தான் அவன் மனம் சற்று சாந்தமடைந்தது.
சரி அப்போ எப்போ பங்க்ஷன் வச்சுக்கலாம் என்கவும் நாளைக்கே நல்ல நாள் தான் மாப்பிள்ளை வச்சுக்கலாம் என்று ராணி கூறவும் ஹிம்ம் சரி என்று தலையாட்ட அண்ணா உங்க கழுத்துல என்னாச்சு என்று மருது வினவ..
என்ன ஒன்னும் இல்லையே என்று தன் கழுத்தை தடவினான்.
அவனுக்கு சுத்தமாக நியாபகம் இல்லை… கயல் அதனை பார்த்து ஐயோ போச்சு என்று நாக்கை கடிக்க
இல்ல இங்க பாருங்க ஏதோ சிவப்பா இருக்கு.. வண்டு ஏதோ கடிச்சுடுச்சு போல என்று கண்ணாடியை எடுத்து வந்து அவனிடம் கொடுக்க கண்ணாடியில் தன் கழுத்தை பார்த்தவன் தனக்குள் சிரித்தவன் முகத்தில் வெட்க சாயல்..
அவன் முக பாவனைகளை கண்ட கயல் அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தாள்.
இருவரின் பார்வையின் பரிமாற்றத்தை கண்ட மருது சரி சரி வேலை இருக்கு.. எல்லாரும் போய் வேலையை பாருங்க என்கவும் மருது இங்கு இருந்து கடை எவ்வளவு தூரத்துல இருக்கு என்கவும்
ட்ரெஸ் கடை நகை கடை எல்லாம் இருபது மயிலுக்கு அப்பறம் தான் அண்ணா இருக்கு..
நானும் அங்க தான் அண்ணா போறேன் நாளைக்கு எல்லாம் ரெடி பண்ணனும் இல்லையா.. அப்பா இங்க பார்த்துப்பாங்க.. நீங்க வரதுன்னா வாங்க அண்ணா போய்ட்டு வரலாம் என்கவும் சரி மருது பத்து மணிக்கா கிளம்பலாம் என்றவன் தங்கள் அறைக்கு வந்தான்.
அங்கு இவனின் துணியை மடித்து கொண்டிருந்தவளிடம் வர அவன் கைப்பேசி அழைத்தது.
ஹலோ
டேய் மச்சான் இன்னும் ரெண்டு நாளில் அங்க வந்துருவோம் டா என்று பரத் தான் பேசினான்.
ஜெய் எப்படி டா இருக்கான்.
அவனுக்கு இப்போ பரவால்ல டா
சரிடா நான் டிக்கெட் போடுறேன் பத்திரமா வாங்க நாங்களும் அங்கே நம்ம வீட்டுக்கு வந்துருவோம் என்கவும்
சரி டா வச்சுடுறேன் என்று அழைப்பை துண்டித்தான்.
யாரு மாமா
பரத் தான்
உங்க தம்பி எப்படி மாமா இருக்கங்களாம்..
இப்போ பரவால்லன்னு சொல்றான் என்ன பண்றானோ என்று வருத்தத்துடன் கூற
ஏன் மாமா அங்கேயே அவங்க கூட இருந்துருக்கலாம்ல இப்போ பாருங்க கஷ்ட படுறீங்க.
ரெண்டு நாள் போய் இருந்ததுக்கே தான் உங்க அப்பா என்னன்ன கதை கட்டி விட்டிருக்காரு..இன்னும் அங்கேயே இருந்துருந்தா அவ்வளவு தான்.
அதுமட்டுமில்லாம உன்னை விட்டுட்டும் இருக்க முடியல அதான் பரத்தை பாத்துக்க சொல்லிட்டு வந்துட்டேன்.
ஹூக்கும் நீங்க இப்போதான் அப்படியே புது மாப்பிள்ளை பாருங்க.. என்னை விட்டுட்டு இருக்க முடியலன்னு பொய் சொல்லறீங்க..
ஹே நான் புது மாப்பிள்ளை தான் டி.. அதுவும் முதலிரவு கூட கொண்டாதா புது மாப்பிளை என்கவும்
அட போங்க மாமா உங்களுக்கு வயசாகி போச்சு..
