தேவநிலா - 5:
படுக்கையில் இருந்து எழுந்தவள் சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தை பார்க்க ஐயோ ஒன்பது மணி வரைக்குமா தூங்கினோம்.. எப்படி இவ்வளவு நேரம் தூங்கினோம் நேத்து நைட் அந்த சார் அழைச்சிட்டுப் போனாரே அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியலையே என்று யோசித்தவளுக்கு தலை தான் வலித்தது.
தட்டுத்தடுமாறி எழுந்தவள் முகத்தை கழுவி விட்டு தன் தாவணியால் முகத்தைத் துடைத்துக் கொண்டே வெளியே வர என்ன அம்மணிக்கு இப்போதான் விடிஞ்சதா ஒன் மகாராணியை ஆள் விட்டு எழுப்பினா தான் தூக்கம் கலையுமோ என்ற குரல் அந்த வீடே அதிரும் படி கேட்க அவன் குரலில் பயந்தவள் ஐயோ இல்லை சார் நான் எப்பொழுதும் சீக்கிரம் எழுந்துடுவேன் இன்னைக்கு என்னன்னு தெரியலை அதிக நேர தூங்கிட்டேன் என்று கூற ப்ச் நிறுத்து உன் பேச்சை கேட்க எனக்கு நேரம் இல்லை போய் உனக்கு கொடுக்கிற வேலையை செய் என்று விட்டு நகரப் போனவனை சார் சார் என்று அவனருகில் ஓடியவள் அவன் கையைப் பிடித்து சார் அந்த பெரிய சார் எங்க அவர்கிட்ட நான் படம் நடிக்க கேட்டிருந்தேன்..
அவரும் கண்டிப்பாக தரேன்னு சொன்னாரு சார் அவர் எங்க சார் என்று அவனிடம் பயமில்லாமல் கேள்வி கேட்க அவள் தன் கையை பிடித்திருப்பதைப் பார்த்தவன் ஒஹ் உனக்கு சினிமாவில் நடிக்கணும்னு ரொம்ப ஆசையோ என்று எகத்தாளமாக கேட்டவன் அவள் கையை உதறிவிட்டு நீ படமெல்லாம் நடிக்க போறது கிடையாது..
போ போய் பத்து பாத்திரம் தேய்ச்சிட்டு சம்பளம் வாங்கிக்க என்று கூற சார் நான் அந்த பெரிய சாரை பார்க்கணும் நீல் என்னை துப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க என் அவள் பாட்டுக்குக் கூற அவள் கன்னத்தில் பளாரென அறைந்தவன் ஏய் சொன்னதை செய் சும்மா வளவளன்னு பேசிட்டுருந்தன்னு தெரிஞ்சுது வெட்டிப் போட்டுடுவேன் போ போய் வேலையைப் பாரு நடிக்க வந்துட்டா பையை தூக்கிக்கிட்டு எல்லாம் பணம் படுத்தும் பாடு என்று கர்ஜித்தவன் தன் வேலையைப் பார்க்க வெளியே சென்று விட்டான்.
எவ்வளவு நேரம் அவன் அடித் கன்னத்தைப் பிடித்தப்படி நின்றிருந்தாளோ அந்த முதியவர் வந்து அவளை அழைக்கும் வரை அப்படிே அழுது கொண்டே நின்றிருந்தாள்.
யம்மா பொண்ணு வா வந்து சாப்பிடு என்கவும் இல்லை எனக்கு வேண்டாம் என்று அவரிடம் மறுத்தவள் தான் இருந் அறைக்கு சென்று தான் கொண்டு வந்த பையைப் பார்க்க அங்கு எந்த ஒரு பையும் இல்லை..
எங்க வச்சேன் பையை காணும் நைட் நான் எப்படி இங்க வந்தேன் நான் இங்க வந்தது போல கூட நினைப்பு இல்லையே என்று யோசிக்க யாரோ தன்னை தூக்கி வந்து மெத்தையில் போட்டு விட்டு சென்றது மங்கலாக நினைவு வந்தது..
யாரா இருக்கும் இப்போ என்னை அடிச்சிட்டு முரட்டு பீசா இருக்குமோ அவனா தான் இருக்கும் முதல்ல படத்துல நடிச்சிட்டு பணம் வந்த பிறகு உன்ன என்ன பண்றேன்னு பாரு என் பயில்வான் வச்சு உன்னை அடிச்சு தோலை உறிச்சி தொங்க போடுறேன் என்று தனக்குள் பேசியவள் மீண்டும் ச்சே நான் என்ன கேட்டேன்னு இப்படி அடிச்சான்னு தெரியலை இரு எங்க அண்ணாகிட்டையும் வெற்றி மாமாட்டையும் சொல்றேன் அப்புறம் உனக்கு இருக்கு என்று விசும்பியவள் அப்படியே தூங்கிப்போனாள்.
