வாழ்வு - 15

 



வாழ்வு - 29:

இங்கு தன்னை விடுவிடுவென்று அழைத்து வந்தவளை சந்தியா என்று பரமன் தன்னிடம் சொன்னது அனைத்தையும் ஒன்று விடாமல் கூறியவர் நீ அபியைத் தப்பா நினைச்சுக்காதடா பிள்ளை தங்கமான பையன் என்றதும் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா தாத்தா என்று அதிர்ச்சியாகக் கேட்டாள்.

இதுல அவரை தப்பா நினைக்க என்ன இருக்கு தாத்தா..அந்த பொண்ணு மேல தான் தப்பு என்றும் எப்படி அவள தன்னவனை ஆண்மை இல்லாதவன் என்று சொல்லுவாள் என்று அவள் ஆத்திரமாக வந்தது. இவர் அவளை எதுக்கு சும்மா விட்டார். அடிச்சுப் பல்லைக் கழட்டிடுருக்கனும் என்று தன் மனதில் லதாவிற்கு வசைமாரிப் பொழிந்துக் கொண்டிருந்தவளின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார்.

போடா அபிக்கு இந்நேரம் சொல்லிருப்பாங்க அவன் பதறுவான் என்றதும் அவரே இன்னும் கொஞ்ச நேரத்துல என்னை தேடிக்கிட்டு வருவாரு தாத்தா கொஞ்சம் அவர் கிட்ட விளையாண்டு பளிப்போம்.. அவரோட ரியாக்ஷ்ன நான் பார்க்கனும் என்றதும் சிரித்துக் கொண்டு வேறு பேச ஆரம்பித்தனர்..

அபி வீட்டிற்கு வந்து தியாவைத் தேடியவாறே என்னம்மா என்ன ஆச்சு இந்த நேரத்துல எதுக்கு வர சொன்னீங்க என்று கேட்டுக் கொண்டே வந்தவன் தியா.. என்று அழைத்தான். எப்பொழுதும் ஒரு குரலுக்கு ஓடி வரும் தன் பேபியை இன்னும் காணவில்லை என்று யோசித்தவன் எங்கம்மா தியா.. வெளியே போயிருக்காளா என்று கேட்டான்.

அபி என்று தயங்கியவர் பின் லதாக்கும் அந்த பையனுக்கும் டிவோர்ஸ் நடக்கப் போகுதாம் அபி என்று கூறியதும் அதுக்கென்ன ம்மா அவ எப்படியோ போறா நமக்கென்ன என்று அலட்சியமாகக் கேட்டான்.அது இல்லை அபி சந்தியாவும் அதை பார்த்தாள என்று கூறவும் பார்க்கட்டும் அவ பார்த்தா என்ன என்று புருவ முடிச்சுடன் கேட்கவும் சந்தியா கிட்ட லதா பிரசவத்தல இறந்து போயிட்டான்னு தான் அபி சொல்லிருக்கோம் என்றதும் அதிர்ந்தான்.

என்ன ம்மா சொல்றீங்க என்றவன் தன் தாத்தாவை நோக்கி திரும்பியவன் நான் உங்க கிட்ட கேட்டதுக்கு நீங்க எல்லாத்தையும் சொல்லிடீங்கன்னு தானே சொன்னீங்க.. என்று வினவவும் அபி அவங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்னு தான் நான் அவங்ககிட்ட மறச்சேன்..

 பின்னாடி லதா ஹர்ஷியைக் கேட்டுக் கோர்ட் கேஸ்னு போய்டுவான்னு பயந்து அவங்க பின் வாங்கக் கூடாதுன்னு தான் அபி நான் அவங்ககிட்ட சொல்லலை.. எனக்கு அப்போ மனசுல இருந்தது எல்லாம் உனக்கு கல்யாணம் ஆகணும் அது ஒன்னு தான் என் மனசுல இருந்துச்சு என்று கூறவும் தாத்தா நான் ஏமாற்றி கல்யாணம் பண்ணிக்கிட்டதா தானே தியா நினைப்பா என்று பரிதவிப்புடன் கேட்டான்.