இன்னும் கொஞ்ச வருஷம் போனா நீங்க அங்கிள் ஆயிடுவீங்க என்று சிரிக்க நான் உனக்கு அங்கிளா டி..
ஆமா இப்போ கூட உங்களை மாமான்னு தான் கூப்பிடுறேன் அப்பறம் இன்னும் கொஞ்ச நாள் போனா கிழடு அப்பறம் தாத்தா தான் என்று கூறி சிரிக்க உன்னை என்று அவளை துரத்த
அவன் கையில் சிக்காமல் ஓடியவள் தாத்தா என்று சிரிக்க அவளை எட்டி தன்னோடு அமுக்கி பிடித்தவன் வெளிய ஏன் டி என்னை திங்குற மாதிரி பார்த்த
நான் பார்களையே..
ஏய் பொய் சொல்லாத பிரௌனி.. நீ பார்த்ததை நான் பார்த்தேன்..
உங்களை கடிக்கணும் போல இருந்துச்சு..
அதான் ஏற்கனவே கடிச்சு வச்சுட்டியே.. என் மானமே போச்சு..
நீங்க வெள்ளையா இருந்தா நான் என்ன பண்றது..
அதுக்கு இப்போ என்னை என்ன பண்ண சொல்ற பிரௌனி..
நீங்க ஏதும் பண்ண வேண்டாம்.. நான் கடிக்குற இடத்தை மாத்திக்குறேன்..
ஆக கடிக்குறதை விட மாட்ட..
ஆமா என்று அவன் கன்னத்தை கடிக்க ஆஹ்ஹ் என்று அலறியவன் என்ன டி பண்ற என்று அவள் கன்னத்தை பிடிக்க வெளியில் கதவு தட்டப்பட்டது..
கதவை திறந்து யாரென்று பார்க்கவும் மருது தான் நின்றிருந்தான்.
அண்ணா கடைக்கு கிளம்பலாமா?
ஹ்ம்ம் போகலாம் மருது இதோ சட்டை போட்டுட்டு வந்துடுறேன் என்று உள்ளே வந்தவன் ஒரு சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு பர்ஸை எடுக்க
மாமா எதும் அதிகமா வேண்டாம் என்கவும் சரி டா நீ பாத்து இருந்துக்கோ.. நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்.
சரி மாமா பொறுமையாவே போயிட்டு வாங்க.
ஒரு தலையசைப்புடன் மருதுவுடன் சென்றான்.
மாமா நானும் வரேன் என்று குணாவும் அவர்களுடன் சென்றான்.
துரை பங்கஜத்திடம் நான் போய் பந்தல் வாழை மரத்துக்கு சொல்லிட்டு வந்துடுறேன் என்று கிளம்பினார்.
பெண்கள் மட்டும் வீட்டில் இருக்க ராணி தன் மகளிடம் வந்தவர் கயலு ஊருக்கு போறதை பத்தி ஏதாவது மாப்பிள்ளை சொன்னாரா டி என்கவும்
ஹிம்ம் நாளை மறுநாள் கிளம்புறோம் என்கவும் ஏன் டி இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு போகலாமே என்கவும் அட போமா நான் போன் எடுக்கலைன்னு பதறி அடிச்சிட்டு ஓடி வந்துட்டாரு என்றவள் அவன் டெல்லி எதற்காக சென்றான் என்று கூறினாள்.
பின் பரத்தை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு வந்தது வரைக்கும் கூறியவள் நாளை மறுநாள் அவர் தம்பி வீட்டுக்கு வராரு நாங்க போகணும் அதுமில்லாம அவருக்கு கிளாஸ் இருக்கு ம்மா போய் தான் ஆகணும் என்று திட்டவட்டமாக கூறினாள்.
சிறிது நேரம் கழித்து போன் வரவே கயலை அழைத்து மாப்பிள்ளை தான் பேசுறாரு என்று கொடுத்தார் ராணி.
மாமா..
…
உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அதுவே எடுத்துட்டு வாங்க மாமா
….
சரி மாமா வச்சிடுறேன் என்று வைத்தவளை என்னடி கேட்டாரு புடவை என்ன கலர் வேணும்னு கேட்டாரு அதான் உங்களுக்கு பிடிச்சதை எடுத்துட்டு வாங்கன்னு சொன்னேன்.