இங்கு வெளியே வேலையாக சென்று விட்டு வந்தவன் ராணிம்மா அவ சாப்பிட்டாளா என்று கேட்க இல்ல தம்பி வேணாமுன்னு சொல்லிட்டுப் போய் படுத்துக்கிச்சு என்கவும் சரி நான் சொல்லும் போது சாப்பாடு கொடுத்து அனுப்புங்க என்றவன் அவளிருந்த அறைக்கு வேகமாக சென்றான்.
கதவை திறந்து கொண்டு வந்தவை பார்த்ததென்னவோ மெத்தையில் தன்னை குறுக்கிக் கொண்டு தூக்கத்தில் ஏதோ முனகிக் கொண்டு இருந்தவளைத்தான்..
அவள் அப்படி என்னத்தான் சொல்கிறாள் வாங்க கேட்போம்..
அண்ணா இந்த ராட்சசன் என்னை கன்னத்துல அடிச்சிட்டான் தெரியுமா எனக்கு வலிக்குது நீ வா வந்து இந்த டப்பா தலையன அடி மாமாவையும் கூட்டிட்டு வா அப்போதான் அவன் இனிமே இப்படி அடிக்க மாட்டான்.. என்று தூக்கத்தில் உளறிக் கொண்டிருந்தாள்.
பாவம் அவளுக்கு தெரியவில்லை அவள் உளருவதை அந்த ராட்சசன் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்று.
ஏய் எழுந்திரு என்று அவளை உலுக்க படக்கென்று கண்களைத் திறந்தவள் அவனை அத்தனை அருகில் கண்டதும் அதிர்ந்தவள் ராட்சசன் நகரு உன்ன பார்க்கவே எனக்கு பிடிக்கலை என்னை விடு அந்த சார் எங்க இல்லைன்னா என்னை மணி அண்ணாட்ட கொண்டு விடு என்று அழ ஆரம்பிக்க
ஒஹ் என்னை உனக்கு பிடிக்கலையா என்று கேள்வியாக கேட்க
ம்ம் நீ என்னை அடிக்கிற பயமா இருக்கு போ
ஒஹ் அப்போ அவனுங்கள மாதிரி தடவுனா உனக்கு பிடிக்குமோ என்று அவள் பட்டு உதட்டை கைகள் கொண்டு வருட ச்சீ தள்ளி போ நான் இங்கிருந்து போகணும் என்னை விடு என்று கத்த ஆரம்பித்து விட்டாள்.
அவள் கத்தவும் ஏய் வாயை மூடுடி உன்னை கொண்டு போய் விடுவதற்கா உன்னை அவ்வளவு பாடுபட்டு கடத்திட்டு வந்தேன்
என்னாது கடத்திட்டு வந்தியா?
ஹிம்ம் ஆமா அதுக்கென்ன இப்போ.. உன்னை கடத்திட்டு வந்தது எதுக்குன்னு நினைக்குற உன்னை மும்பைல விற்க தான்..
அவள் அவனை அதிர்ந்து நோக்கவும் அவளைத் திருப்தியாக பார்த்தவன் மீண்டும் தொடர்ந்தான்.
நீ ரொம்ப அழகா இல்லைன்னாலும் கொஞ்சம் சுமாரா இருக்க இல்லையா அதனால கொஞ்ச ரேட்டு அதிகமாத்தான் போக வாய்ப்பு இருக்கு அதான் உன்னை தூக்கிட்டேன் என்று கூற எங்கிருந்துதான் அப்படி ஒரு கோபம் வந்ததோ பக்கத்தில் இருந்த பூ ஜாடியை எடுத்து அவன் மண்டையில் அடித்தவள் அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க ஓட்டம் பிடித்தாள்.
அவன் சுதாரிப்பதற்கு முன் அத்தனையும் நடந்து முடிந்திருந்தது...
அவனை பூ ஜாடியால் அடித்து விட்டு ஒரே ஓட்டம் பிடித்தவள் தான் அவன் என்ன ஆனான் என்று கூட பார்க்கவில்லை.. தன் மானம் தான் முக்கியம் என்று நினைத்தவள் எங்கும் நிற்கவே இல்லை.
(பாருடா நம்ம தேனு உசைன் போல்ட்டையே மிஞ்சிடுவா போலையே)
வேகமாக ஓடி வந்தவள் கொஞ்சம் மக்கள் நடமாடும் இடம் வந்ததும் மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். ஆனாலும் அவளுக்கு ஏற்பட்ட படப்படப்பு இன்னும் குறையவே இல்லை.