சதாக்கும் முன்னாடியே தெரியும் அபி தியா எதும் நினைக்க மாட்டா அவளுக்கு சதா புரிய வச்சிடுவான் நீ போய் கூட்டிட்டு வா என்றதும் பக்கத்து வீட்டிற்கு ஒரு வித பயத்துடனே சென்றான்.

சதாவும் தியாவும் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருக்க தான் வந்ததும் அமைதியாகவும் பேபி என்று அவள் அருகில் வந்தவனை கை நீட்டித் தடுத்தவள் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் உங்க ரூமுக்கு போயிட்டுப் பேசலாம் என்று அவனை அழைத்து சென்றாள்.

தாத்தா தருணைப் பார்த்துக்கோங்க நான் பேசிட்டு வந்துடுறேன் என்று அவள் கூறவும் அபிக்கு பீதியானது. இங்கு வீட்டிற்குள் அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க அவர்களிடம் பேசாமல் விடுவிடுவென்று முன்னால் சென்று விட்டான்.

அவனை தொடர்ந்து கொண்டே அங்கு இருந்தவர்களைப் பார்த்து சிரித்து கண்ணடித்து விட்டு அவன் வேகத்துக்கு ஈடுக் கொடுத்து வேகமாக நடந்தாள்.அங்கிருந்தவர்களுக்கு அப்பொழுதுதான் மூச்சே வந்தது.

அறையில் நுழைந்தவன் அவள் உள்ளே வந்ததும் கதவை சாத்தியவன் அவளை கட்டிப் பிடித்துக் கொண்டு பேபி உனக்கு எல்லாம் தெரியும்னு நினைச்சு தான் நான் எதும் சொல்லல..நான் உன்கிட்ட உண்மையை மறைக்கல பேபி தாத்தா சொல்லிட்டத சொன்னாங்க..என்ன விட்டுப் போயிடாத பேபி ப்ளீஸ் நீ இல்லைனா என்னால இருக்க முடியாது என்று தன்னை கட்டிப் பிடித்துக் கொண்டு கூறும் கணவனை கண்டு அவளது மனம் காதலில் உருகியது…

அவனிடம் கொஞ்சம் விளையாண்டுப் பார்க்க நினைத்தவள் அவனை தன்னிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்தவள் ஜன்னலோரம் சென்று நின்றுக் கொண்டு வந்த சிரிப்பைப் படாதப்பாடுப் பட்டு அடக்கினாள்.

அதை தாங்க முடியாதவன் பேபி என்று அவளைப் பின்னால் இருந்து அனைத்துக் கொண்டவன் அவள் முதுகில் முகம் புதைத்துக் கொண்டு தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் கூறினான்..அவன் கூறியது அனைத்தும் சதாசிவம் சற்று முன்பு அவளிடம் கூறியது தான் ஆனால் லதாவிற்கு இருந்த குடிப் பழக்கமும் ஹர்ஷி தனக்கு பிறந்த மகள் இல்லை என்றதும் புதிய விஷயம்.

அவள் தான் பெற்ற மகள் என்றும் பாராமல் விட்டுட்டுப் போயிட்டா.. எப்படியும் எதாவது ஆசிரமத்துல வளருவதற்கு என் மகளா என் கிட்டயே இருக்கட்டும்னு தான் அவக்கிட்ட நானும் ஹர்ஷாவும் போய் பேசினோம்..

பேபி ப்ளீஸ் என்னை விட்டுப் போகாத.. என் மேல உனக்கு கோபமா என்றதும் ஆமா என்கவும் ரௌத்திரம் ஆனவன் ஏய் நான் இவ்ளோ சொல்றேன் புரியாம பேசுற.. புரிஞ்சிக்கோ டி என்று தன் பக்கம் அவளைத் திருப்பினான்.

டிவோர்ஸ் ஆனது தெரிஞ்சா அந்த லதா ஹர்ஷிய கேட்டு கோர்ட்ல கேஸ் போட்டுடுவான்னு நீங்க பின்வாங்க கூடாதுன்னு தான் தாத்தா மறைச்சாராம் என்றதும் யாரு பொண்ண யாரு கேட்கிறது என்று கத்தியவள் அவ என் பொண்ணு நமக்கு ரெண்டு பேருக்கு மட்டும் தான் பொண்ணு எவ வந்தாலும் நான் பார்த்துக்கிறேன் என்று ஆக்ரோஷமாகக் கூறியவளை பேபி என்று அழைத்தான்.

