தேவநிலா - 7:
என்ன லக்ஷ்மிமா அந்த பொண்ணு இன்னைக்காவது சாப்டுச்சா இல்லையா என்று கேட்க இல்லை தம்பி அது சாப்பிட மாட்டேங்குது நான் எப்போ சாப்பாடு எடுத்துட்டுப் போனாலும் போய் படுத்துக்குது அது வந்ததுல இருந்து சாப்பிடவே இல்லை மெலிஞ்சுபோச்சு.
நீங்க சத்தம் போட்டு கொஞ்சம் சாப்பிட வைங்க தம்பி என்கவும் அவ சாப்பிட்டால் இருப்பா இல்லைனா செத்து போறா எனக்கென்ன வந்துச்சு அவள் சாப்பிட்டா என்ன சாப்பிடலனா எனக்கென்ன கிடக்கட்டும் என்றவன் சரி நேரம் ஆச்சு நீங்க கிளம்புங்க காவலுக்கு ராஜ் இருக்கான் என்றதும் சரி தம்பி நான் காலையில் வரேன் என்கவும் ஹிம்ம் லக்ஷ்மி மா நான் கேட்டது என்று நிறுத்த எல்லாமே அலமாரில இருக்கு தம்பி என்றவர் கிளம்பிவிட்டார்.
அவர் சென்றதும் நிலா அறைக்கு சென்றவன் கதவை திறக்கவும் சட்டென்று அறையின் விளக்கு அணைந்தது. ஏய் இப்போ எதுக்கு லைட்டை ஆப் பண்ணி வச்சிருக்க என்று கேட்க ஒரு சத்தமும் வரவில்லை. இப்போ நீ லைட் போடுறியா இல்லை நான் போடவா என்கவும் அப்பொழுதும் எதுவும் சத்தம் வராமல் இருக்க ஸ்விட்ச் இருக்கும் பக்கம் அவன் நகரவும் சார் லைட் போடாதீங்க என் மேல டிரஸ் எதும் இல்லை நீங்க வெளியே போங்க.
ஏய் பொய் சொல்லாத என்று அதட்ட சார் நான் இப்போதான் குளிச்சேன் என் தாவணியை துவைச்சுப் போட்டேன் அதான் இன்னும் காயலை என்று பரிதாபமாக கூற ஏய் அரைவேக்காடு அதான் அலமாரியில் அத்தனை டிரெஸ் இருக்கே எதையாவது ஒன்னை எடுத்துட்டுப் போட வேண்டியது தானே எதுக்கு என் கழுத்தை அறுக்குற என்று சாடினான்.
உங்களோட டிரெஸ் எதுவும் எனக்கு வேண்டாம் சார் அது யாரு யாரு போட்டதோ இதுக்கு முன்னாடி எத்தனை பொண்ணுங்களை கடத்தினீங்களோ யாருக்கு தெரியும் உங்களோடதை உயயோகப் படுத்தினால் உங்க பாவம் எல்லாம் என்னை தான் வந்து சேரும் எனக்கு உங்களை சேர்ந்தது எதுவும் வேண்டாம்.
தயவு செய்து என்னை எங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிடுங்க ப்ளீஸ் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கிறேன் என்று கெஞ்ச அந்த அரக்கன் மனம் இரங்கவே இல்லை.
ஒஹ் இங்க எத்தனை பொண்ணுங்க இருந்தாங்க அதை எத்தனை முறை உன் கண்ணால் பார்த்த ஹான் சொல்லு என்கவும் அவளிடம் பதிலில்லை.
போ போய் டிரெஸ் மாத்திட்டு வா என்று உறுமினான்.
அவள் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருக்கவே என்ன என்று மீண்டும் கர்ஜித்தான்.
அவன் கர்ஜனையில் மானாக நடுங்கியவள் நீங்க வெளியே போங்க என்கவும் ஆமா இவங்க அப்படியே பேரழகி என்று வாய்க்குள் முனகியவன் இருட்டில் அவள் வரிவடிவத்தைக் கண்டு முறைத்து பார்த்து டிரெஸ் போட்டுட்டு வா அப்புறம் இருக்கு உனக்கு என்று வாய்க்குள் முனகியவன் வெளியே சென்றான்.