அடியேய் இந்த ஆம்பிளைங்க கேட்கிறப்போ வாங்கி வச்சிக்கிட்டாதான் உண்டு இல்லைன்னா ஒன்னு வாங்கி தர மாட்டாங்க என்கவும்
அது உன் புருஷன் தான் அப்படி… என் புருஷன் தங்கம்
ஹிம்ம் ஆமா டி உன் புருஷன் தங்கம் என் புருஷன் பித்தளை.
ஆமா நீ சொன்னாலும் சொல்லலன்னாலும் உன் புருஷன் பித்தளை தான்.
ஹுக்கும் பார்க்கத்தானே போறோம்..
பாரு பாரு என்றவள் தன்னறைக்கு சென்றுவிட்டாள்.
சமையலறையில் இருந்த வள்ளி ஒஹ் டெல்லில இருக்காரு போல அதான் போன் போடலையோ..
என்ன தான் இருந்தாலும் ஒரு போன் சொல்றதுக்கு என்ன வரட்டும் இங்க தான வந்து ஆகணும் அப்போ வச்சுக்குறேன்.
(டேய் பரத்து அடுத்த தொடப்பக்கட்டை பிய்ய ரெடியாகிட்டு இருக்கு.. இந்த பக்கம் வந்துராத)
இங்கு கடைக்கு சென்று வந்த மூவரையும் பெண்கள் சூழ்ந்து கொண்டனர்.
கை நிறைய பொருட்களை அள்ளி கொண்டு வந்தவர்களை அனைவரும் பார்க்க மருது தன் அன்னையிடம் ம்மா சொல்ல சொல்ல கேட்காமல் நம்ம எல்லாருக்கும் ட்ரெஸ் எடுத்துட்டார்.
வேணாம்னு சொன்னேன் கேட்கவே இல்லை.
ஏன் பா எங்களுக்கு எதுக்கு? வீண் செலவு தானே..
எப்பொழுதாவது தானே என்று அவரிடம் கூறினாலும் கண்கள் அவளை தான் தேடியது.
அனைவரிடமும் அவர்களின் உடைகளை கொடுத்தவன் தான் வாங்கிய தாலி செயினை காட்டினான்.
இது கயலுக்கு போட்டா கழுத்து வலிக்காது தானே.. பத்து பவுனில் பார்த்தேன் கழுத்து வலிக்குமோ என்னவோன்னு தான் அஞ்சு பவுனில் வாங்கிட்டு வந்தேன் என்கவும் நல்லாருக்கு மாப்பிள்ளை நாளைக்கு அப்படியே அவ கழுத்துல போட்டு விடுங்க..
அத்தை கழுத்துல போட இன்னும் இருக்கு என்ற மருது ஒரு நகை பெட்டியை கொடுக்க வாங்கி பார்த்தவர்கள் பிரமித்து போயினர்.
எதுக்கு மாப்பிள்ளை இவ்வளவு.. ரொம்ப செலவாயிருக்குமே
அதையெல்லாம் அவனெங்கு கண்டு கொண்டான் அவன் பார்வை கயல் எங்கு என்று தான் தேடியது.
சரி சரி பார்த்தது போதும் நாங்க ரொம்ப டயர்டா இருக்கோம்.. போங்க போங்க கொஞ்ச நேரம் ஆளை தூங்க விடுங்க என்ற மருது அண்ணா நீங்க இதையெல்லாம் எடுத்துட்டு போங்க.. போய் ரெஸ்ட் எடுங்க என்று அனுப்பி வைத்தான்.
டேய் சாப்டீங்களா டா ..
ஹிம்ம் அங்க ஹோட்டலில் சாப்பிட்டோம்..
இங்கு அறைக்கு வந்து பார்க்க உண்ட மயக்கத்தில் அம்மணி நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
சத்தம் போடாமல் பைகளை அங்கு ஓரமாக வைத்தவன் வெளிச்சம் வந்த ஜன்னலை மெதுவாக சாற்றியவன் அவளருகில் அவளை அணைத்த படி படுத்து கொண்டான்.
அவள் முகம் அருகே நெருங்கி தன் மீசையால் அவள் கன்னத்தில் குறுகுறுப்பு மூட்ட ச்சு என்று தட்டி விட்டவள் பிரண்டு அவன் மார்பில் முகம் புதைத்து படுத்து கொண்டாள்.