என்ன பேபி பேதின்னு இழுத்துட்டு இருக்கீங்க அந்த கேடு கெட்டவ விட்டுட்டு போனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க.. உங்களைப் போல ஒருத்தர் கூட வாழ அவளுக்கு குடுத்து வைக்கல.. இவ வேணான்னு தூக்கிப் போடுறதுக்கும் வேணும்னு எடுத்து மாட்டிக்கிறதுக்கும் இது என்ன சட்டையா..

என்னை மன்னிச்சிட்டியா தியா என் மேல கோபம் இல்லையே என்றதும் அவனை மெத்தையில் அமர வைத்து கீழே மண்டியிட்டவாரு அவனை பார்த்து அமர்ந்தவள் மாமா டிவி ல பார்த்தப்போ அதிர்ச்சியா தான் இருந்துச்சு..

அப்போன்னு பார்த்து தாத்தா வரவும் அவருக்கு தெரிஞ்சா உங்களை எதாவது தப்பா நினைச்சிட்டாருன்னா என்ன பண்றதுன்னு தான் தாத்தாவ அழைச்சிக்கிட்டு அந்த வீட்டுக்குப் போனேன்.அங்க போனதும் தான் தெரியுது தாத்தாக்கும் இந்த விஷயம் ஏற்கனவே தெரிஞ்சிருக்கு அவர் எனக்கு சமாதானம் சொல்றாரு..

அபி நல்லவன் வல்லவன் நாலும் தெரிஞ்சவன்னு கதை சொல்றாரு..பேபி அப்போ என் மேல எதும் கோபம் இல்ல தானே என்று கேட்டதும் நான் ஏற்கனவே இதுக்கு பதில் சொல்லிட்டேன் மாமா..ஆனா உங்க மேல எனக்கு ஒரு விஷயத்துல கோபம் இருக்கு என்றவளைப் பார்த்து என்ன பேபி என்று பாவமாக முகத்தை வைத்துக கொண்டு கேட்டான்.

அவ எப்படி உங்களை ஆண்மை இல்லாதவன்னு சொல்லுவா.. நீங்க அவளை அப்படியே விட்டுருக்கக் கூடாது. போனது போகட்டும் விடுங்க இனிமே என் புருஷனை யாராவது எதாவது சொல்லட்டும் அப்புறம் இருக்கு அவங்களுக்கு என்று எழுந்தவளை கையை பிடித்து இழுத்து மெத்தையில் தள்ளியவன் அவள் மீது படர்ந்தான்..

இவள் வாய் சும்மா இருக்காமல் வேண்டுமென்றே மாமா ஹர்ஷி அத்தை கிட்ட இருக்கா நான் போய் பார்த்துட்டு வரேன் என்று அவனை தள்ள.. அதெல்லாம் அவளை அம்மா பார்த்துப்பாங்க நீ என்னை கவனி டி என்றவனை முறைத்தவள் அவன் தாடையைக் கடித்து ஹுக்கும் அதான் நைட் எல்லாம் கவனிச்சுட்டு தானே இருக்கேன்..

அப்படியே ஒன்னும் செய்யாதது போல தான் மேல உருளுவீங்க என்று அலுத்துக் கொண்டவளை என்ன டி ரொம்ப சலிச்சுக்குற என்று அவள் நெஞ்சில் முகம் புதைத்தவன் கொத்து சதையைக் கவ்வ ஆஹ் மாமா..என்று உணர்ச்சிப் பெருக்கில் துடித்தவள் அவனை கட்டி அனைத்துக் கொண்டு அவன் காது மடலைக் கடித்தாள்.

லவ் யூ.. லவ் யூ..லவ் யூ பேபி என்று முத்த மழைப் பொழிந்து முகத்தை ஈரமாக்கியவன் பரபரவென சேலையை அவிழ்த்து இரவிக்கையை உறுவி அவள் உடல் முழுவதும் முத்தம் அர்ச்சனை செய்து தன் பேபி புராணம் பாடிக் கொண்டிருந்தான்…

வாழ்வு சிறக்கும்...