அவன் சென்றதும் குளியலறையில் இருந்து காயவைத்திருந்த தன் உடைகளை எடுத்து வந்தவள் போட ஆரம்பிக்க அவன் அடுத்து கேட்ட கேள்வியில் கையில் வைத்திருந்த உடை நழுவியது.
இப்போ என் காதுல கரெக்டாதான் விழுந்துதா.. என்று யோசித்தவள் என்ன சார் கேட்டீங்க என்று திரும்பவும் கேட்க உன் பேர் என்ன என்று பல்லை கடித்தபடி கேட்டான்.
அடங்.. கொக்கமக்கா பேரு தெரியாமையா டா ஒரு பிள்ளையை கடத்தி வந்து வச்சிருக்க என்று நினைத்தவள் அதை அவனிடமே அதிர்ச்சி மாறாமல் கேட்டாள்.
சார் என் பேருக்கூட தெரியாமலா என்னை இப்படி கடத்திட்டு வந்து வச்சுருக்கீங்க என்று கேட்கவும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு நீ என்னை கேள்வி கேட்காத புரிஞ்சுதா என்றவன் அவள் பதிலுக்காக காத்திருக்க என் பேரு தேன்நிலா சார் என்கவும் வாட் யூ மீன் ஹனி.?
ஹிம்ம் ஆமா சார் ஹனிமூன் தான் ச்சீ தேன்நிலா சார் என்று தலையில் அடித்துக் கொண்டு தன் உடைகளைப் போட்டுக் கொண்டாள்.
அப்போது கீழே டைகர் குறைக்கும் சத்தம் கேட்கவே ஏன் டைகர் இந்த நேரத்துல கத்துறான் என்னாச்சு என்று படிக்கட்டுகளில் இறங்கப் போக இங்கு அறையில் நிலாவின் அலறல் சத்தம் கேட்டது.
ஆஆ.. சார் .. ஆஆஹ் என்னை விடு ஆஹ் என்ற அலறலில் கதவு பக்கம் ஓடி வந்தவன் ஹே என்னாச்சு ஹனி ஹே என்று கத்தியவன் கதவை திறக்க முயற்சி செய்ய அதுவோ லாக் ஆகியிருந்தது.
ஷிட் என்று கதவை காலால் அட்டி உதைத்தவன் தன் பலம் கொண்ட மட்டும் கதவை ஓங்கி தள்ளி உடைக்க முயற்சி செய்தான்.
ஆஹ் சார் வலிக்குது விடுடா ஆஹ் சார் காப்பாத்துங்க சார் ஆஹ் வலிக்குது சார் என்ற அவளின் அலறலில் ஒஹ் காட் ஹனி இதோ வந்துடுறேன் என்று இவன் குரல் கொடுக்க அங்கு உள்ளே ஒருவன் நிலாவின் உடம்பில் பார்க்கும் இடத்தில் எல்லாம் கத்தியால் கீறியவன் வந்த வழியே சென்று விட்டான்.
இங்கு வெளியே தேவன் தன் பலம் கொண்டு கதவை மோத டப் டப் என்ற பெரும் சத்தம் கேட்டது..
கீழே இருந்து டைகர் சத்தம் கேட்டு ஓடி வந்தது அந்த கதவை தன் காலால் பிராண்ட ப்ளீஸ் ப்ரே பார் ஹெர் டைகர் என்று அதனிடம் கூறிக்கொண்டே கதவை மோத கதவு உடைந்து கொண்டு விழுந்தது.
உள்ளே சென்று பார்த்தவனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
சற்று முன்னர் வரை தன்னிடம் பேசிக் கொண்டிருந்தவள் இப்பொழுது இரத்த வெள்ளத்தில் கிடந்தாள்.
ஒஹ் காட் ஐ ஆம் சாரி ஹனி ப்ளீஸ் பர்கிவ் மீ என்றவன் அவளது நாடியைப் பிடித்து பார்த்தான்.
இவனது அலறலில் அரை மயக்கத்தில் கிடந்தவள் சார் வலிக்குது காப்பாத்துங்க சார் என்று அவன் கையை பிடித்தவாறு மயக்கத்திற்கு செல்ல அந்த கணம் அவன் தன்னையே வெறுத்தான்.