அவள் தலை முடியை கோதியவன் பிரௌனி.. என்று அழைக்க
ஹிம்ம்..
தூங்குறியா?
ஹிம்ம்..
எனக்கு தூக்கம் வரலையே..
அதற்கும் ஹிம்ம்.. அந்த சத்தம் மட்டும் தான் வந்தது.
அப்படியே அவளை அணைத்து தன் கால்களால் அவள் கால்களை கிடுக்கு பிடி போட்டு அப்படியே மல்லாக்க திரும்ப அவன் மேல் அவள் இருந்தாள்.
திடீர் அசைவில் அவள் முழிக்க
தூக்கம் போய்டுச்சா பிரௌனி..
ஹிம்ம்
எனக்கு தூக்கம் வரலையே
அதுக்கு ஏன் என்னை எழுப்பி விட்டிங்க மாமா
நீ தானே தூங்க வைக்கணும்.. என்ன பிரௌனி இது கூட உனக்கு தெரியல..
சரி தூங்குங்க என்று அவன் நெஞ்சில் தட்டி கொடுத்து அவள் விட்ட தூக்கத்தை தொடர சிறிது நேரம் கழித்து
எப்போ மாமா வந்தீங்க
கொஞ்ச நேரம் முன்னாடி தான்
சாப்டீங்களா
ஹிம்ம் ஹோட்டல்ல சாப்பிட்டோம்
எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க..
நீ தான் ஒரு புடவை போதும்னு சொன்னியே பிரௌனி
என்ன கலர் மாமா?
சந்தன கலர்.. உனக்கு கட்டினா சூப்பரா இருக்கும்
அப்படியா எங்க காட்டுங்க என்று எழ முயன்றவளை அப்படியே அமுக்கி பிடித்தவன் காலையில் இருந்து ஒரு மனுஷன் பிரௌனி வேணும்னு கேட்டுட்டே இருக்கேன்..
அதுக்கு முதலில் பதில் சொல்லு.. அப்போதான் காமிப்பேன் என்கவும்
மாமா இதெல்லாம் போங்காட்டம்.. என்று துள்ளியவளை
முடியாது பிரௌனி.. இதை குடுத்துட்டு அதை வாங்கிக்கோ எப்படி என் டீல்.
உங்க டீல் நல்லாவே இல்ல மாமா.. பிரௌனி நைட் தான்.. இப்போலாம் இல்ல என்கவும்
அதுவரைக்கும் வெய்ட் பண்ண முடியாது பிரௌனி
அப்போ ஒன்னு பண்ணுங்க அன்னைக்கு நம்ம வீட்டுல என்னை ஒரு படம் பாக்க கூடாதுன்னு சொன்னீங்கல்ல அதை போடுங்க ரெண்டு பேரும் சேர்ந்து பார்ப்போம்..
அப்பறம் தரேன் உங்க பிரௌனிய..
எந்த படம் டி என்று யோசிக்க
அதான் மாமா ரெண்டு பேரு முத்தம் கொடுத்தாங்க.. நீங்க கூட என்னை அதுக்கு மேல பார்க்க விடலயே.. அந்த படம் தான்..
அடிங்க உனக்கு அந்த படம் கேக்குதா.. எனக்கு ஒன்னும் வேணாம் என்று அவளை தன் மேலிருந்து கீழிறக்கி படுக்க வைத்தவன் எழ முயல உங்களுக்கு வேண்டாம் ஆனா எனக்கு வேணுமே என்று அவன் நெஞ்சு பகுதியில் கடித்து வைத்தாள்.
ஐயோ கொல்லாத பிரௌனி கொஞ்சம் தொட்டுக்க சட்னி கேட்டா நீ கிட்னி வேணுமுங்குற.. நீ படிச்சு முடிச்ச பிறகுதான் எல்லாம் என்று திட்டவட்டமாக கூறியவன் எழுந்து கொள்ள அப்போ உங்க கூட சண்டை போங்க நான் சோகமா போறேன் என்று தோட்டத்து பக்கமாக செல்ல அவளை பின் தொடர்ந்தான்.
அவள் அதையும் தாண்டி வயல் பக்கம் செல்ல ஏய் பிரௌனி உன்னை வெளியே போக கூடாதுன்னு சொன்னாங்க டி..