வாழ்வு - 30:

அபி தன் தியாவிற்கு சர்ப்ரைஸ் குடுப்பதற்காக அனைத்தையும் விரைவாக முடித்தவன் அடுத்த வெள்ளியன்று சம்பிரதாயத்திற்கு பால் மட்டும் காய்ச்சி பிள்ளைகளை அழைத்து வந்து விடலாம் என்ற முடிவில் இருந்தான். தியாவும் தனக்கு சர்ப்ரைஸ் தெரிந்து விட்டது என அவனிடம் காட்டிக் கொள்ளவில்லை... அவன் வருத்தப் படுவான் என்று எதுவும் அவனிடம் கேட்கவும் இல்லை...கடைக்கு செல்ல கிளம்பியவனை மாமா வரும் போது சாக்லேட் வாங்கிட்டு வாங்க என்றதும் அவன் கண்கள் மின்னியது.

அதை பார்த்தவள் இப்படி எல்லாம் ரியாக்ஷ்ன் குடுத்தீங்க நசுக்கிடுவேன் என்று கையைக் கொண்டு போனாள். சட்டென்று விலகியவன் நீ செஞ்சாலும் செய்வ டி.. உன்னை நம்ப முடியாது என்று விலகியவனை பிடித்து இழுத்து சாக்லேட் வாங்கி வந்து என்ன பண்ண போறீங்க எதோ பிளான் போட்டுட்டீங்க என்றதும் கரெக்ட்டா கண்டுப் பிடிச்சிட்ட என்று அவள் கன்னத்தைக் கிள்ளியவன் தருணை நைட் அம்மா கிட்ட விட்டுடு என்று அவளைப் பார்த்துக் கண்ணடித்து விட்டு கிளம்பினான்.

அன்று மதியம் அபிக்கு கால் வரவே எடுத்துப் பேசியவன் உடனே வீட்டுக்குக் கிளம்பினான்.வரவேற்பரையில் கண்கள் கலங்க நின்று கொண்டிருந்த தியாவை தன்னுடன் அணைத்துக் கொண்டு என்னடா ஆச்சு என்றதும் மாமா என்று தேம்பியவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டு நாம ரூம்ல போய் பேசலாம்.

வா இப்போ தாத்தாவ போய் பார்த்துட்டு வந்துடலாம் என்று சதாசிவம் இருந்த அறைக்கு 
அவளை அழைத்து சென்றான்.. தலையில் கட்டுடன் கண்கள் மூடிப் படுத்திருந்தவரைப் பார்த்தவன் அருகில் இருந்த தன் தாத்தாவைப் பார்த்தான். வலி நிவாரணி குடுத்திருக்கிறதால இப்போ தான் அபி தூங்கினான் என்றதும் சரி தாத்தா பார்த்துக்கோங்க இதோ வந்துடுவோம் என்று தங்கள் அறைக்கு அழைத்து சென்றான்.

மெத்தையில் தியாவை அமர வைத்தவன் சொல்லு பேபி என்னாச்சு ஏன் உன் அண்ணன் வந்தான் என்றதும் மாமா என்று அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதுக் கொண்டு எனக்கு பயமா இருக்கு மாமா அவன் இன்னைக்கு நானும் தாத்தாவும் பிள்ளைங்க கூட இருந்தப்போ வந்தான். தாத்தா கிட்ட வந்து பணம் கேட்டான் அதுக்கு அவர் என் கிட்ட பணம் எதும் இல்லை நீ என் கிட்ட எதும் குடுத்து வைக்கலையே என்று கேட்டதும் தர முடியுமா முடியாதா என்று தாத்தாவை தள்ளிவிட்டதும் அவருக்கு அடிப் பட்டு இரத்தம் வரவும் பயந்து ஓடிட்டான்.

எனக்கு ரொம்ப பயமா இருக்கு அத்தான்.. பழசெல்லாம் நியாபகம் வருது என்று உடல் நடுங்க கூறியவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டவன் எனக்கு எல்லாம் தெரியும் பேபி தாத்தா சொன்னாங்க என்றதும் விலுக்கென்று நிமிர்ந்துப் பார்த்தாள். அவளைப் பார்த்து ஆமோதிப்பாகத் தலையை அசைத்தவன் தன்னிடம் சதாசிவம் கூறியதை அவளிடம் பகிர்ந்துக் கொண்டான்.