ஹேய் ஹனி உனக்கு ஒன்றுமில்லை உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன் ஸ்டே வித் மீ ப்ளீஸ் என்றவன் கண்ணில் கண்ணீர் துளி.
தான் தானா இது யாரென்றே தெரியாத ஒருத்திக்காக தான் ஏன் கண்ணீர் சிந்துகின்றோம் என்று அவனுக்கு புரியவில்லை.
அவளை தனக்கு பிடிக்காது தான் அதற்காக ஒருபோதும் அவள் சாக வேண்டும் என்றெல்லாம் அவன் நினைத்ததில்லை.
அவள் உடம்பில் இருந்து இரத்தம் வெளியேறிக் கொண்டிருக்க அதனை உணர்ந்தவன் அவளை தன் கையில் ஏந்தியவன் டைகரிடம் டைகர் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்துட்டு வா என்கவும் அது ஓடியது.
அவளை மெத்தையில் படுக்க வைத்தவன் அவள் மாராப்பை விலக்க அவள் அந்த மயக்க நிலையிலும் சார் என்று அவன் கையைப் பிடிக்க ஹேய் நான் ஒன்னும் பெண்பித்தன் கிடையாது முடியாம இருக்கிற பெண்ணிடம் பாய.. கையை எடு இரத்தம் அதிகம் போகுது கட்டுப் போட்டுட்டு ஹாஸ்பிட்டல் போகலாம் என்றவன் டைகர் பர்ஸ்ட் எய்ட் அடங்கிய பெட்டியை வாயில் கவ்விக் கொண்டு வர அதனிடமிருந்து பெட்டியை வாங்கியவன் அவள் உடைகள் அனைத்தையும் அகற்றினான்.
அவன் முன் பிறந்த மேனியாக கிடக்கிறோம் என்ற நினைப்பே அவளுக்கு உடம்பெல்லாம் கூசியது.
கண்களை திறக்க முடியாமல் திறந்தவள் சார் வேண்டாம் சார் என்று அவன் கைகளைத் தடுக்க ஹனி கொஞ்சம் நீ சும்மா இரு இத்தனை வெட்டு வாங்கி வச்சிருக்க வாய் மட்டும் பேச தெரியுதுல்ல என்று அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே ஒவ்வொரு இடமாக அழுத்தி துடைத்து பஞ்சு வைத்து பிளாஸ்டரை ஒட்ட அவள் வலியில் கத்தினாள்.
சார் ஐயோ வலிக்குது என்று அழ கொஞ்சம் பொறுத்துக்கோ ஹனி என்றவன் அவள் கைகளில் வேறெங்காவது காயம் இருக்கிறதா என்று பார்க்க அப்பொழுது தான் மெத்தை முழுக்க இரத்தம் அவளை திருப்பிப் பார்க்க முதுகில் பெரிய வெட்டுக் காயம் சற்று ஆழமாகவே இறங்கி இருந்தது.
இரத்தம் அதிகமாக வெளியேறவே ஒரு துணியை எடுத்தவன் அதில் அழுத்தி அவள் வயிற்றோடு கட்டுப் போட இங்க ஒன்னும் பண்ண முடியாது நாம ஹாஸ்பிட்டல் போயே ஆகனும் என்று அவளிடம் கூறியவன் அவள் மேல் ஒரு போர்வையைப் போர்த்தி விட்டு தன் கைகளில் ஏந்திக் கொண்டவன் ராஜூவிற்கு கால் செய்ய அவன் எடுக்கவில்லை.
உடனே பீமனுக்கு அழைத்தவன் சேனா இங்க கொஞ்சம் பிரச்சனை ராஜூவை வந்து பாரு என்றவன் அவளை ஏந்திக்கொண்டு சென்று காரில் கிடத்தியவன் மருத்துவமனைக்கு காரை செலுத்தினான்.
நிலாவின் இந்த நிலைமைக்கு காரணம் யார்?
தேவனிடம் சிக்கினால் அவர்களின் நிலை என்ன?
என்ன சொன்னதை செஞ்சிட்டியா அவளை முடிச்சிட்டியா என்று அந்த பக்கம் கேட்க இந்த பக்கம் பம்மிக் கொண்டே முடிச்சாச்சு மேம் உடம்புல ஒரு இருபது கத்தி குத்து நிறைய ரத்தம் போயிருக்கும் பிழைக்க வாய்ப்பே இல்லை என்று கூறினான்.