போயா உன் பேச்சு கேட்க மாட்டேன்.. நீ மட்டும் நான் சொல்றதை கேட்டியா என்று ஒருமைக்கு தாவ இப்போ நிக்கல உன் பல்ல உடைக்க போறேன்.
நில்லு டி..
அவளோ வயல் வரப்பில் சர்வசாதாரணமாக நடந்து செல்ல இவனுக்கு அந்த சிறிய பாதையில் நடக்க தெரியவில்லை.
அவள் வேகத்திற்கு ஈடுகொடுத்து சென்றால் வழுக்கி விட்டது.. இவன் மெதுவாக வர அவளை காணவில்லை.
அதுக்குள்ள இவ எங்க போனா என்று சுற்றி பார்க்க ஓங்கி உயர்ந்து வளர்ந்து நின்ற தென்னை மரங்களும் கரும்பு தோப்பும் தான் தெரிந்தது.
அப்பொழுது அங்கு வந்த மருது என்ன அண்ணா இங்க நிக்குறீங்க என்று வினவவும் கயல் இங்க வந்தா அதான் நானும் வந்தேன்..
இப்போ எங்க போனான்னு தெரியல என்கவும் இங்க வர மாட்டாளே என்று யோசித்தவன் ஒரு வேளை தோப்பு வீட்டுல இருப்பாளோ என்னவோ என்று கூறியவன் ஐயோ அங்கேயே என்று அலறியடித்து கொண்டு ஓடினான்.
பிரசாத்திற்கு ஒன்றும் புரியவில்லை இவன் எதுக்கு இப்படி ஒடுறான் என்றவன்
ஐயோ என் பிரௌனி அங்க தானே போயிருப்பா என்று இவனும் தலைதெறிக்க ஓடினான்.
ஒருத்தன் வாய்க்காவரப்புல விழுந்து அடிச்சுட்டு ஓடி வந்தா என்ன செஞ்சிருக்கணும் நீங்களே சொல்லுங்க ஆனா இந்த பிரௌனி என்ன பண்ணினான்னு நீங்களே பாருங்க..
கயலு கயலு என்று மருது கத்தி கொண்டே வர அங்கிருந்த கட்டிலில் தலையை பிடித்த படி அமர்ந்திருந்தாள்.
அவளை பார்த்தவன் சற்று ஆசுவாசப்படுத்தி கொண்டு கீழே பார்க்க மீண்டும் பீதியானான்.
அவன் இரவு அடிக்க வைத்திருந்த தென்னங்கள்ளை குடித்து விட்டு பாட்டிலை கீழே போட்டிருந்தாள்.
கயலு அந்த பாட்டில் என்று இவன் ஆரம்பிக்க என்ன அத்தான் இந்த தண்ணீர் ஏன் புளிக்குது நல்லாவே இல்ல..
அப்பாடி கீழ ஊத்திட்டியா..
இல்ல நான் மாமா கூட சண்டை போட்டதுல தாகமா இருந்துச்சா அதான் ஒரு சொட்டு விடாம குடிச்சுட்டேன்.. என்று கூறியவள் பக்கத்தில் நின்றிருந்த தன் வாத்தியை கண்டு கொண்டு
மாமா என்றவள் இல்ல நான் பேச மாட்டேன் உன் கூட சண்டை என்று அவள் பாட்டுக்கு பிதற்ற
மருதை பார்க்க அவன் கீழே கிடந்த பாட்டிலை பார்த்தவன் வாத்தியை பரிதாப லுக் விட நீ போ நான் பார்த்துக்குறேன் என்றவன் வீட்டில் நாங்க இங்க இருக்கோம்னு சொல்லிடு மருது என்றவன் கயலிடம் சென்றான்.
இங்கு போதை ஏற அமர்ந்திருந்தவள் தன் அருகில் வந்தவனை ஓரகண்ணில் பார்க்க பிரௌனி எழுந்திரு இருட்ட போகுது வா உள்ள போகலாம் என்று அழைக்க
அவள் அடமாக அங்கேயே அமர்ந்திருந்தாள்.
மருது சென்றதை உறுதி செய்து கொண்டவன் அவளை கைகளில் அப்படியே அள்ளி கொள்ள டேய் வெள்ளையா என்னை விடு டா..