அபி அவரிடம் பிள்ளைகளுக்கு வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன் என்று கூறியதுமே அடுத்த நாள்
சந்தியா பேரில் எழுதி வைத்த சொத்துப் பத்திரங்கள் அனைத்தையும் அவனிடம் கொடுத்தவர் அபி இதை வச்சுக்கோ இதுக்கு மேல என்கிட்ட இருக்க அவசியமில்லை என்றவர் சந்தியாவோட பாதுகாப்புக்காக தான் அவ பேருல அத்தனை சொத்தையும் எழுதி வச்சேன்... என்றதும் தன்னை யோசனையாய் பார்த்தவனை கண்டு கடந்த காலத்தில் நடந்தவை அனைத்தையும் கூறினார்.

ஏழு வருடங்களுக்கு முன்பு சந்தியா பத்தாவது தேர்வு எழுதி முடித்திருத்த சமயம் அது.. ஊதாரியாக ஊர் சுற்றிக் கொண்டிருந்த சந்தியாவின் அண்ணன் வினோத் ஒரு நாள் வந்து தன் அம்மா அப்பாவிடம் சந்தியாவை ஒரு வீட்டில் வேலைக்கு அழைக்கிறார்கள் என்றும் மாதம் பத்தாயிரம் சம்பளம் என்று கூறவும் நான் போறேன் அண்ணா என்று ஒத்துக் கொண்டாள்.

அவளுக்கு தெரியவில்லை இந்த மூன்று குள்ள நரிகளும் தன்னை சிறு பெண் என்றும் பாராமல் ஒரு பெரியவருக்கு விலை பேசி இருப்பது.. மூவரும் கூட்டு சேர்ந்து தங்கள் வறுமையைப் போக்க இந்த சிறு பெண்ணை அந்த பெரியவரிடம் அடமானம் வைக்க திட்டம் தீட்டினர். வினோத்திடம் இப்படி உருக்கமா பேசு ஒத்துக் கொள்வாள் என்று ஐடியா கொடுத்ததே சந்தியாவின் பெற்றோர் தான்.

அன்று இரவு மூவரும் பேசுவதைக் கேட்டுப் பயந்து அழுதவள் தன் தாயா இப்படி என்று நினைத்துக் கொண்டு அழுதவள் எப்படியாவது இவங்க கிட்ட இருந்து தப்பிச்சிடனும் என்று யோசித்தவள் அன்று இரவே அவர் தூங்கியதும் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விட்டாள்.
S
அப்படி ஓடி வருகையில் தான் நாய் துரத்தவும் பயந்தவள் ஓடு சந்தியா அந்த நாயிக்கிட்ட போய் சிக்கி சீரழியிரத விட இந்த நாயிக்கிட்ட கடி வாங்கி சாகலாம் என்று தன்னால் முடிந்த வரை ஓடியவள் எதிரே வந்த பைக்கை கவனிக்கவில்லை அவனும் இந்த பெண் ஏன் இப்படி ஓடி வருது என்று யோசித்துக் கொண்டே வந்தவன் சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.

அவள் தடுக்கி விட்டு விழவும் ஹே பாப்பா யாரு நீ என்று அவளை தூக்கி விட்டான்.அண்ணா அண்ணா என்று பயத்தில் அழுதவளுக்கு பக்கத்தில் இருந்த கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கியவன் அவளிடம் கொடுத்தான். அழாத பாப்பா என்ன ஆச்சு என்று கேட்கவும் நாய் துரத்திட்டு வந்துச்சு அண்ணா அதான் பயந்துட்டேன் என்று கூறி அழவும் அவள் கையில் இருந்த அவள் துணி அடங்கிய பையைப் பார்த்து என்ன என்று கேட்கவும் அது என்று தயங்கியவளின் முகம் வேதனையில் சுருங்கியது.

என்ன பாப்பா ஆச்சு என்று கேட்கவும் வலிக்குது என்று கூறவும் அவள் போட்டிருந்த பாவாடை இரத்தத்தில் நனைந்தது.. ஹே வா ஹாஸ்பிட்டல் போகலாம் என்கவும் ம்ஹம் நான் வரலை அங்க ஊசிப் போடுவாங்க என்று பாவமாகக் கூறியவளைப் பார்த்து சிரித்தான்...