ஹாஹா அதுதான் எனக்கு வேணும் அவன் நிம்மதியாவே இருக்கக்கூடாது.. அவனுக்கு அவ்வளவு திமிர் இருக்கக் கூடாது நீ இவ்ளோ ஆடும் போது நான் உன் அம்மாடா எனக்கு எவ்ளோ இருக்கும் உன் திமிரை அடக்கிக் காட்டுறேன் என்று சபதமிட்டுக் கொண்டார்.
என்னைக்குமே இல்லாம அது என்ன புதுசா ஒரு பொண்ணை கூப்பிட்டு வந்து வீட்டுல வச்சிருக்க விடுவேனா நான் விடமாட்டேன் உன்னை நிம்மதியா இருக்க விட மாட்டேன்..
என் ஆசையை குழி தோண்டி புதைச்சிட்டு நீ நல்லா இருக்க நான் விட்டுருவேனா அதான் நீ ஆசையா வீட்டுக்கு கூட்டி வந்தவள கொன்னாச்சு ஹிம்ம் இப்போதான் எனக்கு நல்லா தூக்கம் வரும் என்று தன் தூக்கத்தை தொடர்ந்தாள்..
(ஐயோ அவன் எங்க மா அவளை ஆசையா கூப்பிட்டு வந்தான் அதை நீ பார்த்த போமா அங்குட்டு..
பிரிக்கிறேன்னு சொல்லி நெருப்பை பற்ற வச்சிட்டியே இனி பிடிச்சிக்கிட்டு திகுதிகுவென எரியுமே..)
சாதாரண நெருப்பா இருந்தா பரவாயில்லை அணைச்சிடலாம் இது காதல் தீ அல்லவா பத்திக்கிட்டா பிடிச்சிக்குட்டு விடாம எரியுமே..
ஹிம்ம் காதல் காட்டுத்தீ போல அல்லவா பரவும்..
***
இங்கு தன் நண்பன் பிரபாகரனின் மருத்துவமனையில் நிலாவை சேர்த்து விட்டு வெளியில் தன் மனதுடன் படாதப்பாடு பட்டுக்கொண்டிருந்தான்.
எல்லாம் உன்னால்தான் அவளுக்கு இப்படி நடக்க நீ தான் காரணம் என்று அவன் மனசாட்சி அவனை குற்றம் சாட்டிக்கொண்டிருந்தது.
குற்ற உணர்ச்சியில் குமைந்து கொண்டிருந்தவன் தன் மருத்துவ நண்பன் வெளி வரவும் டேய் அந்த பொண்ணு எப்படி இருக்கா என்று அவனிடம் அவளுக்கு எதுவும் ஆக கூடாது என்ற வேண்டுதலுடன் தன் மருத்துவ நண்பனிடம் கேட்க மச்சி ரத்தம் நிறைய போயிருக்கு ஓ பாசிட்டிவ் ரத்தம் வேணும் நான் போய் பிளட் பேங்க்ல சொல்லிட்டு வரேன் என்று அவன் நகர டேய் எனக்கும் அதே குரூப் பிளட் தான் என்கவும் அப்போ நல்லது வாவென்று அழைத்து சென்றான்.
என்ன மச்சி உனக்கும் உன் லவ்வருக்கும் ஒரே ப்ளட் குரூப் சூப்பர் ஆமா எப்போ கல்யாணம் இந்த விஷயம் தாத்தாவிற்கு தெரியுமா உன் கல்யாணத்துக்கு என்னை கூப்பிடுவியா என்ற படி அவனை அவள் இருக்கும் அழைத்து சென்றான்.
மச்சி முதுகுல தான் பெரிய வெட்டுக் காயம் எப்படி ஏன்னு எல்லாம் நான் கேட்க மாட்டேன் கேட்டாலும் நீ வாயை திறக்கப் போறதில்ல என்று இவன் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருக்க அவன் எங்கு இவன் பேசுவதைக் கேட்டான்.
தேவனின் மனம் தான் இங்கு இவன் பேச்சில் லயிக்கவில்லையே..