ரோட்டில் போகும் பேருந்துகளை பார்க்க அனைத்தும் வித்தியாசமாக இருந்தது.. பேருந்தின் நிறம் வேறு ஏன் பேருந்துகளின் அமைப்பே மாறியிருந்தது.. இதில் ஊர் பெயரைப் பார்க்க சில எழுத்துக்கள் நம் தமிழ் எழுத்தை தலைக்கீழ் போட்டது போலவும் இன்னும் சிலது ஜிலேபி போலவும் முருக்கு பிழிந்து விட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.
என்ன எல்லாம மாறியிருக்கு நாம தலைதெறிக்க ஓடி வந்ததுல ஏதாவது மண்டை குழம்பிடுச்சா அதனால தான் எல்லாம் வேற மாதிரி தெரியுதோ என்று யோசித்தவள் தலையை உளுக்கிக் கொண்டு மறுபடியும் பார்க்க அப்படியே தான் தெரிந்தது.
சரி நம்ம கண்ணுல தான் கோளாரோ சரி ஊருக்கு போய் தான் சரி பண்ணனும்.. இப்போ பஸ்ல ஏறனும்னா கூட நம்மகிட்ட காசு சுத்தமா இல்லையே இப்போ என்ன பண்றது.
சரி வரப்போற வண்டியில யார்கிட்டையாவது லிப்ட் கேப்போம். ஐயோ யாரும் வண்டியை நிறுத்தலன்னா என்ன பண்றது.. என்று புலம்பியவள் வண்டியை நிறுத்தி ஏத்திக்கனும் கடவுளே எவன் ஏத்துரானோ அவனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணுறேன்.
(அவன் உனக்கு சமாதி கட்டாம இருந்தா சரி தான்..)
இரண்டு மூன்று வாகனங்கள் இவள் கை காட்டியும் நிற்காமல் கடந்து செல்ல அச்சோ கடவுளே சீக்கிரம் நான் ஊருக்கு போகணும் ஏதாவது ஒரு வண்டில ஏறி உட்கார்ந்தா தான் நிம்மதியா இருக்கும்..
( ஏறி உட்கார்ந்ததும் நெஞ்ச வலியில் மேல போகாம இருந்தா சரிதான்)
வேறு ஏதாவது வண்டி வருகிறதா என்று ரோட்டை பார்த்தாள்.
சிறிது நேரத்தில் ஒரு கார் வரவும் அப்பாடி ஒரு கார் வருது கடவுளே உனக்கு கோடி கும்பிடு போடுறேன் எப்படியாவது இந்த வண்டியாச்சும் நிற்கணும் என்று வேண்ட அவள் கையைக் காட்டாமலே வண்டி நின்றது.
இருந்த பதட்டத்தில் அதனை கவனிக்காமல பட்டென் கதவை திறந்து ஏறியவள் பக்கத்தில் அமர்ந்திருந்தவனை திரும்பியும் பாராமல் நன்றி தெரிவித்தவள் தன் நெஞ்சில் கை வைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக கொண்டே இருக்கையில் சாய்ந்தாள்.
தன்னை கடத்தி வைத்திருக்கிறான் என்று கூறியதுமே அதிர்ந்தவள் அவன் தன்னை எதற்காக கடத்தினான் என்று கூறியதும் வெடவெடத்துப் போனாள்.
யாருக்கிட்ட மும்பையில விற்கப் போறானாமில்ல அவன் ஆளையும் தலையும் பாரு எருமை காட்டான்.. ச்சே இப்படி கூடவா இருப்பாங்க மனசாட்சியே இல்லாம நாக்கு கூசாம விற்கப் போறேன்ன அதும் என்கிட்டையே சொல்றான் எவ்வளவு தைரியம் இருக்கணும் அதான் போட்டேன்ல ஒரு போடு என்று அவனிடமிருந்து தப்பித்து விட்ட நிம்மதியில் வாய்விட்டே கூற யாரை போட்டீங்க என்ற குரல் கேட்கவும் அவள் அதிர்த முகத்திலேயே தெரிந்தது அவள் அவனைக் கண்டு கொண்டாள் யார் என்று…
ஓடும் காரில் இருந்து இறங்க போகிறோம் என்ற பயம் கூட இல்லாமல் இவனிடமிருந்து தப்பித்தே ஆக வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை மட்டும் மனதில் கொண்டு கதவை திறக்கப் பார்க்க பாவம் அவள் அறியவில்லை அவள் ஏறியதுமே அவன் சென்ட்ரல் லாக் போட்டதை.