சரி வா என்றவன் தன் பைக்கில் அமர வைத்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றான்.. ஒரு சிறு பெண்ணை அழைத்துக் கொண்டு வந்த தன் பேரனை கண்டு யாருப்பா இந்த பொண்ணு தான் பார்த்ததைக் கூறவும் வா மா இங்க வந்து உட்காரு என்று அவளிடம் பேசியவர் அனைத்து விஷயங்களையும் கறந்து விட்டார்.

தன் வீட்டார் செய்ததை அவள் கூற ச்சே இப்படியும் மனுஷங்க இருக்காங்களா என்று தன் மனதில் நினைத்துக் கொண்டே அவள் காலில் இருந்த காயத்திற்கு மருந்திட்டவன் சரி பாப்பா நீ இங்கேயே இருக்கியா எங்க தாத்தா கூட உதவியா இரு என்றதும் பயத்துடன் பார்த்த வளை எங்களை நீ நம்பலாம் என்றதும் தலையாட்டியவளை நீ என்ன Uடிச்சிருக்க என்று கேட்டான்.

நான் பத்தாவது பரீட்சை எழுதி இருக்கேன் அண்ணா என்றதும் மேல படிக்கிறியா நான் படிக்க வைக்கிறேன் என்றதும் சந்தோஷத்துடன் சரி என்று தலையாட்டினாள். இரண்டு நாள் கழித்து வினோத் இவளைக் கண்டுப் பிடித்து அர்ஜூன் வீட்டிற்கு வர அவனை என்னப்பா உனக்கு வேணும் அவ எங்க வீட்டுப் பொண்ணு உன் வேலையைப் பார்த்துட்டுப் போ என்றதும் என்ன பெருசு என்று அசிங்கமாக பேசவும் உள்ளே இருந்து வந்த அர்ஜுன் அவன் சட்டையைப் பிடிக்கப் போக பிரச்சனை வேண்டாம் அஜி என்றவர் அவன் கூட சண்டைப் போட்டு நம்ம தரத்தை ஏன் நாமளே குறைச்சிக்கனும் என்று கூறியவர் சந்தியா எங்க வீட்டுப் பொண்ணு என் பேரனோட மனைவி என்கவும் அங்கிருந்த மூவருமே அதிர்ந்தனர் ஒவ்வொரு வகையில்.. அப்போ மைனர் பொண்ண ஆசைக் காட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டதா நான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் குடுப்பேன் என்று மிரட்டினான்.

பின் யோசித்தவர் நாளைக்கு வா நீ கேட்கிறது கிடைக்கும் என்று அவனை அனுப்பி வைத்தவர் தன்னை அதிர்ச்சியாகப் பார்த்த இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றவர் நான் இந்த முடிவ எடுத்ததுல உங்களுக்கு என் மேல கோபம் இருக்கும்... உங்க ரெண்டு பேரோட எதிர்காலத்தை யோசிச்சு தான் இந்த முடிவை எடுத்தேன்.

என்னை விட்டா அர்ஜுனுக்கு வேற யாரும் இல்லை.. நான் நல்லா இருக்குறப்பவே ஒரு நல்லது பண்ணி வச்சிட்டா நான் நிம்மதியா இருப்பேன் என்று கூறியவர் சந்தியாவிடம் திரும்பி பாப்பா இந்த தாத்தாவை நம்பு டா அர்ஜூன் நல்ல பையன் கடைசி வரைக்கும் உனக்கு நல்ல துணையா இருப்பான்... தாத்தா உன் நல்லதுக்கு சொல்வேன் என்றதும் பொம்மை போல் தலையாட்டினாள்.

பின் இருவருக்கும் திருமணம் முடித்து விட்டு வினோத்தை அழைத்து ஐந்து ஏக்கர் நிலப் பத்திரத்தை அவனிடம் கொடுத்தவர் இனிமே உனக்கும் சந்தியாவுக்கு எந்த உறவும் இல்லை நீயோ உன் அப்பா அம்மாவோ யாரும் சந்தியாவைத் தேடி வரக் கூடாது என்று கூறி அனுப்பி விட்டார். அவன் பத்திரத்தைப் பார்த்ததும் வாயெல்லாம் பல்லாக வாங்கிக் கொண்டான்.