அங்கு வாடி வதங்கிய கொடியாக அந்த கட்டிலில் ஒருக்களித்து படுக்க வைக்கப்பட்டிருந்தவளிடமே மனம் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.
அவளின் நிலைக்கு தான் தான் காரணம் என்ற நிதர்சன உண்மை அவனை கொல்லாமல் கொன்றது.
தேவன் அவளை பார்த்தபடியே நிற்பதை கண்ட பிரபா டேய் மச்சி தையல் போட்டுருக்கோம் இப்போ மயக்கத்துல இருக்காங்க பயப்படத் தேவையில்லை..
நீ எப்படியோ சீக்கிரமே இங்க கொண்டு வந்துட்ட இல்லனா நிலைமை கைமீறிப் போயிருக்கும் கவலைப்படாத டா மச்சி அவங்க நல்லா இருக்காங்க…
அவன் அப்படி சொல்லவும் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
நீ வா வந்து பிளட் குடு என்று தேவனை அழைத்து சென்றவன் ஆமா மச்சி உன் ஆளு பேரு என்னன்னு சொல்லவே இல்லையே என்று கேட்டுக் கொண்டே அவன் வேலையைக் கவனித்தான்.
ஹிம்ம் தெரியாது..
ஏதே தெரியாதா..?
ஹிம்ம் என்று ஏதோ யோசனையில் இருந்தபடி கூறியவன் தன் நண்பனின் உறைந்த நிலையைக் கண்டு தன்னை சுதாரித்தவன் ஹனிமூன் என்று வாயில் வந்ததை உளறி வைத்தான்.
ஏதே ஹனிமூனா அதுக்குள்ளையா டேய் கல்யாணம் செய்யாமலே ஹனிமூன் கொண்டாடிட்டியா என்று அதிர்ச்சியில் அடுக்கடுக்காக அவன் பாட்டுக்கு தன் கற்பனைக்கு அணை போடாமல் கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்ல..
டேய் கொஞ்சம் மூச்சு விடுடா அவ பேரு தேன் நிலா அதை தான் அப்படி சொன்னேன் நான் அவளை லவ்லாம் பண்ணல இப்போ எதுவும் என்னை கேட்காத நான் கொஞ்சம் தனியா இருக்கணும் போய் உனக்கு ஏதாவது வேலை இருந்தா போய் பாரு.. என்று விரட்டாத குறையாக தன் நண்பனை விரட்டியடித்தான்.
இவன் ஏன் இப்படி விரட்டுறான்.. பயல் சரியில்ல அந்த பொண்ணுக்கு ஒன்னுன்னு உடனே அப்படி துடிக்குறான் ஆனா கேட்டா விரட்டுறான் என்னமோ இருக்கு..
எதுவும் இல்லாமலா இந்த துடி துடிக்கிறான் எலி ஏன் ஜட்டி போட்டுட்டு ஓடுது என்று நினைத்து கொண்டு தன் வேலையை பார்க்க சென்றான்.
இங்கு பல சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனை அவன் அலைப்பேசி சிணுங்கி நான் இங்கு தான் இருக்கிறேன் என்று காட்டி கொடுத்தது.
தன் தாத்தா அழைப்பதை பார்த்தவன் உடனடியாக எடுத்து காதில் வைத்தான்..
ஹலோ தாத்தா என்ன இந்த நேரத்துல கால் பண்ணிருக்கீங்க என்ன ஆச்சு உடம்பு ஏதும் சரியில்லையா என்று பதட்டமாக தன் கேள்வி கணைகளை அடுக்கி கொண்டே செல்ல வர்மா என்ற குரல் கேட்கவும் அப்படியே அமைதியானான்.
தாத்தா..
எங்க இருக்க வர்மா
வீட்டுல தான் தாத்தா என்று என்றும் அவரிடம் சொல்லாத பொய்யை இன்று கூறினான்.
அவ்ளோ பெரிய மனுஷனா ஆயிட்டியா வர்மா பொய் சொல்ற அளவுக்கு வலந்துட்ட என்று கூற இந்த பக்கம் எதுவும் பேசாமல் அமைதியானான்.