கீழே இறக்கி விடு டா நெட்டை கொக்கு.. என்று அலறினாள்.
ஒரு பாட்டில் உள்ள போனதும் எல்லாம் வெளிய வருது போல..என்று நினைத்து கொண்டவன் அங்கிருந்த கட்டிலில் அவளை கிடத்த போடா வாத்தி நான் உன் கூட சண்டை
ஆமா சண்டை தான் அதுகென்ன இப்போ
எதுக்கு இங்க வந்த போ
நீ எதுக்கு இங்க வந்த
இப்போ எதுக்கு நீ கிட்ட வர
ஹிம்ம் எனக்கு பயமா இருக்கு அதான் உன் பக்கத்துல இருந்துக்குறேன்..
சரி பொழைச்சு போஓஓஓஓஓ
போதையில் சாமியாடி கொண்டிருந்தவள் அவன் தோள் சாய அவளை சுற்றி கையை போட்டு விழுந்து விடாமல் அணைத்து கொண்டான்.
டேய் ராம்
என்னாது? என்று அதிர்ந்தான்
டேய் ராம்
ஹிம்ம்
எனக்கு ஏன் மயக்கமா வருது.. எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது என்று அவனை பார்த்தவள் நீயும் ரெண்டா தான் தெரியுற.. என்று கூறியவள் ஐயோ என்று கத்தினாள்.
ஏய் எதுக்கு டி இப்படி கத்துற
இல்ல நீ ஒரு ஆளா இருக்கும் போதே உன்னை சமாளிக்க முடியாது.. நீ இப்போ ரெண்டு ஆளா இருக்கியே அதான் என்ன பண்றதுன்னு தெரியல..
நான் சொல்ல வேண்டியதை எல்லாம் நீ சொல்லிட்டிருக்க..
என்னது சொன்னேன் என்று அவன் தோள்பட்டையில் தன் முகத்தை தேய்தபடி கேட்டாள்.
ஒஹ் அதுவே மறந்து போச்சா.. இரு நாளைக்கு இருக்கு உனக்கு என்கவும்
என்ன இருக்கு நாளைக்கு என்று ஊர்ந்து வந்து அவன் மடியில் அமர்ந்து கொண்டாள்.
இப்போ எதுக்கு டி என் மேல ஏறி உட்காந்துருக்க
நான் உட்காருவேன் இப்படி முத்தா கொடுப்பேன்.. இப்படி கடிச்சி வைப்பேன்.. உனக்கு என்ன டா வந்தது என்று அவள் சொன்னது அனைத்தையும் செய்தாள்.
அவளை தூக்கி கட்டிலில் அமர வைத்தவன் நீ எதுக்கு அடி போடுறனு தெரியுது என்றவன் நகர
டேய் ராம் நில்லுடா
அவன் நிற்கவும் இங்க வா ராம்
என்னடி வேணும் என்று அவளை நெருங்க வேணாம் வேணாம் போ ராம் என்று அவனை பாடாய் படுத்தி எடுத்தாள்.
ஆஹ்ஹ் தலை சுத்துது ராம் என்று தலையை பிடித்து கொள்ள என்ன பண்ணுது பிரௌனி.. உன்னை யாரு டி இதை குடிக்க சொன்னது என்று கடிந்து கொண்டான்.
உடனே ஒரு அழுகை..
போ நீ என்னை திட்டுற.. போடா எருமை.. என்னை திட்டுவியா என்று அவனை சரமாரியாக அடிக்க
அடியேய் போதையே ஏறாத கள்ளை குடிச்சிட்டு நீ பண்ற அலப்பறை தாங்க முடியல டி என்கவும் அதுக்கும் ஒப்பாரி வைத்தாள்.
சரி சரி என் பிரௌனி குட்டி நான் உன்னை ஏதும் சொல்லல சரியா என்று கட்டிப்பிடிக்க எனக்கு தலை சுத்துது ஒரு முத்தா தா..
நோ பிரௌனி
எஸ் வாத்தி வா என்று அவன் முகம் அருகே செல்ல ஏய் பிரௌனி வேண்டாம் இப்போவே சொல்லிட்டேன் தொடங்கினா நிறுத்த முடியாது..
அப்பறம் என்னை கேட்க கூடாது பார்த்துக்
0 Comments