பின் ஆரம்பத்தில் சந்தியா அர்ஜூனை அண்ணா என்று அழைக் அத்தான் சொல்லு என்று சதாசிவம் மாற்றினார். அவளை படிக்க வைத்து அவள் பி.ஏ முதலாம் ஆண்டு படிக்கவில் தான் இவளிடம் போன் பேசிக் கொண்டே வந்த அர்ஜூன் எதிரே வந்த லாரியை கவனிக்கவில்லை.. அவன் இருசக்கர வாகனத்தில் இடிக்க தூக்கி எறியப் பட்டு அந்த இடத்திலே உயிரை விட்டான்.

இன்று....

பேபி பழசை நினைச்சுக் கவலைப் படாதடா நான் பார்த்துக்கிறேன் கவனிக்கிற விதத்துல கவனிச்சா அவன் ஏன் இனி நம்ம வீட்டுப் பக்கம் வரப் போறான். நான் பார்த்துக்கிறேன் நீ நிம்மதியா இரு டா என்றவன் சாப்டியா என்று கேட்டவன் அவள் இல்லை என்று தலையை ஆட்டியதும் கீழே சென்று சாப்பாடு எடுத்து வந்தவன் அவளுக்கு ஊட்டித் தானும் சாப்பிட்டு அவளை தூங்க வைத்து விட்டுக் கீழே சென்றான்.

கீழே சென்று சதாவைப் பார்த்து விசாரித்து விட்டுச் சிறிது நேரம் பேசிவிட்டு சந்தியாவின் ஊருக்குக் கிளம்பி சென்றான். அங்கு சென்றதும் அவள் வீட்டுத் திண்ணையில் கால் மேல் கால் போட்டு வானத்தைப் பார்த்தவாரு படுத்திருந்தவனை எட்டி உதைத்தான்.கீழே விழுந்த வினோத் எவன்டா அவன் என்னையே எட்டி உதைச்சது என்று எழுத்து நின்றவனை அவன் கையை மக்கிப் பிடித்துக் கொண்டு காலால் எத்து விட்டான்.

அவன் அடியில் ஆ... என அலறியவனின் சத்தம் கேட்டு அவன் பெற்றோரும் மனைவியும் பிள்ளைகளும் வெளியில் ஓடி வந்தனர். ஏய் யாருப்பா நீ எதுக்கு என் பிள்ளையை அடிக்கிற என்று அவன் தந்தை கேட்க வினோத்தின் சட்டைக் காலரை இடது கையால் பிடித்துக் கொண்டு வலது கையால் அவன் மூக்கில் குத்திக் கொண்டே நான் சந்தியாவோட புருஷன் என்றதும் அனைத்தும் விளங்க அந்த ஓடுகாளி இப்போ உன் கூட இருக்காளா என்று அசிங்கமாகப் பேசவும் வினோத்தை விட்டவன் அவன் தந்தையைக் கண்டபடி அடித்தான்.

வினோத்தின் தந்தை அபி அடித்த அடியில் மயங்க வினோத்தின் மீது அவன் கவனம் திரும்ப கீழே விழுந்துக் கிடந்தவனை தூக்கியவன் அடிக்கப் போக அவன் கால்களைப் பிடித்துக் கொண்பிள் வினோத்தின் மனைவி .அண்ணா இனி அவர் எதும் பிரச்சனை பண்ண மாட்டார் இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க என்கவும் சற்று தணிந்தவன் அந்த பெண்ணை பார்த்து நீ சொல்றதால இப்போ விட்டுட்டுப் போறேன்...

என் பொண்டாட்டியைப் பற்றி பேச உங்களுக்கு அருகதையே இல்லை இனி என் குடும்பத்துக்கு எதாவது தொல்லைக் கொடுத்தா இப்படி அடிக்கலாம் மாட்டேன் கூண்டோட கொளுத்திடுவேன் என்று மிரட்டியவன் கிளம்பி விட்டான்.

வாழ்வு சிறக்கும் ...


No comments:

Theme images by RBFried. Powered by Blogger.