அவன் என்றுமே அவரிடம் பொய்யுரைத்தது இல்லை அதனை நினைத்து அமைதியாகவே இருக்க தன் பேச்சை தொடர்ந்தார் பெரியவர்.
அந்த பொண்ணு யாருன்னு எனக்கு தெரியாது அவளை பற்றி எதுவும் உன்னிடம் கேட்கவும் மாட்டேன்..
ஆனால் ஒன்னு மட்டும் உறுதி வர்மா அந்த பெண்ணுக்கு ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு நீ மட்டுமே பொறுப்பு..
ஹிம்ம் அப்பறம் நான் சொன்ன விஷயத்தை மறந்திருக்க மாட்டேன்னு நெனைக்கிறேன் இந்த வாரம் வீட்டுக்கு வரேன் நான் வந்ததும் பேசலாம் என்றவர் அவன் பதிலை எதிர்பாராமல் அலைப்பேசியை வைத்து விட்டார்.
தன் அலைப்பேசியை வெறித்தவன் இவருக்கு மட்டும் எப்படித்தான் எல்லாம் தெரிய வருமோ..
கண்டிப்பாக தாத்தாவிடம் இவளை பற்றி சொல்லியே ஆகவேண்டும் அவர் கேட்க மாட்டார் ஆனால் இந்த வாரம் வரேன்னு சொல்றாங்களே அப்போ பாட்டி வருவாங்க இவளை பற்றி கேட்பாங்களே..
நான் எது செஞ்சாலும் எங்கே இருந்தாலும் எல்லாம் இவருக்கு தெரிய வந்துடுது ச்சே என்று தன் அலைப்பேசியை விட்டெறிய சத்தம் கேட்டு வந்த செவிலியரிடம் கண்களால் தன் கையை காட்டினான்.
கீழே கிடந்த அவனின் அலைப்பேசி இருந்த நிலைமையை கண்ட செவிலி சற்று பயத்துடன் அவன் அருகில் வந்தவள் ஊசியை எடுத்து விட்டு தேனுவிற்கு ரத்தத்தை ஏற்றினாள்.
அவள் கைகளில் ஊசியை குத்தும் பொழுது பார்த்து மெதுவா போடுங்க ஹனிக்கு வலிக்க போகுது என்று கூறினான் என்றால் பார்த்துக்கோங்களேன்..
(தேவா இதுதான் நீ அவளை கடத்தி வச்சிருக்க லட்சணாமான்னு வாசகர்கள் மானாவாரியா திட்டுறது கேட்குது)
அவனை மேலும் கீழும் பார்த்த செவிலி எறும்பு கடிச்சது போலத்தான் இருக்கும் இதுக்கு மேல எப்படி வலிக்காம ஊசி போடுறது என்று குழம்பி போனவள் தன் வேலையை முடித்து விட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள்.
ரௌண்ட்ஸ் முடித்து வந்த பிரபாகரனை பிடித்து கொண்டவன் டேய் எப்போ வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்..
எவ்வளவு நாள் ஆகும் சரியாக என்று அடுக்கடுக்காக கேள்விகளை தொடுத்து கொண்டிருந்தான்.
ஒன்னும் பிரச்சனை இல்லை மச்சி அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சதும் நீ கூட்டிட்டு போகலாம் பட் காயம் குணமாகுற வரைக்கும் பாத்து இருக்கணும்..
ஏன்னா இன்பக்ஷன் ஆக நிறைய வாய்ப்பு இருக்கு.. பத்திரமா பாத்துக்கணும் என்று சில பல அறிவுரைகளை மருத்துவனாக வழங்கியவன் உடனே நண்பன் மோடுக்கு மாறி அப்பறம் மச்சி எப்போ கல்யாணம் என்கவும்
ஏதே கல்யாணமா அதெல்லாம் ஒன்னுமில்ல என்று இடத்தை காலி செய்தவனை கண்டு டேய் கல்யாணம் பண்ணிட்டு வந்து என்கிட்ட நிப்ப அப்போ பார்த்துக்குறேன் என்ற அவன் குரல் தேவாவை துரத்தியது.
அவன் வாய் முகூர்த்தம் அவன் சொன்னது போலவே தேவா தேனுவை திருமணம் செய்யும் சூழல் வந்தது..
தொடரும்...
0 Comments