கதவை திறக்க முயன்றவள் அது முடியாமல் போகவும் அவனை பயத்துடன் திரும்பிப் பார்த்தாள்.
அவனை பார்க்கவே அத்தனை பயமாக இருந்தது. அவள் பூஜாடியால் அடித்ததில் அவன் மண்டை உடைந்து இரத்தம் வந்திருக்க அதை கூட துடைக்காமல் அவளை பிடிக்க வந்திருப்பான் போலும்.
இவள் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் போச்சி ராட்சசன் கிட்ட இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே ஐயோ கடவுளே இப்படி உன்னை நம்பின என்னை நடு ரோட்டுல காருக்குள்ள அதும் இந்த அரக்கனோட தன்னந்தனியா தவிக்க விட்டுட்டியே நீ எல்லாம் நல்லா இருப்பியா என்று ஒரே புலம்பாக புலம்ப, விட்டான் செவிட்டிலேயே ஒரு அரை அவ்வளவு தான் அந்த ஒரு அடியே தாங்காமல் மயங்கி விட்டாள்.
எவ்வளவு தைரியம் டி உனக்கு என்னையே அடிச்சிட்டு ஓடி வரியா இரு உனக்கு சரியான பாடம் புகட்டுறேன் அப்போ தான் இந்த வர்மன் யாருன்னு உனக்கு தெரியும் என்று மயங்கி சரிந்திரந்தவளிடம் பேசியவன் வேகம் எடுத்தான் தன் இருப்பிடத்தை நோக்கி.
தன் இடம் வந்து சேர்ந்ததும் வண்டியை அதன் இடத்தில் நிறுத்தியவன் இவளை வந்து தூக்க அவன் கையில் கடித்து விட்டு ஓட பார்க்க அவளை தன்னுடன் அணைத்துப் பிடித்தவன் டைகர் என்று குரல் கொடுக்க அவன் உயரத்தில் பாதி உயரம் இருந்த நாய் அவனுடைய செல்லப் பிராணி அவனுக்கு மட்டும் தான் செல்லப் பிராணி மற்றவர்களுக்கு என்றும் அது டைகர் தான்.
டைகர் தன்னருகில் வந்ததும் நிலாவை அணைத்து பிடித்திருந்தவன் பொத்தென்று கீழே போட இதை எதிர்ப்பாராதவள் அப்படியே கீழே விழவும் டைகரிடம் அவன் கேட்ச் ஹெர் என்று கூற இவளிடம் டைகர் தன் கோரப்பற்களைக் காட்டியவாறு நெருங்கியது.
அதனுடைய பற்களைக் கண்டு பயந்தவள் ஓட அதுவும் உன்ன விட மாட்டேன் என்பது போல் அவளைத் துரத்த அங்கு முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மேல் வேறு வழி இல்லாமல் தொத்திக்கொண்டாள்.
ச்சூ போ இங்கிருந்து என்று அவன் மேல் தொத்தியவாரே அதனை விரட்டப் பார்க்க அதுவோ உன்னை ஒரு கடியாவது கடித்தால் தான் என் மனது ஆறும் என்பது போல் அவளை பார்த்து உர் உர் என்று உறுமிக் கொண்டே இருந்தது.
அவளுக்கு இருந்த பயத்தில் அவன் கழுத்தைக கட்டிக் கொண்டு சார் சார் எனக்கு பயமாருக்கு ப்ளீஸ் சார் என்னை காப்பாத்துங்க சார் உங்களை விட இது என்னை ரொம்ப பயம் காட்டுது சார் என்று கெஞ்ச அவன் முறைத்த முறைப்பில் வாயை மூடிக் கொண்டாள்.
பயமா இருக்குன்னு சொன்னது ஒரு தப்பா அதுக்கு எதுக்கு இப்ப முறைக்கிறான் பனங்கொட்டத் தலையா..
ஐயோ இந்த ரெண்டு நாயிக்கிட்டையும் நான் படுற பாடு இருக்கே கடவுளே உனக்கு கண்ணில்லையா.. என்று புலம்பியவள் உனக்கு கண்டிப்பா கண் இல்லை அதான் நான் அவஸ்தை படுறதை பார்த்துட்டு இருக்க.. ஐயோ என்று தலையில் அடித்துக் கொண்டவள் சார் சார் ப்ளீஸ் சார் என்னை விட்டுடுங்க சார்..
நான் பச்சை பிள்ளை சார்..
நீ பச்சை பிள்ளையா இல்லை சிவப்பு பிள்ளையான்னு வா தோலை உறிச்சி பார்த்துடலாம் என்று அவளை தூக்கிக் கொண்டே வீட்டின் உள்ளே சென்றான்.
தொடரும்...
0 Comments